Saturday, July 2, 2011

நேட்டோ தாக்குதலை நிறுத்தாவிட்டால் ஐரோப்பாவை தகர்ப்போம்: கடாபி

Best Blogger Tips
லிபியாவில் வான்வழித் தாக்குதலை நிறுத்தா விட்டால் ஐரோப்பாவை தாக்குவோம் என லிபிய அதிபர் கடாபி எச்சரித்து உள்ளார்.
லிபியாவில் பொது மக்களை பாதுகாக்கவும் போராட்டக்காரர்களுக்கு உதவவும் நேட்டோ படைகள் முகாமிட்டு உள்ளன. இந்த பன்னாட்டுப் படையில் பிரான்ஸ், கனடா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நேட்டோ படைகள் லிபிய ராணுவ தளங்களை குறிவைத்து வான்வழித் தாக்குதலை நடத்துகின்றன.
இந்த நிலையில் கடாபியின் பல ஆயிரம் ஆதரவாளர்கள் தலைநகர் திரிபோலியின் கிறீன் சதுக்கத்தில் குவிந்தனர். அவர்கள் பச்சைக் கொடியை அசைத்தவாறு கடாபியை புகழ்ந்து கோஷம் போட்டனர்.
லிபிய தலைநகர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் தொலைபேசி வழியாக பேசினார். நேட்டோ படையினர் தங்களது வான்வழித் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் ஐரோப்பாவில் உள்ள அலுவலகங்கள், குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்துவோம் என கடாபி எச்சரித்தார்.
நேட்டோ படைகள் உடனடியாக விலகுவது அவர்களுக்கு நல்லது. இல்லையென்றால் விபரீத விளைவு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ராணுவ மையங்களை தகர்ப்பதற்காக லிபியாவில் வீடுகள், அப்பாவி பொது மக்கள் மீது நேட்டோ படைகள் தாக்கி வருகிறது என்றும் குற்றம் சாட்டினார்.
News:Lankasri

நோன்பு விடுமுறையை இரத்துச் செய்ய எடுக்கப்படவிருந்த தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது

Best Blogger Tips
நோன்பு விடுமுறையை இரத்துச் செய்யும் தீர்மானத்தை பல்வேறு மட்டத்தினராலும் இந்த முயற்சிக்குக் கடும் எதிர்ப்பு வந்ததையடுத்து அரசு கைவிட்டு விட்டதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார். கடந்த புதன் கிழமை கல்வியமைச்சில் நோன்பு விடுமுறையை இரத்துச் செய்யும் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது கல்விமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் நடைபெற்றுள்ள இக்கலந்துரையாடலில் முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பி.க்கள் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
முஸ்லிம் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டு வரும் நோன்பு கால விடுமுறையை இரத்துச் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிக்காட்டியதையடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது விரிவாக
நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் ஒரே காலத்தில் நடத்துவதற்கு ஏதுவாக முஸ்லிம் பாடசாலைகளுக்கு வருடாந்தம் வழங்கப்படும் நோன்பு கால விடுமுறையை இரத்துச் செய்யும் தீர்மானத்தை கல்வி அமைச்சு எடுக்கவிருந்தது.
முன்னாள் கொழும்பு மாநகர பிரதி முதல்வர் அசாத் சாலியூடாக இத்திட்டத்தை அரசு முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுகின்றது முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு நோன்புகால விடுமுறையை இரத்துச் செய்ய வேண்டும் என்று அவர் யோசனையை முன்வைத்துள்ளார் இக்கருத்தை அடிப்படையாக வைத்து கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்தை அறிவதற்கான அவசரக்கூட்டத்தைக் கூட்டியிருந்தார்.
இக்கூட்டத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.அஸ்வர், ஹுனைஸ் பாரூக் ஆகியோருடன் கல்வியமைச்சில் பணிபுரியும் முஸ்லிம் அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர். சமூகத்தின் கருத்தையும் நிலைப்பாட்டையும் பெற்றுக் கொள்ளாமல் நோன்புகால விடுமுறையை இரத்துச் செய்ய எடுக்கும் முயற்சியை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வும் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்கும் கடுமையாக ஆட்சேபித்துள்ளனர் என்று தெரியவருகின்றது .
முஸ்லிம் பாடசாலைகளுக்கு நோன்பு கால விடுமுறை நாடு சுதந்திரமடைவதற்கு முன்னர் 1942 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றது. எமது முன்னோர்களினால் அன்று பெற்றுக் கொள்ளப்பட்ட உரிமை இந்த உரிமையைப் பறிப்பதற்கு இடமளிக்க முடியாது. அத்துடன் இந்த முயற்சிக்கு எம்மவரே துணை போவது விசனத்தைத் தருகிறது என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சுட்டிக்காட்டி ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், கொழும்பிலும் நகர்ப்புறங்களிலும் உள்ள பாடசாலைகளுக்கு வாகனங்களில் போகும் மாணவர்களுக்கு நோன்பு ஒரு பிரச்சினையாக இல்லாத போதும் கிராமப்புறங்களில் பல மைல் தூரம் சென்று படிக்கும் மாணவர்களுக்கு நோன்பு பிடிப்பது கஷ்டமான காரியமாகும்.
இதனைக் கருத்திற்கொள்ளாமல் கொழும்பில் குளிரூட்டப்பட்ட அலுவலகங்களிலிருந்து முடிவெடுப்பதைக் கண்டிப்பதாகவும் அசாத் சாலி, பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் போன்றோர் இதற்கு துணை போயிருப்பதை முஸ்லிம் சமுகம் கடுமையாக எதிர்ப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார் என்றும் கிடைக்க பெற்ற தகவகள் தெரிவிக்கின்றது.
News:Lankamuslim

Friday, July 1, 2011

கோட்டாபய ராஜபக்ஸவின் புதல்வருக்கு நேற்று திருமணம் (படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் ஏக புதல்வருக்கு நேற்று திருமணம்.

கொழும்பு ஹில்ரன் ஹோட்டலில் வெகுவிமரிசையாக இடம்பெற்றது. 

மணமகன் தமிந்த மனோஜ் ராஜபக்ஸ 1982 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி பிறந்தவர். 

இவர் அமெரிக்காவில் உயர் கல்விகள் பயின்றவர். 

இந்தியாவுக்கு கடற்படை படகுகளை விற்கிறது இலங்கை

Best Blogger Tips
இலங்கைலிருந்து படகுகளை கொள்வனவு செய்வதற்கு இந்திய கடற்படை தீர்மானித்துள்ளது. இலங்கையைத் தளமாகக் கொண்ட கப்பல் நிர்மாண நிறுவனமொன்றிடமிருந்து  80 அதிவேக இடைமறிப்புப் படகுகளை சுமார் 300 கோடி இந்திய ரூபாவுக்கு வாங்குவதற்கு இந்திய கடற்படை தீர்மானித்துள்ளது. 

மும்பை தாக்குதல்களையடுத்து கரையோர ரோந்து நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்காக இப்படகுகளை வாங்கப்படவுள்ளன. இப்படகுகள் இந்திய கடற்படையின் புதிதாக அமைக்கப்பட்ட படைப்பிரிவான சாகர் பிராஹரி பால் மற்றும் அக்கடற்படையின் ஏனைய பிரிவுகளால் பயன்படுத்தப்படவுள்ளதாக இந்தய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையைத் தளமாகக் கொண்ட எனும் நிறுவனத்திடமிருந்து இப்படகுகளை வாங்குவதற்கான ஒப்பந்த நடைமுறைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் விரைவில் ஒப்பந்த நடைமுறைகள் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவ்வதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News:Yarlmuslim

தேசிய அடையாள அட்டை சர்ச்சை தொடர்பில் பிரதியமைச்சர் அப்துல் காதர்

Best Blogger Tips
தேசிய அடையாள அட்டைக்காக புகைப்படங்களில் முஸ்லிம்கள் தொப்பி மற்றும் ஹிஜாப் அணிந்த புகைப்படங்களை கொண்ட விண்ணப்பங்கள் நிராகரிக் கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக சுற்றாடல் பிரதியமைச்சர் ஏ. ஆர். எம். அப்துல் காதர் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜகத் வி. விஜேவீரவை சந்தித்துப் பேசியுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சில் இன்று முதலாம் திகதி விசேட கூட்டமொன்று நடத்தப்படும் என்று ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் தம்மிடம் கூறியதாகவும் பிரதியமைச்சர் ஏ. ஆர். எம். ஏ. காதர் தெரிவித்துள்ளார் விரிவாக
தேசிய அடையாள அட்டைக்காக முஸ்லிம்கள் தொப்பியோ அல்லது ஹிஜாப் மற்றும் முக்காடு அணிந்த புகைப்படங்களை சமர்ப்பிப்பது குறித்து முன்னொரு போதுமே சர்ச்சை எழுந்தது கிடையாது. பயங்கரவாதம் நிலவிய போது கூட இது பிரச்சினையாகவில்லை. நான் சுமார் 25 வருடங்களாகத் தொடராக பாராளுமன்ற உறுப்பினராக உள்ளேன்
ஆனால் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதி, சாமாதானத்தை ஏற்படுத்தியுள்ளார். அத்தோடு இன, மத, மொழி, பிரதேச பேதங்களைப் பாராது அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்றார். எமது ஜனாதிபதி ஒரு போதுமே இன ரீதியாக சிந்திக்காதவர் என்றும் இப்படியான நிலையில் தேசிய அடையாள அட்டைக்காக முஸ்லிம்கள் தொப்பி மற்றும் ஹிஜாப் அணிந்த புகைப்படங்களை சமர்ப்பிப்பதை சர்ச்சையாகி இருப்பது ஆச்சரியத்தையும் கவலையும் தருகின்றது என்றும்.
ஆகவே தற்போது எழுந்துள்ள இச் சர்ச்சையை நியாயமாகவும், சுமுகமாகவும் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். அவருடனான சந்திப்பு திருப்திகரமானதாக அமைந்திருந்தது. அதனால் இன்றைய விசேட கூட்டத்தில் திருப்திகரமான முடிவுகள் வெளியாகலாம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நீதியமைச்சர் ரவூப் ஹகீம் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகதிற்கு எழுத்துமூலம் அறிவிதுள்ளமையும் குறிபிடத்தக்கது.
News:Lankamuslim

முஸ்லிம் பாடசாலைகளுக்கு நோன்பு கால விடுமுறை ரத்து ?

Best Blogger Tips
முஸ்லிம் பாடசாலைகளுக்கு நோன்பு காலத்தில் வழங்கப்படும் விடுமுறையை ரத்துச்செய்வது குறித்து கல்வியமைச்சு ஆராய்வதாக தெரிவிக்கப்படுகிறது. நீண்ட காலமாக முஸ்லிம் பாடசாலைகளுக்கு நோன்பு காலத்தில் விடுமுறை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையிலேயே கல்வியமைச்சு முஸ்லிம் பாடசாலைகளுக்கான இந்த நோன்புகால விடுமுறையை ரத்துச் செய்வது குறித்து ஆராய்ந்துள்ளது.
கல்வியமைச்சில் நேற்று மாலை இதுகுறித்த முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுகின்றது கல்விமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் நடைபெற்றுள்ள இக்கலந்துரையாடலில் முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பி.க்கள் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர் என்றும் எதிர்வரும் நாட்களில் இவ்விடயம் தொடர்பில் கல்வியமைச்சு உலமா சபை பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளது. என்றும் தெரிய வருகின்றது.
News:Lankamuslim