ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று கொழும்பிலுள்ள புதிய நகர மண்டபத்தில் அதற்கான நிகழ்வுகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்படுகின்றது. இன்று செவ்வாய்க்கிழமை பி.ப.2.30 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வில் விசேட உரையினை கட்சியின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர் உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Tuesday, November 29, 2011
கடாபியின் மகன் சிக்கியது எப்படி?
லிபியாவின் தென்மேற்கு பாலைவனப் பகுதியில் உள்ள மறைவிடம் ஒன்றில் கடாபியின் மகன் ஸையிப் அல் இஸ்லாம் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மேலதிக விபரங்கள் ஏதும் உடனடியாக தெரிவிக்கப் பட்டிருக்கவில்லை. கடாபியின் மகன் சிக்கிக் கொண்டது எப்படி என்ற தகவல் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரியவருகிறது
Monday, November 21, 2011
இஸ்லாத்திற்கெதிரான சிங்கள பேஸ்புக் - ஒன்றுபட்டு எதிர்ப்போம்
පෙරමුණේ රාළගේ අටුවාව (பெரமுன ராள லாகே அடுவாவ) எனும் பெயரில் ஒரு face book Open Group இருக்கிறது (லிங்க் கடைசியில் தரப்பட்டுள்ளது) அதில் முஸ்லிம்களையும் நமது கலாச்சாரங்களைய்யும் கேலி செய்வதல்லாமல் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களை கேலி செய்யும் காடூன்களையும் இட்டுள்ளான் (older post சென்று பார்க்கவும் ) ஆகவே இதை ரிப்போர்ட் செய்து பிளாக் பண்ணுவது நம் அனைவரினதும் பொறுப்பாகும் ஆகவே வாருங்கள் அனைவரும் சேர்ந்து இதை பிளாக் பண்ணுவோம்Wednesday, November 16, 2011
பிரம்மகுமாரிகளிடமிருந்து அல்லாஹ்வின் இல்லத்தை மீட்க நீதிமன்ற உதவி
பிரமகுமாரிகள் இராஜயோக நிலையமாக மாறியுள்ள மஸ்ஜிதுல் பிர்தௌஸ் மீட்பதற்கு நீதிமன்றத்தை நாடவுள்ளதாக காத்தான்குடி மஸ்ஜிதுகள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் சுபைர் தெரிவித்தார். தமது சம்மேளனம் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்து கள்ளியங்காடு கிராமம் அதன் மஸ்ஜிதுல் பிர்தௌஸ் தொடர்பாகவும் ,காத்தான்குடி எல்லை நிர்ணயம் தொடர்பாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் பேசியுள்ளதாகவும் தெரிவித்தார்.Tuesday, November 15, 2011
'உம்மா என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்' - கதறியழுது கெஞ்சிய ரிஸானா
குழந்தை ஒன்றை கொலை செய்ததாகக் கூறி சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண்ணான ரிஸானா நபீக்கை அவருடைய பெற்றோர்கள் நேற்று சந்தித்துள்ளனர். 2007ம் ஆண்டு ஜூன் 16ம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின் 23 வயதுடைய ரிஸானாவை ரியாத் சென்றுள்ள அவருடைய பெற்றோர் முதன்முதலில் சந்தித்துள்ளனர்.
Sunday, November 13, 2011
தவக்குல் கர்மானியை இலக்குவைத்த அமெரிக்காவும், இக்வானுல் முஸ்லிம்களும்
இந்த வருடத்தின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட மூன்று பெண்களில் ஒன்றாக எமன் நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும் எமன்நாட்டின் அரசுக்கெதிராக நடக்கும் போரட்டங்களை நடத்தும் தலைவர்களுல் ஒருவருமான தவக்குல் கர்மானி இடம்பெற்றிருந்தது பலரையும் குறிப்பாக முஸ்லீம்களை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.என்றால் மிகையல்ல ஏனென்றால் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் பார்வையில் உலகின் முக்கிய முஸ்லீம் அமைப்பான முஸ்லீம் பிரதர்ஸ் ஹூட் அமைப்பின் எமன் கிளையான அல்இஸ்லாஹின் முக்கிய தலைவர்களுல் ஒருவர் பர்தா அனியக்கூடியவர் மூன்று குழந்தைகளின் தாய் என்றெல்லாம் நோபல் பரிசு கிடைப்பதற்க்கு அவருக்கு நிறையவே தடைகள் இருந்தபோதும் இம்முறை இவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறதென்றால் அதன் பினனால் அமெரிக்காவின் ராஜதந்திரம்தான் என்பது எளிதில் புரிந்துவிடும்.நாளை நள்ளிரவு முதல் தனியார் பஸ்கள் வேலை நிறுத்தம்
நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது போக்குவரத்து சேவையில் இருந்து விலகிக் கொள்வதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில் டிசல் நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்த போதும் அதற்கு எதுவித தீர்வுகளும் கிடைக்காததால் இம்முடிவை எடுத்ததாக கொழும்பில் இன்று இடம்பெற்ற உடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
ஈரான் மீது நாடாத்தப்படும் தாக்குதல் பிராந்திய யுத்தமாக வெடிக்கும். ஹிஸ்புல்லாஹ்
ஹிஸ்புல்லாஹ்”. இன்றைய உலகில் அமெரிக்காவின் உளவமைப்பான சீ.ஐ.ஏ.(C.I.A.) யினால் புகழப்பட்ட இயக்கம்.
சீ.ஐ.ஏ. ((C.I.A.) இலகுவில் யாரிற்கும் அல்லது எந்த ஒரு அமைப்பிற்கும்
புகழாரம் சூட்டி பென்டகனிற்கு அறிக்கை சமர்ப்பித்ததில்லை. ஆனால்
ஹிஸ்புல்லாவிற்கு மட்டும் அந்த பாக்கியம் கிடைத்தது. “அவர்கள் பலம்
வாய்ந்தவர்கள். சக்தி மிக்கவர்கள். சாணாக்கியமானவர்கள். உலகின் நவீன
இராணுவ தொழில் நுட்பங்களை எங்களது மரீன்களிற்கு இணையாக அறிந்து வைத்துள்ள
ஆற்றல்மிக்கவர்கள். எனது பார்வையில் இஸ்ரேலிய இராணுவத்தை நிலைகுலைய
வைக்கக் கூடியவர்கள் இவர்கள் மட்டுமே. நாம் அரபு நாடுகளை பற்றி அலசுவதைவிட
இவர்களை அழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்”. இப்படி அறிக்கை சமர்ப்பித்து
அமெரிக்க அதிபர் மற்றும் பாதுகாப்பு கவுன்ஸில் உறுப்பினர்களான சீப் ஒப்
ஸ்டாப் முன்னிலையில் பேசியவர் முன்னாள் சீ.ஐ.ஏ. இயக்குனர் Porter Johnston
Goss (Director of the Central Intelligence Agency and Director of
National Intelligence) ஆவார்.Saturday, November 12, 2011
Thursday, November 10, 2011
சிங்கள வர்த்தகர்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் !!
தமிழ், முஸ்லிம் வர்த்தகர்களை முடக்கிய அரசாங்கம், சிங்கள வர்த்தகர்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் இன்று இறங்கியுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆவணசட்ட முல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெவித்துள்ளார்.Wednesday, November 9, 2011
புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்: எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்
பங்களாதேசை பிறப்பிடமாக கொண்ட எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் சர்ச்சைக்காக பிறந்தவர் போலும். இப்பொழுது மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
அனைத்து முஸ்லிம்களும் தங்கள் ஈகை திருநாளாம் “ஈத்” தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடும் வேளையில், ஏற்க்கனவே இவரது அவசியமற்ற வேலைகளுக்காக கொலை மிரட்டல் கிடைக்கப்பெற்ற இந்த சர்ச்சைக்குரிய எழுத்தாளர் மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளார்.
ஜிஹாத் பத்தி வேலாயுதத்துக்கு தெரியுமா..?
இந்த வயசான காலத்துல தியேட்டருக்குப்போய் படம் பாக்கிறது தேவையா எண்டு நீங்க கேக்காதீங்க. நானும் நாலும் தெரிஞ்சிக்க வேணாமா...? விஜய் நடிச்ச வேலாயுதம் நல்ல வசூல் எண்டு என்ட கூட்டாளி சொன்னான். நானும் அத நம்பித்தான் பார்க்கப் போனேனுங்கோ..
விசில் பறக்க படம் ஆரம்பிச்சிடுச்சி. விஜய்க்கு டப்பிங் படம் எண்டா ஓ.கே. போலக் கெடக்கு. அவருக்கெண்டு எழுதுற கதை ஒண்டும் இப்ப வெல்லுது இல்ல. எல்லாம் ஊத்திக்கிச்சி. வேலாயுதம் எண்டு ஒரு கேரக்டரை கற்பனையா உருவாக்கி, பொறகு அதுவே கதையாப் போகுது. பாட்டு எல்லாம் கண்ணுக்கும் காதுக்கும் குளிர்ச்சி. ஆனா, ஒண்டு பாருங்கோ, படம் முழுக்க முஸ்லிமை, குறிப்பா பாகிஸ்தான் நாட்டுக்காராக்களை எப்பவும் எதிரியாகத்தான் இந்திய சினிமா சித்தரிக்குது.
இஸ்ரேலிய பிரதமர் ஒரு பொய்யன் - ஒபாமாவிடம் சொன்ன சர்கோஸி
"இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடான்யாஹூ ஒரு பொய்யர்' என பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, ஒபாமாவிடம் விமர்சித்தது தற்போது வெளியாகியுள்ளது.பிரான்சின் கேன்ஸ் நகரில், சமீபத்தில் ஜி 20 நாடுகளின் கூட்டம் நடந்தது. கூட்ட அரங்கில் இருந்து பத்திரிகையாளர்கள் இருந்த இடத்திற்கு கருவிகள் மூலம் பேச்சுவார்த்தைகள் கேட்கும் படி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.Sunday, November 6, 2011
ஹஜ்ஜுப் பெருநாள் - மஹிந்த, பிரதமர், ஹக்கீம், பௌஸி ஆகியோரின் வாழ்த்துச் செய்தி
இலங்கை முஸ்லிம்கள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் அறிவுரைப்படி திங்கட்கிழமை புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடவுள்ள நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அரசயில் தலைவர்கள் வாழ்துச் செய்திகளை தெரிவித்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷ
இஸ்லாமிய போதனைகளை பின்பற்றி இலங்கை முஸ்லிம்கள் நாட்டின் சமூக, கலாசார, பொருளாதார முன்னேற்றத்துக்கு பெரிதும் பங்களிப்பு செய்துள்ளனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. இலங்கை முஸ்லிம்கள் இன்று நாடெங்கிலும் தங்களது சமய நம்பிக்கைகளையும் வணக்க வழிபாடுகளையும் சுதந்திரமாக மேற்கொள்கின்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் எமது தாய்நாட்டில் நீண்டகாலமாக நிலவி வந்த பயங்கரவாத இருள் சூழ்ந்த யுகத்திலிருந்து நாம் தற் போது விடுபட்டுள்ளோம். ஈதுல் அல்ஹா உணர்த்தி நிற்கும் தியாக உணர்வு எல்லா சமூகங்களினால் மிகுந்த தியாகத்துடன் வெற்றி கொள்ளப்பட்ட சுதந்திரத்தைப் போற்றிப் பேண அவர்களுக்கு உதவும்.
இந்த முக்கியமான பெருநாள் தினத்தை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும், கொண்டாடுவதற்கும் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு எனது நல்வாழ்த் துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதம் செத்து போன மற மண்டைகளினால் நீரில் வீசப்படும் குழந்தைகள் ..!
அழகிய சிறுவன் சடலமாக மக்களினால் மீட்க படுகின்றான் .அதேபோல பிறந்த சிசு ஒன்று பொலித்தீன் பையினால் சுற்ற பட்டநிலையில் மிதந்து வருகின்றது அந்த குழந்தையிணையும் மீட்டு அவர்கள் எடுத்து ஓடும் அதிர்ச்சி காணொளிகள் பார்பவர்கள் விழியில் நீர் கசிய வைக்கும் அதிர்ச்சி காட்சிகள் .
இலங்கையில் ஆற்றில் வீச பட்ட அழகிய மூன்று வயது சிறுவன் மூச்சு திணறி உயிர் பிரிந்த நிலையில்
Saturday, November 5, 2011
ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்
முழு உலகிலிருந்தும் முஸ்லிம் உம்மாவின் உறுப்பினர்கள் ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் உலகிற்கு எடுத்துக் காட்டுகின்றனர். இன , மொழி, நிற , பிரதேச , தேச வேருபாடுகள் புறக்கணித்து ஒரே விதமாக ஒரேநேர காலத்தில் வெள்ளை நிற ஆடை அணிந்தபடி தம் கடமையை நிறைவேற்றுகின்றார்கள். இது முஸ்லிம் உம்மாவிற்கு ஒன்றுமையை ஒருமைப்பாட்டையும் கற்றுகொடுக்கின்றது. இவற்றை நினைவில் கொண்டு ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட உங்கள் அனைவரையும் "Sl e News" வாழ்த்துகின்றது.
ஹஜ்ஜுப் பெருநாள் ஒரு பார்வை - அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பழீல்
முஸ்லிம்கள் தமது இறைவனால் வழங்கப்பட்ட இரண்டு பெருநாட்களில் ஒன்றான ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகிறார்கள். நோன்புப் பெருநாள்; நோன்பு என்ற பெரும் கடமை முடிவடைந்த பின்னரும் ஹஜ்ஜுப் பெருநாள், ஹஜ் எனும் முஸ்லிம்களது சர்வதேச மாநாடு நடைபெற்று முடிந்த பின்னரும் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இவ்விரு கடமைகளையும் தமக்குத் தந்தமைக்கு நன்றி செலுத்துமுகமாகவும் அக்கடமைகள் தரும் பயன்களையும் அடைந்து கொண்ட களிப்பின் விளைவாகவும் இவ்விரு பெருநாட்களையும் முஸ்லிம்கள் கொண்டாடுகிறார்கள்.இலங்கையில் இணைய ஊடகங்களுக்கு, ஊடகத்துறை அமைச்சு அறிக்கை
இலங்கையிலிருந்தோ அல்லது வேறு நாடுகளிருந்தோ இணையத்தளங்களுக்குச் செய்திகளை தரவேற்றம் செய்யும் இணையத்தளங்கள் இலங்கை மற்றும் எமது நாட்டு மக்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுவதில் அவதானமாக இருக்குமாறு தகவல் ஊடகத்துறை அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பல இணைய தளங்களில் தம்மைப் பற்றி உண்மைக்குப் புறம்பான மற்றும் களங்கம் ஏற்படுத்தக் கூடிய செய்திகள் வெளிவருவதாக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் அமைச்சுக்கு புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சில தனிப்பட்ட நபர்கள் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை இந்த இணைய தளங்கள் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன. இந்த இணையத்தளங்களில் காணப்படும் சில விடயங்கள் நாடு, நாட்டின் தலைமைத்துவம் அமைச்சர்கள் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள், மிக மிக முக்கிய பிரமுகர்கள் ஆகியோருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தக் கூடியனவாக உள்ளன.
இது தொடர்பாக அமைச்சு மேற்கொண்ட ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளமையானது என்னவெனில், பல இணையத்தளங்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையும் நாட்டின் சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளன. இணைய தளங்களின் இந்த செயல்பாடானது அரசுக்கும், நாட்டின் தலைமைத்துவத்துக்கும், ஏனையவர்களுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் நடவடிக்கை என்று அமைச்சு கருதுகிறது.
இந்த இணையத்தளங்களின் பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள், உரிமையாளர்கள் என்போர் பத்திரிகைத் துறையின் ஒழுக்கம், தனிப்பட்டோரின் உரிமை, பாதுகாப்பு என்பனவற்றை குறிவைத்தே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக அமைச்சு செய்திகளை வெளியிடும் எல்லா இணைய தளங்களும், ஏற்றுக்கொள்ளப்பட்ட உறுதி செய்யப்பட்ட நாட்டின் சட்டத்துக்கு அமைவான விடயங்களை மட்டுமே தரவேற்றம் செய்யுமாறு கோருவதற்கு எண்ணியுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு
திருமதி கே. டபிள்யூ. டி. என். அமரதுங்க, மேலதிக செயலாளர் (டிவலொப்மென்ட் அன்ட் பிளேனிங்)
தொலைபேசி : +94112513943. பெக்ஸ் : + 94112512343.
email : amaratungamedia@yahoo.com, secretary@media.gov.lk அல்லது இணையத்தளம்: www.media.gov.lk என்னும் முகவரியுடன் தொடர்பு கொள்ள லாமென அறிவிக்கப்படுகிறது.- தகவல் தினகரன்
“இராணுவ மூலோபாயம் குறித்து எனக்குப் புத்தி சொல்ல வேண்டாம்“ - ரணில் மீது எரிந்து விழுகிறார் கோத்தாபய
போருக்குப் பிந்திய இராணுவ மூலோபாயம் குறித்து ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனக்குப் புத்திமதி சொல்லத் தேவையில்லை என்றும், அவரது ஆலாசனை தனக்குத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.
நோர்வேயின் நடுநிலையுடனான போர்நிறுத்த உடன்பாட்டையும், போர் முயற்சிகளையும் மோசமாக கையாண்ட ஐதேக தலைவர், இராணுவ மற்றும் ,வெளிவிவகாரக் கொள்கைகள் தொடர்பாக தீவிரமாக எடுத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் கோபத்துடன் கூறியுள்ளார்.
நோர்வேயின் நடுநிலையுடனான போர்நிறுத்த உடன்பாட்டையும், போர் முயற்சிகளையும் மோசமாக கையாண்ட ஐதேக தலைவர், இராணுவ மற்றும் ,வெளிவிவகாரக் கொள்கைகள் தொடர்பாக தீவிரமாக எடுத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் கோபத்துடன் கூறியுள்ளார்.
Friday, November 4, 2011
சஹாரா பாலைவனத்தில் கடாபியின் மகன்?
லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் கடாபியின் புதல்வர்களில் ஒருவரான
சயீவ் அல் இஸ்லாம், சஹாரா பாலைவனத்தின் மணற்குன்றுகளுக்கிடையில்
மறைந்திருக்கலாம் கூறப்படுகிறது.
லண்டனில் கல்வி கற்ற 39 வயது பொறியியலாளரான சயீவ் அல் இஸ்லாம, கேணல் கடாபியின் பிரதான அரசியல் வாரிசாக கருதப்பட்டவர்; தற்போது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றமிழத்தார் என்ற குற்றச்சாட்டின் காரணமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
லண்டனில் கல்வி கற்ற 39 வயது பொறியியலாளரான சயீவ் அல் இஸ்லாம, கேணல் கடாபியின் பிரதான அரசியல் வாரிசாக கருதப்பட்டவர்; தற்போது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றமிழத்தார் என்ற குற்றச்சாட்டின் காரணமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு
பிரான்ஸ் நாட்டில் சுமார் ஐந்து பில்லியன் முஸ்லீம்கள் வசிக்கின்றனர். ஐரோப்பாவில் தான் முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. பிரான்ஸ் நாட்டில் இஸ்லாமியர் மீது இப்போது அச்சமும், வெறுப்பும் வளர்ந்து கொண்டே போகிறது. அங்குள்ள இஸ்லாமிய கல்லறைகள் மற்றும் மசூதிகளுக்கு சேதம் விளைவிக்கின்றனர்.
முஸ்லீம்களைத் தாக்கிக் காயப்படுத்துகின்றனர். வசைமொழி மற்றும் கேலிப் பேச்சால் அவமானப்படுத்துகின்றனர். முஸ்லீம்களுக்குக் கோபமூட்டும் வகையில் நடந்துகொள்கின்றனர்.
எகிப்தில் மீண்டும் புரட்சி வெடிக்கலாம் - இஹ்வானுல் முஸ்லிம் எச்சரிக்கை
கடந்த காலங்களில் மேற்கு நாடுகள் அறபுலகின் சர்வாதிகார ஆட்சி பீடங்களுக்கே ஆதரவளித்து வந்தன. எகிப்திய மக்கள் ஜனநாயக மாற்றத்தை எதிர்பார்த்திருக்கின்றனர். இதனால் மேற்கு நாடுகள் தமது கொள்கையை மாற்றிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம். இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் பிரதித் தலைவர் பொறியியலாளர் கைரத் ஷாதிர் தெரிவித்துள்ளார்.
சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதற்கோ, புரட்சியைக் களவாடுவதற்கோ யாராவது முயன்றால் எகிப்திய மக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
சதகதுள் ஜாரியாவாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு ஐம்பது மில்லியன்
லேடி ரிட் ஜ்வே சிறுவர் வைத்தியசாலை இருதய சிகிச்சைப் பிரிவுக்கு ஐம்பது மில்லியன் ரூபா செலவில் புதிய கட்டிட தொகுதியொன்றை அன்பளிப்பாக அமைத்துக் கொடுப்பதற்கு முஹமட் அலி அன்ட் ஜெபர்ஜி நிறுவனத்தின் உரிமையாளர் முன்வந்துள்ளார். இக் கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டதும் அதன் முதல் மாடியில் இருதய சிகிச்சைகளை மேற்கொள்ளத்தேவையான மருத்துவ உப கரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கும் அவர் இணக்கம் தெரிவித்திருக்கின்றார்.மேற்கு ஏகாதிபத்தியம் ஈரானை தாக்க தயாராகின்றது
முஸ்லிம் நாடுகளில் மேற்கின் ஏகாதிபத்திற்கு கட்டுப்படாத முதுகெலும்புள்ள நாடாக ஈரான் பல துறைகளில் மேற்கின் பொருளாதாரதடைகளையும் மீறி வளர்ந்து வருகின்றது. இஸ்ரேல் எனற நாடு சட்டவிரோதமானது என்ற நிலைபாட்டில் மிகவும் உறுதியுடன் செயல்பட்டு வருகின்றது. இதனால் மேற்கின் அடுத்த இலக்கு ஈரான் என்று பல ஆய்வளர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர்.ஜனாதிபதி மஹிந்தவின் வாழ்வில் நடந்த சோகம்
தம்மைப் பெற்று வளர்த்த தாயாரின் மரணத்தருவாயில் அவரது முகத்தைக் கடைசியாக ஒருமுறை பார்க்கும் பாக்கியம் ஒரு மகனுக்குக் கிடைக்கவில்லையென்றால் அது மிகவும் துர்ப்பாக்கியமானதாகும்.எவருக்கும் அத்தகைய நிலைவரக்கூடாது. எனினும் நமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வாழ்க்கையில் இத்தகைய துர்ப்பாக்கிய சம்பவம் ஒன்று ஏற்பட்டது.
Thursday, November 3, 2011
லிபியா-கதாஃபி : ‘போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்’
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல்… இராணுவப்புரட்சி மூலம் சண்டையின்றி இரத்தமின்றி ஆட்சியை கைப்பற்றிய…
கதாஃபி…
(லிபிய மக்களுக்கு)
மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..!
‘தான் மட்டுமே என்றும் லிபியாவை ஆளவேண்டும்’ என நினைக்காத வரை..!
கதாஃபி…
(லிபிய மக்களுக்கு)
மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..!
தந்நாட்டு மக்களை அநியாயமாக கொன்று குவித்து கொலைகாரன் ஆகாதவரை..!
இந்த லிபிய மக்கள் கடாஃபியின் கீழ் எப்படி வாழ்ந்தார்கள்..? ஆட்சியாளரான கடாஃபியின் ஆட்சி எப்படி இருந்தது..? அது பற்றி மேற்கத்திய சியோனிச ஊடகங்களால் மறைக்கப்பட்ட உண்மைகளை இனியும் நாம் அறியாதிருக்க கூடாது சகோ..! அவற்றில் சில உங்கள் ஆச்சர்ய பார்வைக்கு..!
கதாஃபி…
(லிபிய மக்களுக்கு)
மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..!
‘தான் மட்டுமே என்றும் லிபியாவை ஆளவேண்டும்’ என நினைக்காத வரை..!
கதாஃபி…
(லிபிய மக்களுக்கு)
மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..!
தந்நாட்டு மக்களை அநியாயமாக கொன்று குவித்து கொலைகாரன் ஆகாதவரை..!
இந்த லிபிய மக்கள் கடாஃபியின் கீழ் எப்படி வாழ்ந்தார்கள்..? ஆட்சியாளரான கடாஃபியின் ஆட்சி எப்படி இருந்தது..? அது பற்றி மேற்கத்திய சியோனிச ஊடகங்களால் மறைக்கப்பட்ட உண்மைகளை இனியும் நாம் அறியாதிருக்க கூடாது சகோ..! அவற்றில் சில உங்கள் ஆச்சர்ய பார்வைக்கு..!
இஸ்ரேலை தாக்க நாங்கள தயார் - ஈரான் அறிவிப்பு
இஸ்ரேல் நேற்று ஜெரிசோ என்ற ஏவுகணையை செலுத்தி சோதனை நடத்தியது. அது அணு ஆயுதங்களை சுமந்து சென்று நீண்டதூரம் விண்ணில் பாய்ந்து தாக்கக்கூடியது. இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.
ஈரான் அணு உலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அணு ஆயுதங்களை தயாரிக்கதான் ஈரான் அணு உலைகளை உருவாக்குவதாக கூறுகின்றனர். ஆனால், இதை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தங்களின் மின்சார தேவைக்குதான் அணு உலைகள் பயன்படுத்தப்படும் என உறுதி அளித்துள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேல் நீண்டதூரம் பாய்ந்து தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை நடத்தி இருப்பது ஈரானை அச்சம் அடைய செய்துள்ளது. ஏனெனில் ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
இந்த ஏவுகணை மூலம் தங்களது அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்கக்கூடும் என கருதுகிறது. எனவே தாக்குதல் நடத்தினால் அதை சமாளிக்க ஈரான் ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தயார் நிலையில் ராணுவம் உள்ளது.
இதுகுறித்து ஈரான் ராணுவ தளபதி ஜெனரல் ஹசன் பிரோஷாபடி கூறும்போது, இஸ்ரேலின் எந்த மிரட்டலையும் சந்திக்க தயாராக உள்ளோம். அதற்கான ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன. அவர்கள் தாக்கினால் பதிலுக்கு நாங்களும் தாக்குவோம் என்றார்.
ஈரான் அணு உலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அணு ஆயுதங்களை தயாரிக்கதான் ஈரான் அணு உலைகளை உருவாக்குவதாக கூறுகின்றனர். ஆனால், இதை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தங்களின் மின்சார தேவைக்குதான் அணு உலைகள் பயன்படுத்தப்படும் என உறுதி அளித்துள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேல் நீண்டதூரம் பாய்ந்து தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை நடத்தி இருப்பது ஈரானை அச்சம் அடைய செய்துள்ளது. ஏனெனில் ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
இந்த ஏவுகணை மூலம் தங்களது அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்கக்கூடும் என கருதுகிறது. எனவே தாக்குதல் நடத்தினால் அதை சமாளிக்க ஈரான் ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தயார் நிலையில் ராணுவம் உள்ளது.
இதுகுறித்து ஈரான் ராணுவ தளபதி ஜெனரல் ஹசன் பிரோஷாபடி கூறும்போது, இஸ்ரேலின் எந்த மிரட்டலையும் சந்திக்க தயாராக உள்ளோம். அதற்கான ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன. அவர்கள் தாக்கினால் பதிலுக்கு நாங்களும் தாக்குவோம் என்றார்.
பலஸ்தீன் யுனஸ்கோ உறுப்புரிமை தொடர்பாக இலங்கை
பலஸ்தீனுக்கு யுனஸ்கோ உறுப்புரிமை வழங்கப் பட்டமைக்கு இலங்கை தமது முழு ஆதரவினையும் தெரிவிப்பதாக தேசிய மரபுரிமைகள் தொடர்பான அமைச்சர் ஜெகத் பாலசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான இலங்கையின் நிலைப்பாடு தொடர்பான அறிக்கையை, பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் அமைந்துள்ள யுனஸ்கோ தலைமையகத்தில் இடம்பெற்றுவரும் 36 வது யுனஸ்கோ கூட்டத்தொடரில் சமர்பித்த அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முஹம்மது நபியை கார்டூன் வரைந்த பத்திரிகை அலுவலகத்திற்கு தாக்குதல்
முகமது நபியின் கார்டூன் சித்திரம் ஒன்றை முன்-அட்டையில் வெளியிட்ட பிரான்ஸிலுள்ள அரசியல் நையாண்டி சஞ்சிகையான ஷார்லி எப்தோவின் அலுவலகம் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடந்துள்ள அதேவேளைசம்பவத்தை அந்நாட்டுப் பிரதமர் பிரான்ஸுவா பியோன் கண்டித்துள்ளார்.
கருத்துச் சுதந்திரம் என்பது பிரான்ஸ் ஜனநாயகத்தில் பறிக்கப்பட முடியாத உரிமை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் பிரான்ஸுவா ஃபியோன், இவ்வாறான வன்முறைகளை நியாயப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
முடிந்தால் உதவுங்கள்
20 வருடங்களுக்கு முன்னர் தனது வீட்டில் பணிப் பெண்ணாக பணியாற்றிய இலங்கைப் பெண் ஒருவ ரைத் தேடி சவூதி அரேபியாவின் தாயிப் நகரைச் சேர்ந்த செல் வந்தர் ஒருவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். தனது முன்னாள் பணிப் பெண்ணுக்கு பெறுமதியான பல பரிசுப் பொருட்களை எடுத்து வந்துள்ள அவர் கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் தங்கியுள்ளார்.Wednesday, November 2, 2011
வெளிநாட்டு உரைகளில் ஓரளவு முஸ்லிம்களையும் தொட்டுக் கொள்கின்றார் இரா.சம்பந்தன்
இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்க வேண்டிய கட்டாய நிலைக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை வழங்குமாறு சர்வதேசம் இலங்கைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இதை நாம் சாதகமாகப் பயன்படுத்தி தமிழ் மக்கள் தங்கள் வாழ்விடங்களில் சகல உரிமைகளுடன் வாழும் நிலையை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கனடாவில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கல்வி பாடத்திட்டத்தை விமர்சிக்கும் பரீட்சைகள் ஆணையாளர்
Tuesday, November 1, 2011
யுனெஸ்கோவுக்கு அமெரிக்கா நிதியுதவியை நிறுத்தப் போவதாக எச்சரிக்கை
பலஸ்தீனத்தை ஒரு முழு உறுப்பினராக சேர்த்துக்கொள்வதற்கு ஆதரவாக ஐ.நா.மன்றத்தின் கலாச்சார மற்றும் அறிவியல் கழகமான யுனெஸ்கோ வாக்களித்துள்ளது. யுனெஸ்கோ மன்றக் கூட்டம் பலஸ்தீனம் என்ற பெயரைக் குறிப்பாகப் பயன்படுத்தி முன்வைக்கப்பட்ட இந்த தீர்மானத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் கடுமையாக எதிர்த்தன. ஆனாலும் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு அமெரிக்கா பச்சைக்கொடி காட்டியது
அமெரிக்காவின் ஒபாமா நிருவாகம் ஈரான் மீதான திடீர் தாக்குதலிற்கு இஸ்ரேலிய அரசிற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. எல்லை கடந்த பயங்கரவாதம், சதி நாச முயற்ச்சி போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தமது ஊடக ஊதுகுழல்கள் மூலம் தொடர்ச்சியாக சொல்வதன் மூலம் சர்வதேச ஒத்துழைப்பை இதற்கு பெற்றுக்கொள்ளலாம் என திட்டமிட்டுள்ளது அமெரிக்கா. அமெரிக்க இராஜாங்க செயலக மிக முக்கிய அதிகாரி ஒருவரால் மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.
முஸ்லிம் நாடுகள் நம்பிக்கையீனத்தை குறைக்கவேண்டும் - துருக்கி உபதேசம்
தமது நாட்டில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் தமக்கிடையிலான நம்பிக்கையீனத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என துருக்கி தெரிவித்துள்ளது.
ஒத்துழைப்புகளுக்கான புதிய காலப் பகுதியை இரண்டு அயல் நாடுகளும் ஆரம்பிக்க வேண்டும் என துருக்கி விரும்புவதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. நாட்டிலுள்ள ஆயுததாரிகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதாக இரண்டு நாடுகளும் பரஸ்பர குற்றஞ்சாட்டியுள்ளதால் இரு தரப்பு உறவுகள் பாதிப்படைந்துள்ளன.
தலிபான் மற்றும் அதன் வலையமைப்பான ஹக்கானி ஆயுததாரிகளுக்கு பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ். ஐ உதவிகளை வழங்குவதாக ஆப்கானிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது
தலிபான் மற்றும் அதன் வலையமைப்பான ஹக்கானி ஆயுததாரிகளுக்கு பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ். ஐ உதவிகளை வழங்குவதாக ஆப்கானிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது
ஓரினச் சேர்க்கையை எதிர்ப்பின் நிதி நிறுத்தம் - இலங்கையை எச்சரிக்கிறது பிரிட்டன்
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக செயற்படும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிர்காலத்தில் உதவிகளை வழங்கப் போவதில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது. ஓரினச் சேர்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அரசாங்கங்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகளை ரத்து செய்ய நேரிடும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமருன் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)































Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time