Monday, October 31, 2011

யூசுப் கர்ளாவியின் யேமன், சிரிய தலைவர்கள் கொல்லப்படுவர் என்ற ஆருடம் பலிக்குமா?

Best Blogger Tips
புகழ்பெற்ற இஸ்லாமிய பிரச்சாரகரும் சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றியத்தின் தலைவருமான ஷெய்க் யூஸுப் அல் கர்ளாவி இஸ்லாமிய ஜனநாயக கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார். லிபியா, தூனிஸியா, எகிப்து ஆகிய நாடுகளை ஒன்றிணைத்து இதனை ஆரம்பிக்குமாறு அவர் வலியுறுத்தினார். சென்ற வாரம் கட்டாரில் இடம்பெற்ற குத்பாப் பிரசங்கத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், ‘‘கடாபி பூமியில் அட்டூழியம் புரிந்தார், கொலை செய்தார், மக்களை விரட்டியடித்தார், ஆயிரக்கணக்கானவர்களை காயப்படுத்தினார், அபூ ஸலீம் சிறைக் கைதிகள் 1200 பேரை ஏதும் நடக்காதது போன்று ஒரே இரவில் கொலை செய்தார்.

இன்றைய தினம் அல்லாஹ்வின் நாட்களில் ஒரு நாளாகும். தனக்கு தெய்வீக சக்தி உண்டு என்ற நினைப்பில் அரக்கத்தனம் புரிந்து கொண்டிருந்த ஒருவர் வீழ்ந்துபோன நாள் இது. கடாபி குறித்து நான் எதிர்வு கூறியபோது சொன்ன முதல் வார்த்தை கடாபி மக்களால் கொல்லப்படுவார் என்பதுதான். கடாபி தலைவராகவும், தத்துவ ஆசிரியராகவும் இருக்க விரும்பினார். தனக்கு ஒரு நூல் இருக்க வேண்டும் என விரும்பி பசுமை நூலை எழுதினார். இப்பொழுது எல்லாம் முடிந்துவிட்டது.

இதேபோல்தான் வரலாற்று ஆதாரங்களை வைத்து உறுதியாகச் சொல்கிறேன் - சிரியாவின் பஷர் அல் அஸதிற்கும், யெமனின் அலி அப்துல்லாஹ் ஸாலிஹிற்கும் கடாபிக்கு நேர்ந்த இதே கதிதான் நடக்கும்.

கடாபிக்குப் பின்னரான காலப்பகுதி குறித்துப் பேசும்போது, லிபிய மக்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும் என்றும் முன்னைய ஆட்சிக்கு ஒத்துழைத்தவர்களை பழிதீர்க்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார். லிபிய அரசு அவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் கர்ளாவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இறுதியாக லிபியா, தூனிஸியா, எகிப்தை உள்ளடக்கிய பிராந்திய கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற தனது ஆவலையும் வெளிப்படுத்தினார். ஒன்றுக்கொன்று தொடர்புள்ள இப்புரட்சித் தேசங்கள் தமக்கிடையில் ஒன்றிணைவதற்கான வாய்ப்புகளை அவசியம் ஏற்படுத்த வேண்டும். புரட்சிக்குப் பின்னர் விடுதலை பெற்றுள்ள நாடுகளிலுள்ள விசுவாசிகள் தமக்கிடையில் ஏன் ஒன்றிணையக் கூடாது என்ற தனது அபிலாஷையையும் அவர் அதில் வெளிப்படுத்தினார்.

ஹஜ் குர்பான்' - மாற்று மதத்தவர்களை அவமதிக்காதீர் என வேண்டுகோள்

Best Blogger Tips
ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஆடு, மாடுகளை அறுத்து குர்பான் கொடுக்க விரும்பும் முஸ்லிம்கள் மாற்று மதத்தவர்களுக்கு எதுவித இடையூறுகளையும் ஏற்படுத்தாது இஸ்லாமிய முறைப்படி அதை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா அனைத்து முஸ்லிம்களுக்கும் வேண்டுகோள்விடுத்துள்ளார். அவரது அமைச்சில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

ஒவ்வொரு வருடமும் ஹஜ் பெருநாளையொட்டி குர்பான் கொடுக்கும்போது சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இப்பிரச்சனைகைளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றால் இஸ்லாமிய முறைப்படி குர்பான் கொடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, மாற்று மதத்தவர்களுக்குத் தொல்லைகள் ஏற்படும் விதத்தில் ஆடு,மாடுகளை பொது இடங்களில் வைத்து அறுத்தல், அவற்றின் கழிவுகளைப் பொது இடகளில் வீசுதல், ஆடு, மாடுகளை சட்டவிரோதமாக எடுத்துச் செல்லுதல் போன்ற விடயங்கலால் தான் பிரச்சினைகள் வருகின்றன.

உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமான முறையில் ஆடு, மாடுகள் எடுத்துச் செல்லுதல் தடை செய்யப்பட்ட வேண்டும். உரிய ஆவணங்களுடன் ஆடு,மாடுகளை எடுத்துச் செல்லுகின்ற போது பொலிசார் இடையூறு விளைவித்தால் நான் தலையிட்டு அப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பேன்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் 072-3007300 என்ற தொலைபேசி இலக்கத்துடன் எனைத் தொடர்பு கொண்டாள் நான் அப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பேன். ஆனால், திருட்டுத்தனமாக ஆடு,மாடுகளை ஏற்றி வந்து சிக்கலில் மாட்டினால் நான் தலையிடமாட்டேன். குர்பான் கொடுப்பதை மாற்று மாற்று மதத்தவர்கள் யாரும் வெறுப்பதில்லை. குர்பான் கொடுக்கும் முறையைத்தான் எதிர்க்கின்றார்கள். இஸ்லாமிய முறைப்படி குர்பான் கொடுத்தாள் இந்தப் பிரச்சினை எதுவும் ஏற்படாது.

மாற்று மதத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும். அப்போதுதான் மாற்று மாற்று மதத்தவர்களும் முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பர் என்றார்.

முஸம்மில் நாளை கொழும்பு மாநகர மேயராக கடமைகளை பொறுப்பேற்கிறார்

Best Blogger Tips
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு கொழும்பு மாநகர சபை மேயராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட ஏ.ஜே.எம்.முஸம்மில் நாளை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார். அத்துடன் பிரதி மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ள டைடஸ் பெரேராவும் நாளை கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
இதனை முன்னிட்டு கொழும்பு நகர மண்டபத்தில் நாளை காலை 9.30 மணிக்கு விசேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபை தேர்தலில் மேயர் வேட்பாளராக போட்டியிட்ட ஏ.ஜே.எம்.முஸம்மில் 50,000 ற்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Sunday, October 30, 2011

கொக்கா கோலா பானம் (Coca Cola) குடிப்பவரா நீங்கள் எச்சரிக்கை!! (வீடியோ இணைப்பு)

Best Blogger Tips
கொக்கா கோலா பானம் (Coca Cola) சர்வதேச அளவில் பிரபல்யமான அனைத்து நாட்டவர்களும் அருந்தக்கூடிய ஒரு குளிர்பானம் என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆனால் அதில் சுவைக்காக பல இரசாயன பதார்த்தங்கள் உள்ளடக்கபட்டுள்ளமை அனேகமானவர்களுக்கு தெரிவதில்லை,

மாலைதீவிற்கு விபச்சாரத்திற்காக பெண்கள் ஏற்றுமதி

Best Blogger Tips
மாலைதீவிற்கு விபச்சாரத்திற்காக தனது மனைவியையே அனுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கூடவே விபச்சார தொழிலுக்கென இலங்கைப் பெண்களை மாலைத்தீவுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்த ஒரு குழுவினரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது 5 விபச்சார பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
.
மாதம் ஒன்றிற்கு இரண்டு, மூன்று பெண்கள் சுற்றுலா விசாவில் மாலைத்தீவுக்கு தொழிலுக்கென அனுப்பி வைக்கப்படுவதாகவும் அவர்கள் மலே நகரில் விபச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் மாலைத்தீவு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
.
இந்த ஏற்றுமதி தொழிலுடன் தொடர்புபட்ட சந்தேகநபர் ஒருவர் தனது 19 வயது மனைவியை விபச்சாரத்திற்கென மாலைத்தீவு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவருடன் சேர்த்து மேலும் 6 பேர் கைது ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

தனியார்பஸ் கட்டணம் அதிகரிக்கும்..!

Best Blogger Tips
பஸ் கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அரசாங்கம் டீசல் விலையை அதிகரித்துள்ளதால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டுள்ளதென அந்த சங்கத்தின் செயலாளர் அங்ஜன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார். 

டீசல் விலை அதிகரிப்பால் குறுந்தூரம் செல்லும் பஸ்களுக்கு நாளாந்தம் 600 ரூபாவும் நெடுந்தூரம் செல்லும் பஸ்களுக்கு நாளாந்தம் 1200 ரூபாவும் நட்டம் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதனால் உடனடியாக பஸ் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

பஸ் கட்டண அதிகரிப்பு குறித்து எதிர்வரும் புதன்கிழமை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார். 

2001 இல் அணுவாயுத ஏவுகணைகளை மேற்கு எல்லைநோக்கி இந்தியா நகர்த்தியது: கொண்டலீஸா ரைஸ்

Best Blogger Tips
2001 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பின் இந்தியா , அணுவாயுதங்களை ஏவக்கூடிய ஏவுகணைகளை தனது மேற்கு எல்லை நோக்கி நகர்த்தியதாக அமெரிக்காவின் முன்னாள் ராஜாங்க செயலாளர் கொண்டலீஸா ரைஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அமெரிக்கா கொடுத்த அழுத்தங்களுக்கும் இந்தியா பணிய மறுத்தாகவும் அவர் தெரிவித்துள்ளார். அக்காலத்தில் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் நிர்வாகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய கொண்டலீஸா ரைஸ், தனது அனுபவங்களை வைத்து 'No Higher Honor' என்ற தலைப்பில் எழுதியுள்ள நூலிலேயே இவ்வாறு கூறியுள்ளார். இந்நூல் அடுத்த வாரம் சந்தைக்கு வரவுள்ளது.
தெற்காசிய விவகாரம் தொடர்பாக அப்போது சி.ஐ.ஏ.வுக்கும் அமெரிக்கா இராணுவத் தலைமையகமான பெண்டகனுக்கும் இடையில் தெளிவான முரண்பாடுகள் இருந்தாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா யுத்தத்தை நோக்கிச் செல்வதாக சி.ஐ.ஏ. கூறியது எனவும் ஆனால் அதை பெண்டகன் மறுத்தாகவும் ரைஸ் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் பாஷையையே சி.ஐ.ஏ. பேசியது என்கிறார் கொண்டலீஸா ரைஸ். இந்திய தம்மை தாக்கத் தயாராகிறது என முழு உலகும் குறிப்பாக அமெரிக்கா நம்ப வேண்டும் என பாகிஸ்தான் கருதியது எனவும் அவர் கூறியுள்ளார்.

'ஆயுத மோதல் தவிர்க்கப்பட முடியாது, ஏனெனில் பாகிஸ்தானை தண்டிப்பதற்கு இந்தியா ஏற்கெனவே தீர்மானித்துவிட்டது என சி.ஐ.ஏ. நம்பியது. அநேகமாக இதுவே நாம் நம்ப வேண்டிய விடயம் என இஸ்லாமாபாத் கருதியது' என கொண்டலீஸா ரைஸ் கூறியுள்ளார்.
'அமெரிக்காவை பல தசாப்தங்களாக சந்தேகக் கண்ணுடன் பார்த்த நாடான இந்தியாவிலிருந்து சி.ஐ.ஏ.  பல வருடங்கள் தனிப்பட்டிருந்தது. 2001 ஆம் ஆண்டில் சி.ஐ.ஏ. அதிகமாக பாகிஸ்தானின் தகவல் மூலங்களில்; தங்கியிருந்தது'  எனவும் அவர் தனது நூலில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்கள் சொகுசு வாழ்க்கை அனுபவிக்கின்றனர்–சஜித்..!

Best Blogger Tips
அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்கள் சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வரும் அதேவேளை, பெரும்பான்மையான மக்கள் வறுமையில் வாடுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அம்பலாங்கொடை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



நாட்டின் அநேகமான மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் வெளிநாடுகள் வழங்கிய உதவிகள் மக்களுக்கு சென்று சேரவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு 15000 ரூபா மட்டுமே நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் அரசாங்க ஆதரவாளர்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தெல்வத்த பிரதேசத்தில் 2005ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவினால் சுனாமி அருங்காட்சியகமொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டதாகவும், இந்த அந்தக் கட்டடத்தின் பணிகள் அடிக்கல் நாட்டலுடன் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சுதந்திரமாக அரசியல் கூட்டமொன்றை நடத்துவது மட்டும் மனித உரிமையாக கருதப்பட முடியாது எனவும், பட்டினியின்றி வாழ்வதற்கான பின்னணியை ஏற்படுத்துதலும் முக்கிய மனித உரிமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து அரசாங்கம் பிரச்சாரம் செய்து வருகின்ற போதிலும் மக்கள் அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதில் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாகத தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 31க்கு முன்னர் சிம் அட்டைகளை பதிவு செய்ய வேண்டும்-பாதுகாப்பு அமைச்சு..!

Best Blogger Tips
சகல கையடக்க தொலைபேசி பாவனையாளர்களும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னதாக தாம் பயன்படுத்தும் சிம் அட்டைகளை பதிவு செய்ய வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. “இதுதொடர்பான சுற்று நிருபம் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் சகல கையடக்கத் தொலைபேசி இணைப்புச் சேவை வழங்குனர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என ஆணைக்குழுவின் தலைவர் அனுஷா பெல்பிட தெரிவித்தார். 
டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் தங்களது சிம் அட்டைகளை பதிவு செய்து கொள்ளாத வாடிக்கையாளர்களினது இணைப்பு துண்டிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.  புதிய சட்டத்தின் பிரகாரம் ஒரு தனிநபர் 5 சிம் அட்டைகளுக்கு மேல் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பெய்து வரும் கனமழையால் 5 லட்சம் மக்கள் பெரும் பாதிப்பு..!

Best Blogger Tips
இலங்கையில் பெய்து வரும் கனமழையால் 7 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5 லட்சம் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 18 வருடங்களுக்கு பின்னர், கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.கொழும்பில் 440.2 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது. இலங்கையின் ஊடாக செல்லும் காற்றின் அழுத்தம் அதிகாரித்ததன் காரணமாக 10 ஆம் திகதி மாலை 5 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை கொழும்பு, களுத்துறை, காலி, குருணாகல், ஹம்பாந்தோட்டை, கம்பஹா, இரத்தினபுரி கன மழை பெய்ததாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் காலநிலை அவதானி கயனா ஹெந்தவிதாரண தெரிவித்துள்ளார். 
கொழும்பு மாவட்டத்தின் கோட்டை, கொட்டாஞ்சேனை, செட்டித்தோட்டம்,புளுமென்டால், ஆமர் வீதி, பலாமரச் சந்தி, கிராண்ட்பாஸ், மாதம்பிட்டி,இரத்மலானை,  மொரட்டுவை, பாணந்துறை, பொரலஸ்கமுவ, கெஸ்பேவ, பிலியந்தல, மடபாத்த, போக்குந்தர, மகரகம, கடவன, ஜா‐எல போன்ற பிரதேசங்களில் வீதிகள் மற்றும் தொடரூந்து பாதைகள் என்பன நீரில் மூழ்கின. இதனை தவிர களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, வல்லாவிட்ட, இங்கிரிய, அகலவத்தை, பதுரெலிய, புளத்சிங்கள, ஹொரண, களுதுறை, பாதுக்க, பண்டாரகம, நாகொட ஆகிய பிரதேசங்களின் வீதிகளும் நீரில் மூழ்கியது. மேலும் இரத்தினபுரி, குருணாகல் மாவட்டங்களிலும் வீதிகள் நீரிழ் மூழ்கின. வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால், போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டன. 
இதேவேளை மழைக்காரணமாக கொழும்பு மாவட்டத்தில் 33 ஆயிரத்து 501 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. இவர்கள் 11 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பு நகரில் 3 முகாம்களும் கோட்டே பிரதேசத்தில் 8 முகாம்களிலும் இடம்பெயர்ந்தவர்கள் தற்காலிமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 2ஆயிரத்து 234 குடும்பங்களும், களுத்துறையில் 200 குடும்பங்களும்  மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்களால், நேற்று மாலை வரை கொழும்பு நகரின் பல பகுதிகளுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது. மேலும் கொழும்பு , கம்பஹா, களுத்துறை  மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு 20 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

கொழும்பு மாவட்டத்திற்கு 10 மில்லியன் ரூபாவும், ஏனைய இரண்டு மாவட்டங்களுக்கு தலா 5 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருள் மற்றும் நிதியுதவிகளை வழங்கவுள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  கொழும்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள 60 ஆயிரம் குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்குமாறு கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த  மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
News: Nitharsanam

ரெலிகொம் நிறுவனத்தில் இடம்பெற்ற 324.4 மில்லியன் ரூபா ஊழல் மோசடி குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை..!

Best Blogger Tips
ரெலிகொம் நிறுவனத்தில் இடம்பெற்ற 324.4 மில்லியன் ரூபா ஊழல் மோசடி குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஐ.பி.ரீ.வி தொழில்நுட்பத்தை கொள்வனவு செய்த போது இந்த மோசடி 
இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

குறிப்பிட்ட சிலர் திட்டமிட்ட வகையில் மேற்கொண்ட ஊழல் மோசடியினால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. சுங்கத் திணைக்கள சட்ட திட்டங்களுக்கு புறம்பான வகையில் ரெலிகொம் நிறுவனம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டு;ள்ளதாகவும், இதனால் 324.4 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொடுக்கல் வாங்கல் பற்றிய தரவுகளை புலனாய்வுப் பிரிவினருக்கு சமர்ப்பிக்குமாறு தனியார் வங்கியின் முகாமையாளர் ஒருவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






News: Nitharsanam

Saturday, October 29, 2011

தலைமைத்துவ போட்டியால் ஐ. தே. க. வுக்குள் பெரும் பூசல்

Best Blogger Tips
தலைமைத்துவ மாற்றம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் சர்ச்சையும் எதிர்ப் புகளும் பூதாகார மெடுத்துள்ளதாக கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1997லிருந்து நிலவிவரும் உறுதியற்ற தலைமைத்துவம் காரணமாக சரிவுகளை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமெனில் உடனடியாக தலைமைத்துவ மாற்றம் தேவை என கட்சியின் அதிருப்தி குழு தெரிவிக்கின்றது.
தலைமைத்துவ மாற்றம் தொடர்பில் உறுதியான முடிவொன்றை எடுப்பதற்காக கட்சி சம்மேளனத்தைக் கூட்ட வேண்டுமென இக்குழு சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய போன்ற பிரதித் தலைவர்களுக்கு வேண்டு கோள் விடுக்கிறது.

சர்வதேச நீதிமன்றில் சரணடைய தயார் - விமானம் கோருகிறார் கடாபியின் மகன்

Best Blogger Tips
லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் கடாபியின் மகன்களில் ஒருவரான சயீவ் அல் இஸ்லாம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் சரணடைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தன்னை லிபியாவின் தென் பகுதியிலுள்ள பாலைவனத்திலிருந்து வெளியேற்றுவதற்காக விமானமொன்று வேண்டும் எனவும் கேட்டுள்ளதாக லிபிய இடைக்கால கவுன்ஸிலின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹஜ் பெருநாள் உழ்ஹியா தொடர்பாக மேர்வின் சில்வா

Best Blogger Tips
ஹஜ் பெருநாள் தினங்களில் மாடுகளை அறுத்துப் பலியிடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதனை உரிய முறையில் நிறைவேற்றுங்கள். ஆனால் கன்றுக் குட்டிகள், பசுக்கள், எருமைகள் போன்றவற்றை அறுக்க வேண்டாம். இத்தினங்களில் குர்பான் செய்யப்படும் மாடுகளை வதை செய்யாமல் அறுத்து, முஸ்லிம்கள் தம்முடைய மார்கக் கடமையை மேற்கொள்ளலாம் என மக்கள் தொடர்பாடல், மக்கள் விவகார அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளாராம்

உலக பொருளாதாரத்தை ஸ்திரமானதாக நிறுத்திப்பிடிப்பது ஆசியாவே பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் ஜனாதிபதி ராஜபக்ஷ

Best Blogger Tips
பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக மேற்கு நாடுகள் அதிகளவில் முயற்சிகளை மேற்கொள்ளவில்லையென்று குற்றஞ்சாட்டியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சர்வதேச ஸ்திரத்தன்மைக்கு ஆசியா முக்கியமானதாக விளங்குவதாகக் கூறியுள்ளார். 
பொதுநலவாய வர்த்தக மாநாடு நேற்று பேர்த்தில் இடம்பெற்றபோது, கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்திருக்கிறார். வளர்ச்சியடைந்த நாடுகளில் வேலைவாய்ப்பின்மை அதிக மட்டத்தில் இருப்பதே வன்முறைகளுக்கு வழிவகுத்திருப்பதாகவும் அந்த குழப்பங்கள் ஏனைய பகுதிகளுக்கும் பரவுவதற்கான அச்சுறுத்தல்கள் காணப்படுவதாகவும் ஜனாதிபதி எச்சரித்திருக்கிறார். 

உல்லாசப் பயணிகளைக் கவரும் வகையில் மாத்தளை மாநகரம் அபிவிருத்தி மேயர் ஹில்மி முஹம்மத் கரீம் தெரிவிப்பு

Best Blogger Tips
உல்லாசப் பயணிகளைக் கவரும் வகையில் மாத்தளை நகரை அழகுபடுத்திடும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக மாத்தளை மாநகர மேயர் ஹில்மி முஹமமத் கரீம் தெரிவித்துள்ளார். 
மாத்தளை மாநகர சபைத் தேர்தலில் வெற்றிபெற்று மூன்றாம் முறையாகவும் மாநகர மேயராக பதவியேற்றதைத் தொடர்ந்து மாநகர முதல்வரின் நேரடி கண்காணிப்பில் மாத்தளை மாநகரை அழகுப்படுத்திடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உக்குவளை இராணுவ முகாமைச் சேர்ந்தோர், மாத்தளைப் பொலிஸார், மாநகர சபை ஊழியர்கள் நலன் விரும்பிகள் என பலர் இந்த பணியில் ஈடுபட்டுவருவதை அவதானிக்க முடிகிறது.
கடந்த காலங்களில் விசேடமாகத் தேர்தல்களில் மாத்தளை நகர முழுவதும் நகரின் சூழலுக்கு மாசு ஏற்படும் வகையில் ஒட்டப்பட்டிருந்த பெனர்கள், போஸ்டர்கள், கட்அவுட்கள், விளம்பர பதாகைகள் என்பன இராணுவத்தினரால் அகற்றப்பட்டு வருகின்றன. வடிகால்கள் அனைத்தும் முழுமையாக சுத்தப்படுத்தப்படுகின்றன. 
இனிவரும் காலங்களில் மாத்தளை நகரில் கண்ட கண்ட இடங்களில் போஸ்ட்டர்கள், பெனர்கள், விளம்பர பதாகைகள் தொங்கவிட முடியாது. இதற்கென மாத்தளை நகரில் சில இடங்கள் ஒதுக்கப்படும். அந்த இடங்களைத் தவிர வேறு இடங்களில் போஸ்ட்டர்கள், விளம்பரங்கள் ஒட்டப்படுவதுink முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இத்தடை உத்தரவை மீறி செயற்படுவோர் மீது தராதரம் பாராது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென மாத்தளைப் பொலிஸாருடன் இணைந்து செயற்படவென ஒரு கண்காணிப்புக்குழுவை இயங்க வைக்கவுள்ளோம். 
எதிர்வரும் டிசம்பர் மாத முடிவுக்குள் இச்சுத்திகரிப்புப் பணிகள் முடிவடைவதுடன் மாநகர அபிவிருத்திப்பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் ஹில்மி கரீம் மேலும் தெரிவித்தார்.


News: Thinakural

பேஸ் புக்' மூலம் சட்ட விரோத செயற்பாடு கடந்த 10 மாதத்தில் ஆயிரம் முறைப்பாடுகள்

Best Blogger Tips
பேஸ் புக்' சமூக வலைத்தளத்தின் மூலம் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பாகக் கடந்த 10 மாதக் காலப்பகுதியில் 1000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கணினி அவசர பொறுப்புக் கூறல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
போலியான தகவல்களை கொண்டு "பேஸ் புக்' கணக்குகளை வைத்திருத்தல் மற்றும் அடுத்தவரின் அனுமதியின்றி அவர்களின் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளல் தொடர்பாகவே அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்தக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது தவிர சட்டவிரோதமான முறையில் இரகசிய குறியீட்டு இலக்கங்களைத் தெரிவித்துக்கொண்டு அந்த கணக்குகளுக்குள் ஊடுருவல் மற்றும் கப்பல் பெற முயற்சித்த சம்பவங்கள் தொடர்பாகவும் அந்தக் குழுவினருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாகத் தொடர்ந்தும் முறைப்பாடுகளை கிடைத்துக்கொண்டிருப்பதாகவும் முøற்பாடுகள் தெரிவிப்போர் பொலிஸாரிடமும் தெரிவிக்க முடியுமெனவும் கணினி அவசர பொறுப்புக் கூறல் பிரிவு தெரிவித்துள்ளது.


News: Thinakural

பிரபாகரனை பிடித்துத் தருவதாக கோத்தாபயவிடம் வாக்குறுதி கொடுத்தார் பிளேக் - விக்கிலீக்ஸ்

Best Blogger Tips
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் சிறிலங்காப் படையினரின் முற்றுகையில் இருந்து தப்பிச் சென்றால் அவரைத் தேடிக் கண்டுபிடித்துத் தருவதாக சிறிலங்கா அரசுக்கு அமெரிக்கா வாக்குறுதி கொடுத்திருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. 

சமூகங்கள் மத்தியில் நல்லினக்க கலந்துரையாடல்: முஸ்லிம் கவுன்சில்

Best Blogger Tips
தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களுக்கிடையே காணப்படும் சந்தேகங்களை அகற்றி புரிந்துணர்வையும் நல்லுறவையயும் கட்டியெழுப்புவதற்கான புதிய அணுகு முறையை கையாளுவதற்கு திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. இலங்கை முஸ்லிம் கவுன்சில் மேற்கொண்ட இந்தத் திட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியேரத்ன தேரோ தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய கட்சி முன் வந்துள்ளது.

மெக்டொனால்ட்ஸுக்கு வழங்கப்பட்டுள்ள ஹலால் சான்றிதழ் வாபஸ் பெறப்படவில்லை

Best Blogger Tips
இலங்கையில் மெக்டெனால்ட்ஸ் உணவு வகைகளுக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்கியிருந்த ஹலால் சான்றிதழ் திரும்பப் பெறப்பட்டுள்ளது எனப் பரவிவரும் கருத்துக்கள் பொய்யான வதந்திகள் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஹலால் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மெக்டொனால்ட்ஸ் உணவுகளில் பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதை அடுத்தே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இத்தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் தகவல் பரவியது. இந்நிலையிலேயே இந்த விடயம் பலரது கவனத்தை ஈர்த்திருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது



News: Meelparvai

Wednesday, October 26, 2011

அடுத்த பொதுநலவாய மாநாடு இலங்கையில் - மஹிந்தவுக்கு பாரிய வெற்றி

Best Blogger Tips
மனித உரிமை மீறல் விடயங்கள் கவலையளிக்கின்ற போதும் பொதுநலவாய நாட்டுத் தலைவர்களின் அடுத்த மாநாடு இலங்கையில் இடம்பெறும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார். 

எனினும் மாநாட்டை நடத்தும் நாடே உறுப்பு நாடுகளுக்கு தனிப்பட்ட அழைப்பை விடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில் இலங்கையில் பொதுநலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாடு நடத்தப்படக்கூடாதென அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மால்கம் ப்ரேசர் விடுத்துள்ள கோரிக்கைக்கு ஆதரவு கிடைத்தால் அதனை ஒத்திவைப்பது குறித்து கவனம் செலுத்த முடியும் என கெவின் ரூட் குறிப்பிட்டார். 

இலங்கை தொடர்பில் சர்வதேச மட்டத்தில் பல்வேறு விமர்சனங்கள் கூறப்படும் நிலையில் இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடைபெறுவதானது இலங்கை அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மஹிந்தவிற்கும் பாரிய வெற்றியை ஈட்டித்தந்துள்ளது எனலாம்.

Libya & QADDAFI.. FACTS THAT CANT BE DENIED

Best Blogger Tips
1. There is no electricity bill in... Libya; electricity is free for all its citizens.

2. There is no interest on loans, banks in Libya are state-owned and loans given to all its citizens at 0% interest by law.

3. Home considered a human right in Libya – Gaddafi vowed that his parents would not get a house until everyone in Libya had a home. Gaddafi’s father has died while him, his wife and his mother are still living in a tent.
 
4. All newlyweds in Libya receive $60,000 Dinar (US$ 50,000 ) by the government to buy their first apartment so to help start up the family.

5. Education and medical treatments are free in Libya. Before Gaddafi only 25% of Libyans are literate. Today the figure is 83%.

6. Should Libyans want to take up farming career, they would receive farming land, a farming house, equipments, seeds and livestock to kick- start their farms – all for free.

7. If Libyans cannot find the education or medical facilities they need in Libya, the government funds them to go abroad for it – not only free but they get US $2, 300/mth accommodation and car allowance.

8. In Libyan, if a Libyan buys a car, the government subsidized 50% of the price.

9. The price of petrol in Libya is $0. 14 per liter.

10. Libya has no external debt and its reserves amount to $150 billion – now frozen globally.

11. If a Libyan is unable to get employment after graduation the state would pay the average salary of the profession as if he or she is employed until employment is found.

12. A portion of Libyan oil sale is, credited directly to the bank accounts of all Libyan citizens.

13. A mother who gave birth to a child receive US $5 ,000

14. 40 loaves of bread in Libya costs $ 0.15

15. 25% of Libyans have a university degree

16. Gaddafi carried out the world’s largest irrigation project, known as the Great Man-Made River project, to make water readily available throughout the desert country.

இலங்கை முஸ்லிம்களை கடாபி நேசித்தார் - ரவூப் ஹக்கீம் கூறுகிறார்

Best Blogger Tips
லிபியத் தலைவர் கடாபி கீழ்தரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பத குறித்து தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடாபியின் கொலை படுபாதச் செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

லிபிய மக்கள் தமது ஆட்சித்தலைவருக்கு எதிராக கிளர்ந்தெழுவதானால் அவர்கள் சுயமாகவே அச்செயலில் ஈடுபட்டிருக்கவேண்டும். அவ்வாறின்றி நேட்டோ அமைப்பினால் நன்கு திட்டமிடப்பட்டு, வடிவமைக்கப்பட்டு லிபிய மக்களை ஏவிவிட்டு கடாபியின் படுகொலை படுமோசமான முறையில் அரங்கேற்றப்பட்டிருப்பது அவ்வமைப்பின் கீழ்த்தரமான நோக்கத்தை பறைசாற்றுகிறது.

கடாபியிடம் எத்தகைய தவறுகள், குறைகள் இருந்தாலும் சட்டத்தின் முன்தோன்றுவதற்க அவருக்கு அடிப்படை மனித உரிமையின் கீழ் இடமிருந்தது. அவ்வாறின்றி கைது செய்து மிலேச்சத்தனமாக எந்த நீதியில் அனுமதிக்கப்பட்டுள்ளது..?

நீதி விசாரணைக்கு கடாபியை உட்படுத்தாமல் கீழ்த்தரமான, கேவலமான முறையில் கடாபியை படுகொலை செய்வதற்கு மனித உரிமைகளின் காவலர்கள் என தம்மைத்தாமே கூறிக்கொள்பவர்கள் இந்த கேவலத்திற்கு வழிவகுத்திருக்கிறார்கள்.

கடாபியை பொருத்தவரை அவர் இலங்கையின் உற்ற நண்பர். 1976 ஆம் ஆண:டு அணிசேரா மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் இலங்கை வந்திருந்தார். இலங்கை நாடு தம்மை வெகுவாக கவர்ந்திருப்பதாக அவர் கூறியிருந்தார். இதிலிருந்தே கடாபியின் இலங்கை மீதான பற்றும், இலங்கையர்களுடனான அவரது பற்றும் தெளிவாகிறது. 

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஸ்ரபுடன் கடாபி நெருங்கிய தொடர்பை பேணிவந்தார். இலங்கைக்கு பொதுவாகவும், குறிப்பாக முஸ்லிம்களுக்காகவும், முஸ்லிம் காங்கிரஸுக்காகவும் கேணல் கடாபி பல உதவிகளைச் செய்திருந்தார்.

நான் திரிபோலி சென்றிருந்த சமயம் கடாபியை சந்தித்துள்ளேன். அவருடன் கலந்துரையாடியுள்ளே;. கடாபியின் மறுமை ஈடேற்றத்திற்காக பிரார்த்திப்பதோடு, அவருக்கு மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவனபதி கிட்டவேண்டுமெனவும் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் ஹஜ்ஜாஜிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

Best Blogger Tips
சவூதி அரேபியாவின் மத விவகார, இஸ்லாமிய விவகார, கலாசார அலுவல்கள் பதில் அமைச்சர் டாக்டர் அம்மாரை சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சவூதி அரேபியாவுக்கு சென்றிருந்த போது சந்திந்து கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலின் போது எதிர்காலத்தில் இலங்கையின் ஹஜ்ஜாஜிகளினுடைய எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாகவும், பள்ளிவாசல், ஏனைய நிறுவனங்களுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பாகவும், மத விவகார நடவடிக்கைகளுக்கு அதிக பங்களிப்புகளை வழங்குமாறும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பதில் அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதில் அமைச்சர் இணக்கம் தெரிவித்ததோடு, இது தொடர்பாக விஷேட குழுவொன்றை நியமித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
இச்சந்திப்பின் போது சவூதி அரேபியாவுக்கான இலங்கை நாட்டு தூதுவர் அஹ்மத் ஜவாத்தும் கலந்துகொண்டார்.

நாமல் ராஐபக்ச மீது தொடுக்கப்பட்ட வழக்கு, விசாரணை இன்றியே தள்ளுபடி செய்த நீதிமன்றம்

Best Blogger Tips
சட்டக் கல்லூரி இறுதிப் பரீட்சையின் போது ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்சவிற்கு விசேட சலுகைகள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின்றி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் பரீட்சையின் போது நாமல் ராஜபக்சவிற்கு காற்று சீராக்கியுடன் கூடிய விசேட அறை ஒதுக்கப்பட்டிருந்ததாக தெரிவித்து வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
சட்டக் கல்லூரியின் வேந்தர் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எனினும், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
வழக்குத் தொடரும் அளவிற்கு போதியளவு காரணிகள் மனுவில் குறிப்பிடப்படவில்லை என நீதவான்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நுகேகொட எதிரிசிங்க வீதியைச் சேர்ந்த டி.எம். துசார குமார என்பவரினால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

Tuesday, October 25, 2011

இரட்டை கோபுரத்தை முஸ்லிம்கள் தகர்க்கவில்லை, புஷ் பொய் கூறினார்

Best Blogger Tips
முன்னாள் மலேசிய பிரதமரான மகாதிர் முஹம்மது தன்னுடைய சொந்த வலைப்பூவான செதேட்டில்,  இரட்டை கோபுரம், நியூயார்க் நகர், பெண்டகன் மற்றும் விர்ஜினியாவில் நடத்தப்பட்ட 9/11  தாக்குதல்களை நடத்தியது முஸ்லிம்கள் அல்ல என்றும் இத்தாக்குதல் குறித்து அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ் பொய் கூறியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது,

பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து முறையிட தொலைபேசி இலக்கம்பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து முறையிட தொலைபேசி இலக்கம்

Best Blogger Tips
பொது மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு புதிய அவசர பிரிவு தொலைபேசி இலக்கம் ஒன்றை இராணுவத் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் மஹிந்தவுக்கு எதிரான வழக்கு நிராகரிப்பு

Best Blogger Tips
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு எதிராக அவுஸ்திரேலிய மெல்பேர்னில் தாக்கல் செய்யப்பட்ட போர் குற்ற வழக்கை அவுஸ்திரேலியாவின் சட்டமா அதிபர் நிராகரித்துள்ளார். இதன்படி குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாதென நிராகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பிறந்த பொறியியலாளரான 63 வயதுடைய அருணாசலம் ஜெகதீஸ்வரன் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். 

இரகசிய ஆவணங்களை இனிமேல் வெளியிடாதாம் விக்கிலீக்ஸ்

Best Blogger Tips
கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், இனி எவ்வித ஆவணங்களையும் வெளியிடப் போவதில்லை என, "விக்கிலீக்ஸ்' தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர் பற்றிய, பல்வேறு ரகசிய ஆவணங்களை, லட்சக்கணக்கில் வெளியிட்டதன் மூலம், உலகின் கவனத்தைக் கவர்ந்தது "விக்கிலீக்ஸ்'.

துமிந்த சில்வா போதைப்பொருள் வியாபாரியோ, பாதாள உலக குழுவினரோ அல்லர்: கோத்தபாயl

Best Blogger Tips
மக்களால் தெரிவு செய்யப்பட்டு அந்த மக்களுடனேயே வாழந்து வரும் பாராளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வா போதைப் பொருள் வியாபாரியோ அல்லது பாதாள உலகத்துடன் தொடர்புபட்டவரோ அல்லர் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

''கைகொடுப்பது வீழ்த்துவதற்கே'' முஸ்லிம்களே சிந்தியுங்கள்..! (படம் இணைப்பு)

Best Blogger Tips

Monday, October 24, 2011

மாளிகாவத்தை சுற்றிவளைப்பு அரசியல் பழிவாங்கள்: முஜீபுர் ரஹ்மான்

Best Blogger Tips
மாளிகாவத்தைப் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பு தேடுதலானது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும்.இதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்று மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெவித்துள்ளார். இதற்கு எதிராக மனித உமை மீறல்கள் ஆணைக்குழுவில் புகார் செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தந்தையை கொன்றவர்களை பழி வாங்குவேன்! கடாபி மகன் சபதம்

Best Blogger Tips
என் தந்தையை (கடாபியை)  கொன்றவர்களை எதிர்த்து போராடி பழிவாங்குவேன். அதுவரை எனது போராட்டம் ஓயாது என்று கடாபியின் மகனான சயீப் அல்- இஸ்லாம் என்பவர் ஆவேசமாக சபதம் செய்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவும் ஜேர்மனியும் வஞ்சகம் - கிழக்கு தப்பியது

Best Blogger Tips
விண்வெளியில் செயலிழந்த ஜெர்மனியின் ஆய்வுச் செய்மதியின் உடைந்த பாகங்கள் தென்கிழக்காசியாவில் விழுந்திருக்கலாம் என்று ஜேர்மனிய விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். சிறிய பேருந்து ஒன்றின் அளவுடைய - 1.87 தொன் எடையான இந்த செய்மதி செயலிழந்து, 30 துண்டுகளாக உடைந்து 450 கி.மீ வேகத்தில் பூமியில் விழுந்துள்ளது.

1990ம் ஆண்டில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்த செய்மதி 1999ம் ஆண்டில் செயலிழந்த நிலையில் புவிச்சுற்று வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டிருந்தது. இந்த செய்மதி சனிக்கிழமை இரவு 9.45 மணிக்கும், 10.15 மணிக்கும் இடையில் புவியை நெருங்கியதாகவும், அது தரையில் விழுவதற்கு 10 தொடக்கம் 15 நிமிடங்களே எடுத்திருக்கும் என்றும் ஜேர்மனி விண்வெளி ஆய்வு நிலையம் கூறியுள்ளது.

அதேவேளை அமெரிக்க இராணுவ விஞ்ஞானிகள் இந்த செய்மதிப் பாகங்கள் இலங்கைன் கிழக்குப் பகுதியில் விழலாம் என்று எதிர்பார்த்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே ஜேர்மனிய செய்மதி தென்கிழக்காசியாவில் வீழ்ந்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார். எனினும் இவை எங்கு விழுந்தன என்பதை அவர் உறுதி செய்யவில்லை. இந்த செய்மதிப் பாகங்கள் கிழக்குப் பகுதியில் வீழ்ந்தனவா என்பது குறித்த தகவல்கள் ஏதும் தெரியவரவில்லை. இந்த செய்மதிப் பாகங்கள் பூமியில் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கு 2000இல் ஒரு பங்கு வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் முன்னரே கூறியிருந்தனர்.

ஆனாலும், இந்த செய்மதி பாகங்களால் இலங்கைக்கு  ஆபத்து உள்ளதாக முன்னரே கணித்திருந்த அமெரிக்க, ஜேர்மானிய விஞ்ஞானிகள் இது குறித்த முன்னெச்சரிக்கைகள் எதையும் பொதுமக்களுக்கு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடலில் கால் கழுவியவர் அலையில் சிக்கி வபாத்தானார்

Best Blogger Tips
கடலின் கரையில் இறங்கி தனது கால்களைக் கழுவியவரை திடீரென வந்த அலை இழுத்துச்சென்று அவர் மரணமான சம்பவமொன்று திக்குவலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஹிட்லர் உண்மையிலே தற்கொலை செய்து கொண்டாரா?

Best Blogger Tips
சர்வாதிகா ஹிட்லர் 1945 ஆம் ஆண்டில் பெர்லின் நகரில் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் அவர் ஆர்ஜென்டீனாவில் இறுதி நாட்களை கழித்த நிலையில் இயற்கை மரணம் எய்தியதாகவும் புதிய ஆய்வு நூல் ஒன்று உமை கோருகிறது.

Sunday, October 23, 2011

கேணல் கடாபி: ஒரு சரித்திரத்தின் சரிவு

Best Blogger Tips
1942 ஆம் ஆண்டு ஜூன், 7ஆம் திகதி பிறந்த கடாபி தனது வாலிப பருவத்தில் இராணுவத்தில் இணைத்தார். அன்றைய லிபிய மன்னரான முஹம்மத் இத்ரீஸ் அஸ்ஸனூஸி என்பவர் சிகிச்சைக்காக துருக்கி சென்றிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 1969 ஆம் ஆண்டு தனது 27 வது வயதில் இராணுவ சதிப் புரட்சி மூலம் லிபியாவின் ஆட்சியை கைப்பற்றினார்.

கடாபியின் மகனுக்கு மஹிந்தவின் உருக்கமான கடிதம்

Best Blogger Tips
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவருடைய குடும்பத்தினர், கேணல் கடாபியின் மறைவு தொடர்பான தமது இரங்கல் செய்தியையும், தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் அவரது மகனான   கன்னிபல் கடாபிக்கு தெரிவித்துள்ளனர்.

Saturday, October 22, 2011

இலங்கையில் எண்ணெய் வளமா? அப்ப அமெரிக்காட்ட அடி வாங்கத்தான் வேணும்?

Best Blogger Tips
சர்வதேசத்தில் வல்லரசாக இருக்கும் அமெரிக்காவின் நீண்ட நாள் கனவுகள் ஏராளம். அதில் ஒன்று எண்ணெய் வளம் கொண்ட நாடுகளை வளைச்சுப் போடுவது.

அத்தோடு சர்வதேசத்தைத் தனது ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டும் என்ற நினைப்பும் ஒரு பக்கத்தில் அமெரிக்காவுக்கு இருக்கத்தான் செய்கின்றது.

தந்தையின் கொலையை மூடிமறைக்க இடமளிக்க போவதில்லை : பாரதவின் மகள் சூளுரை

Best Blogger Tips
தந்தையின் படுகொலைச் சம்பவத்தை மூடி மறைக்க இடமளிக்கப் போவதில்லை என அண்மையில் முல்லேரியா பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் புதல்வி, ஹிருனிகா பிமேச்சந்திர தெரிவித்துள்ளார்.

உலக செல்வந்த நாடு சுவிஸ் - ஆய்வில் தகவல்

Best Blogger Tips
உலக செல்வந்த நாடு என்ற பெயரைக்கொண்ட நோர்வையை சுவிஸ் முந்திவிட்டதாக வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் செல்வந்த நாடு என்ற பட்டியலில் முதலாம் இடத்திற்கு சுவிஸ் வந்துள்ளது. 

சுட்டுக் கொல்லப்பட்டபோது கடாபி தங்க துப்பாக்கி வைத்து இருந்தார் (படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
சுட்டுக் கொல்லப்பட்ட போது கடாபி தங்க துப்பாக்கி வைத்திருந்தார். தங்க துப்பாக்கி கடாபி தனது சொந்த ஊரான சிர்த் நகரில் புரட்சி படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது, அவர் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி வைத்திருந்தார். அந்த துப்பாக்கி பழுப்பு நிறத்தில் இருந்தது. அதை அவர் பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறார். 

Friday, October 21, 2011

பழிவாங்க 48 கொடிய மிருகங்களை திறந்துவிட்ட அதிகாரி - நகரமே பதற்றம்

Best Blogger Tips
ஓகியோவின் முஸ்கிங்கம் கன்ட்ரியில் டெரி தாமஸ் என்பருக்கு சொந்தமான தனியார் மிருக காட்சி சாலை ஒன்று உள்ளது. அங்கு வெளிநாடுகளை சேர்ந்த சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, ஓநாய்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன.

முஸ்லிம் நாடுகளின் பலத்தை மேற்குலகிற்கு சவாலாக எடுத்துக் காட்டியவர்களுள் கடாபியும் ஒருவர் : அலவி மௌலானா

Best Blogger Tips
உலக முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி இஸ்லாமியர்களின் பலத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஏகாதிபத்திய மேற்குலக சதியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அவரிற்காக தொழுவோம்...! முஸ்லிம்கள் மரணத்திற்கு அஞ்சிய கோழைகளா..?

Best Blogger Tips
நேற்றைய இரவின் தலைப்பு செய்தி “கேர்ணல் கடாபி சுதந்திர போராளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்”.  சில நிமிடங்களில் இன்னொரு சிறப்புச் செய்தி, “என்னை சுடாதீர்கள். தயவு செய்து என்னை சுட்டு விடாதீர்கள், இதுவே கடாபி பதுங்கு குழியில் கூறிய கடைசி வார்த்தைகள்”.

யாழ். மாம்பழத்தை விரும்பிய அமெ.எம்.பிக்கள், எங்கே வாங்கலாம் என அரச அதிபரை கேட்டனர்

Best Blogger Tips
யாழ். குடாநாட்டு மாம்பழத்தை விரும்பிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், யாழ்ப்பாணத்தில் எங்கே மாம்பழங்கள் வாங்கலாம் என்று அரச அதிபர் இமெல்டா சுகுமாரிடம் கேட்டனர்.

கொழும்பில் சட்டவிரோத நிதிநிறுவனங்கள் சுற்றிவளைப்பு

Best Blogger Tips
கொழும்பு - புறக்கோட்டை மூன்றாம் குறுக்குத் தெரு மற்றும் குமார வீதி ஆகியவற்றில் நடத்திச் செல்லப்பட்டு வந்த சட்டவிரோத நிதி நிறுவனங்கள் இரண்டை கொழும்பு ஊழல் விசாரணை பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர். 

லிபியாவில் கொடுங்கோலாட்சி முடிவுக்கு வந்துள்ளதாம் - ஒபாமா சொல்கிறார்

Best Blogger Tips
லிபியாவின் நீண்ட கால கொடுங்கோலாட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. லிபிய மக்களின் வரலாற்றில் இது முக்கியமான தருணம் என அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார். 

''மகள் என்ன பாவம் செய்தாள்..?'' - இலங்கை எங்கே செல்கிறது..??

Best Blogger Tips
தம்புத்தேகம - களுந்தேகம பிரதேசத்தில் தந்தை மேலும் மூவருடன் இணைந்து தனது 10 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ள கேவலமான கீழ்த்தரமான சம்பவமொன்று ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 31ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வில்கமுவ - இமாடுவயாய பகுதியில் 09 வயது சிறுமி மற்றும் 7 வயது சிறுவன் ஆகியோர் மீது பாலியல் வல்லுறவு புரியப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று லக்கல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலும் அரலகங்வில அலுத்ஓய பிரதேசத்தில் 12 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலன்னறுவை பொலிஸார் அவரை இன்று பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யவுள்ளனர்.