Saturday, December 24, 2011

அரசாங்கத்திற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ரவூப் ஹக்கீம் புத்திமதி

Best Blogger Tips
அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெற்று வருகின்ற பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் நெகிழ்வு தன்மையை கடைப்பிடிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கம் - தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய இருதரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற வருகின்ற பேச்சு தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் புலிகளின் புலனாய்வுத்துறை தலைவர் கைது - மஹிந்தவை கொல்ல சதி

Best Blogger Tips
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் கொழும்பு பிரிவின் தலைவர் உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்கள் தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

பிரதான சந்தேகநபர் தெமட்டகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும், அப்போது சயனைட் உட்கொண்ட அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் மருத்துவர்களால் காப்பாற்றப்பட்டதாகவும் தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறை கூறியுள்ளது. 

கைது செய்யப்பட்டவர்களில் காவல்துறையின் முன்னாள் கண்காணிப்பாளரும் அடங்கியுள்ளார். 

மகிந்த ராஜபக்சவை தற்கொலைத் தாக்குதல் மூலம் கொலை செய்வதற்கு மூன்று திட்டங்களை கொண்டிருந்ததாகவும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட பலரையும் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணைகளின் போது அவர்கள் கூறியதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது. 

அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே மற்றும் அமைச்சர் மகிந்த விஜேசேகர ஆகியோர் மீதான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு இவர்களே திட்டமிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும், இவர்கள் எப்போது கைது செய்யப்பட்டனர் என்ற விபரத்தை கொழும்பு ஆங்கில நாளிதழ் வெளியிடவில்லை.

ஹமாஸ் - பதாஹ் சந்தித்துப் பேச்சு - இணங்கிச் செயற்படவும் முக்கிய தீர்மானம்

Best Blogger Tips
இஸ்ரேலின் மிரட்டலுக்கு இடையே ஃபலஸ்தீனில் ஐக்கிய அரசை உருவாக்க ஹமாஸும், ஃபத்ஹும் சம்மதம் தெரிவித்துள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் பதவி பிரமாணம் மேற்கொண்டு ஆட்சியில் அமரும் வகையில் அரசை உருவாக்க எகிப்து தலைநகரமான கெய்ரோவில் நடந்த பேச்சுவார்த்தையில் ஹமாஸ் தலைவர் காலித் மிஷ்அலும், ஃபத்ஹ் தலைவர் மஹ்மூத் அப்பாஸும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

Tuesday, December 20, 2011

அமெரிக்கா இதுவரை கண்டிராத அதிர்ச்சியை ஈரான் கொடுத்துள்ளது !

Best Blogger Tips
அமெரிக்காவின் அதி நவீன ஆளில்லா உளவுபார்க்கும் விமானம் ஒன்றை கடந்த வாரம் தாம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்தது. ராடர் திரையில் விழாமல் தன்னை உருமறைத்துக்கொண்டு பறக்கத்தக்க இந்த விமானம் தான் இருக்கும் இடத்தை வேறு இடத்தில் இருப்பது போன்ற பொய்யான தோற்றப்பாட்டையும் மேற்கொள்ள வல்லது.

Thursday, December 15, 2011

ஜனாதிபதியின் மகன் சட்டத்தரணியாக பதவியேற்பு

Best Blogger Tips
பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ இன்று பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க முன்னிலையில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான பஷில் ராஜபக்ஷ, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட பலரும் இந்நிகழ்வின் போது கலந்து கொண்டனர். நாமல் எம்.பியின் பெற்றோர் அவரை கட்டி தழுவியதுடன் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். இவரது சத்தியப்பிரமாணத்தின் போது மேலும் 250 பேர் சட்டத்தரணிகளாக பதவியேற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

அப்துல் ரவூப் இலங்கைத் தமிழருக்காக தீக்குளித்து 16 ஆண்டுகள்

Best Blogger Tips
தமிழ்நாடு திருச்சியில் 15.12.1995 அன்று தன்னையெரித்து ஈகைச்சாவடைந்த அப்துல் ரவூப் அவர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

1995ம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தின் போது யாழ். குடா நாடு மீதான பெரும் படையெடுப்பின்போது பல இலட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வினால் துயருற்ற அப்துல் ரவூப் அவர்கள் ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை எதிர்த்து தமிழ்நாட்டின் திருச்சியில் தீக்குளித்து ஈகைச்சாவடைந்தார். 

சமுதாயத்திற்காக கொடுக்க நினையுங்கள் - அப்துல் கலாம் உபதேசம்

Best Blogger Tips
சென்னையில் தொண்டு நிறுவனம் ஒன்று, `சகாய்-2011` என்ற திட்டத்தின் மூலம் புற்றுநோய் பாதித்த குழந்தைகளின் சிகிச்சைக்காக ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கு ரூ.20 லட்சமும், பிரேமவாசம் என்ற குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.20 லட்சமும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தலைமை தாங்கியதுடன், நிதியுதவிகளையும் வழங்கினார். 

கர்ப்பிணியான முஸ்லிம் சகோதரிக்கு எயிஸ்ட் இரத்தம் ஏற்றிய வைத்தியசாலை

Best Blogger Tips
இந்தியாவின் ஆந்திரா நெல்லூர் மாவட்டத்தில் அண்மையில்கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டிருந்தார் .அப்பெண்ணுக்கு இரத்தம் ஏற்றிய போது, எய்ட்ஸ் கிருமி (HIV) தொற்றிய இரத்தத்தை ஏற்றிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Thursday, December 8, 2011

க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகள் உடனடியாக வெளிவராது

Best Blogger Tips
நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இவ்வாரம் வெளியிடப்பட மாட்டாதென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Z புள்ளிகளை இடுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் பரீட்சை பெறுபேறுகளும் தாமதமாகவே வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Wednesday, December 7, 2011

ஒஸாமா கின்லேடன் குடும்பம் சவுதி அரேபியா செல்கிறது..?

Best Blogger Tips
பாகிஸ்தானில் தங்கி இருந்த அல்கொய்தா இயக்க தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த மே மாதம் அமெரிக்க அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த வீட்டில் இருந்த பின்லேடனின் மனைவிகள், குழந்தைகள் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். 

ஈரானில் கால்பதிக்க அமெரிக்காவின் புதுத்திட்டம்

Best Blogger Tips
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இருந்த அமெரிக்க தூதரகம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டது. இதனையடுத்து அவ்விரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் முற்றுமுழுதாக நின்று போயின. 

சமூகத்தை கட்டியெழுப்பும் ஊடகங்கள் - கலாநிதி யூசுப் அல் கர்ளாவி

Best Blogger Tips
 
ஊடகத் துறையில் கவனம் செலுத்த வேண்டியவர்கள் யார் என நீங்கள் கருதுகின்றீர்கள்?


இன்று தொடர்பூடகங்கள் மனிதனது சிந்தனையை, நம்பிக்கையை, உளப்பாங்கை கட்டியெழுப்புவதில் முன்னிலை வகிக்கின்றன. சமூகங்களை உருவாக்குவதற்கான அடிப்படைகளை ஊடகங்களே இடுகின்றன. எனினும், கவலைக்குரியவிடயம், முஸ்லிம்கள் - அதிலும் குறிப்பாக சமூகத் தலைவர்கள் - பள்ளிவாயல் கட்டுவதையும் ஸதகா செய்வதையுமே தமது வக்ப் சொத்தின் மூலம் நிறைவேற்ற முடியுமான அமல்கள் என்று நினைக்கின்றனர். மனிதர்களைக் கட்டியெழுப்பும் அல்லது சமூகங்களைக்கட்டியெழுப்பும் ஊடகத் துறையில் கவனம் செலுத்துவதை தேவையற்றது என்று எண்ணுகின்றனர்

பதவி உயர்த்தப்பட்ட நீதிபதிக்கு பொன்சேக்காவின் நெத்தியடி

Best Blogger Tips
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதவானாக பதவி உயர்த்தப்பட்டுள்ள தீபாலி விஜேசுந்தரவிற்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வாழ்த்து தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்ற நீதவானாக கடயைமாற்றி வந்த தீபாலி விஜேசுந்தர தற்போது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதவானாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

Tuesday, December 6, 2011

இஸ்லாத்திற்கெதிரான சிங்கள பேஸ்புக் - ஒன்றுபட்டு எதிர்ப்போம்

Best Blogger Tips
පෙරමුණේ රාළගේ අටුවාව (பெரமுன ராள லாகே அடுவாவ) எனும் பெயரில் ஒரு face book Open Group இருக்கிறது (லிங்க் கடைசியில் தரப்பட்டுள்ளது) அதில் முஸ்லிம்களையும் நமது கலாச்சாரங்களைய்யும் கேலி செய்வதல்லாமல் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களை கேலி செய்யும் காடூன்களையும் இட்டுள்ளான் (older post சென்று பார்க்கவும் ) ஆகவே இதை ரிப்போர்ட் செய்து பிளாக் பண்ணுவது நம் அனைவரினதும் பொறுப்பாகும் ஆகவே வாருங்கள் அனைவரும் சேர்ந்து இதை பிளாக் பண்ணுவோம்

பேஸ்புக், கூகுள் மத உணர்வுகளை புண்படுத்துகிறது - இந்தியா எச்சரிக்கை

Best Blogger Tips
பேஸ்புக், கூகுள் போன்ற சமூக வலைத்தளங்களில், மத உணர்வுகளை புண்படுத்துவது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விஷயங்கள் இடம் பெறுவது கவலை அளிக்கிறது. இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க, சம்பந்தபட்ட நிறுவனங்கள், சுயகட்டுப்பாட்டு முறையை செயல்படுத்த வேண்டும். இல்லையெனில், இதுகுறித்து விரிவாக ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கபில் சிபல்கூறியதாவது: பேஸ்புக், கூகுள் போன்ற சில சமூக வலைத் தளங்களில் மதஉணர்வுகளை புண்படுத்தும் வகையிலான செய்திகளும், கருத்துக்களும் இடம் பெறுகின்றன. இந்தியா போன்ற மிகப்பெரிய சமுதாயத்தை கொண்ட நாட்டில், விஷயம் தெரிந்த யாரும், இது போன்ற விஷயங்களை ஏற்க மாட்டர். எனவே, இந்த நிறுவனங்கள், இது போன்ற தகவல்களை வெளியிடுவதற்கு முன், சுய கட்டுப்பாட்டு முறையை செயல்படுத்தவேண்டும். இதற்காக, மீடியா சுதந்திரத்தில் நாங்கள் தலையிடுகிறோம் என கூறக் கூடாது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ, அதுபோன்ற விஷயங்களில் நாங்கள் ஒருபோதும் ஈடுபட்டது இல்லை. இதுகுறித்து சமீபத்தில் யாகூ, பேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் அதிகாரிகளை அழைத்து, அரசின் கவலையை தெரிவித்தோம். அப்போது, இதற்காக சில நடவடிக்கைகளை எடுக்கிறோம் என, கூறிச் சென்றனர். ஆனால், எழுத்துப்பூர்வமாக இதற்காக எந்த உறுதியையும் அவர்கள் அளிக்கவில்லை.

அமெரிக்காவில் பின்பற்றப்படுவது போன்ற நடைமுறை, இங்கு பின்பற்றப்படுவதாக, அவர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் உள்ள நடைமுறைகள் வேறு, இங்குள்ள நடைமுறைகள் வேறு என்பதை, அவர்கள் உணர வேண்டும். இதை, அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டே தெரிவித்துள்ளது. இதே நிலை தொடருவதை ஏற்க முடியாது. சம்பந்தபட்ட நிறுவனங்கள், உணர்வுப்பூர்வமான தகவல்களை வெளியிடுவதில் சுய கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். இல்லையெனில், இதுகுறித்துவிரிவாக ஆலோசித்து, நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, சில வழிகாட்டும் விதிமுறைகள் உருவாக்கப்படும். சம்பந்தபட்ட தகவல், எங்கிருந்து, யாரால் வெளியிடப்பட்டது என்பது பற்றிய விவரங்கள், வலைத்தள நிறுவனங்களிடம் கேட்கப்படும். குற்றம் செய்தோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கும், இந்த விதிமுறைகளில் வழி வகுக்கப்படும். பயங்கரவாதிகள், மின்னஞ்சல் மூலமாக தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளும்போது, அதுகுறித்த தகவல்களை கேட்டால், சில இணைய நிறுவனங்கள், அவற்றை தரத் தயங்குகின்றன. மேலும், சில நிறுவனங்கள் கோர்ட்டை நாடுகின்றன.

பொன்சேக்காவின் வாயை மூட தயார் - அமைச்சர் மேர்வின் கூறுகிறார்

Best Blogger Tips
சிறை வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவினால் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட முடியும் என்றால் அந்த வரப்பிரசாதங்கள் அனைத்து சிறை கைதிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என பொது சன உறவுகள் மற்றும் பொது மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். 

சரத் பொன்சேகா ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதை அரசாங்கத்தால் தடுக்க முடியாவிடின் அந்தப் பொறுப்பை தன்னிடம் விடுமாறும் தான் அதனை நிறுத்திக் காட்டுவதாகவும் மேர்வின் சில்வா அரசாங்கத்திடம் சவால் விடுத்துள்ளார். 

எல்லை தாண்டியதாம் - இந்திய குரங்கு பாகிஸ்தானில் கைது

Best Blogger Tips
பாகிஸ்தான் எல்லையை தாண்டிய இந்திய குரங்கு கைது செய்யப்பட்டு அங்குள்ள மிருகக்காட்சி சாலையில் அடைக்கப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லையில் பொதுமக்களும், தீவிரவாதிகளும் ஊடுருவி வருகின்றனர். அவர்களை இருநாட்டு ராணுவமும் கைது செய்து வருகிறது. ஆனால் தற்போது ஒரு அதிசயம் நடந்துள்ளது. 

Monday, December 5, 2011

தனியார் மருத்துவ பல்கலைக்கழகம் - S.P.

Best Blogger Tips
பல்கலைக்கழகங்களில் கலைப்பீடங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களுக்கு அவர்களது பாடநெறிக்கு மேலதிகமாக ஆங்கிலம், மும்மொழி, தகவல் தொழில் நுட்பம், சுற்றுலா, தாதியர், துணை மருத்துவர் ஆகியவற்றுக்கான சிறப்பு பட்டம் வழங்கவும் உயர்கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாடசாலைகள் 9ஆம் திகதி மூடப்படுகிறது

Best Blogger Tips
எதிர்வரும் 9ஆம் திகதியுடன் நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளும் மூன்றாம் தவணைக்காலம் முடிவடைந்து மூடப்படுகிறது. புதிய ஆண்டில் பாடசாலைகள் அனைத்தும் 2ஆம் திகதி திறக்கப்படும்.

கோடீஸ்வர பிச்சைக்காரர்

Best Blogger Tips
இந்தியாவில் தஞ்சையில் திருட்டு தொடர்பாக பிச்சைக்காரரிடம் சோதனையிட்டதில் சிக்கிய, 6.23 இலட்சம் ரூபாய்க்கு, அவர் வங்கி ரசீதுகளை காட்டி பணத்தை மீட்டுச் சென்றார். இது, பொலிஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா அலுவலக சாலை இரண்டாம் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் சமது, 55. இவரது மனைவி நூர்ஜஹான், 45. இந்த தம்பதிகள் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டவர்கள். இருவரும் சேர்ந்து ஒரே இடத்தில் பிச்சை எடுப்பதில்லை. காலத்துக்கு தகுந்தாற்போல் திருச்சி, சென்னை, ஏர்வாடி, நாகூர் போன்ற ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களில், விழாக்கள் நடக்கும் போது பிச்சை எடுக்கச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

ஐ.தே.க. தலைமை பதவியை கையேற்க தயார் - கரு அறிவிப்பு

Best Blogger Tips
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவுக்கு எதிர்கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளுமாறு உத்தியோகபூர்மாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த வேண்டுகோளை விடுத்தார்

பிச்சைக்காரர்கள் 12 பேரை கல்லால் அடித்து கொன்றவர் மாட்டினார்

Best Blogger Tips
பிச்சைக்காரர்கள் 12 பேரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கல்கிஸ்ஸை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஹெரோயின் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் ஊடாக பிச்சைக்காரர்கள் கொலையுடன் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 

ஒஸாமாவை உளவுபார்த்த விமானம் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டது

Best Blogger Tips
ஈரானிய வான்பரப்பில் உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது. அதி உயர் தொழில்நுட்பம் கொண்ட நவீன ஆர்.கியூ- 170 என்ற விமானமே இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

டைட்டானிக் கப்பல் விபத்தை தவிர்த்திருக்கலாம்..!

Best Blogger Tips
டைட்டானிக் கப்பலை மூழ்காமல் காப்பாற்றி இருக்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.  கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ந்தேதி டைட்டானிக்” என்ற பயணிகள் சொகுசு கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு புறப்பட்டு சென்ற அந்த கப்பலில் 2,223 பேர் பயணம் செய்தனர். 

Sunday, December 4, 2011

இஹ்வான் முஸ்லிமின்களின் 83 வருட கனவு - அல்லாஹ்வுக்கு நன்றி சொல்கிறது

Best Blogger Tips
எகிப்திய பாராளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்களிப்பில், இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி 40 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் அப்துல் முஆத் இப்றாஹிம் தெரிவித்துள்ளார். இவ்வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் தமது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் உத்தியோகபூர்வப் பேச்சாளரும் கட்சியின் தலைவருமான டொக்டர் முஹம்மது முர்ஸி தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பள விவகாரம் பூதாகரமாகிறது

Best Blogger Tips
கிரிக்கெட் வீரர்களுக்கு இன்னும் கொடுக்கப்படாதுள்ள சம்பளக் கொடுப்பனவுகள் விவகாரம் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுண்சிலான ஐசிசி கூறியுள்ளது.

உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்திய பின்னர், தாம் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால் தமது கிரிக்கெட் வீரர்களுக்கு மாதங்கள் கணக்கில் சம்பளம் கொடுக்கவில்லையென்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் கடந்த மாதம் பிபிசியிடம் கூறியிருந்தது.

சரத் பொன்சேக்காவை சட்டத்தரணியும் கைவிடுகிறார்

Best Blogger Tips
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் சார்பில் இனி வரும் காலங்களில் ஆஜராகப் போவதில்லை என சிரேஸ்ட சட்டத்தரணி நலின் லந்துவேஹெட்டி தெரிவித்துள்ளார். எனினும், வெள்ளைக் கொடி வழக்கு தொடர்பான மேன்முறையீட்டு வழக்கில் சரத் பொன்சேகாவின் சார்பில் லந்துவேஹெட்டி ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.