ஐக்கிய நாடுகள் சபை அநாவசியமாக எமது விடயத்தில் தலையிட்டால் அதற்கு எதிராக களனியில் 25 தற்கொலைப் படைகளை தயார் செய்து வைத்துள்ளதாக பொது மக்கள் தொடர்பாடல் மற்றும் பொதுசன உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளை கௌரவமான அமைப்பாகக் கூறி தருஸுமன் தனது கையிலா காலிலா அறிக்கை எழுதினார் என மேர்வின் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார். எவரிடமும் மண்டியிடும் இனத்தைச் சேராதவர்களால் ராஜபக்ஷ் குடும்பம் என்றாலே அவர்களுக்கு அலட்சியம் எனத் தெரிவித்த அமைச்சர், அவர்கள் இருந்த ஊரில் வசித்து அவர்களிடம் அமைச்சராக உள்ளமைக்கு முதலில் தானே உயிர் தியாகம் செய்வேன் என மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அணீல் பிள்ளையை பெற்றுடுக்கும் தாயிடமா அல்லது மிருகத்திடமா தருஸுமன் பிறந்தார் எனவும் அமைச்சர் மேர்வின் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார். கண்டியில் இடம்பெற்ற இரத்த கையெழுத்து பெறும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
News:Yaalmuslim




Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment