Thursday, June 30, 2011

ஈரான் நடத்திய ரகசிய ஏவுகணை சோதனை: இங்கிலாந்து குற்றச்சாட்டு

Best Blogger Tips
அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று இலக்குகளை தாக்கும் ஏவுகணை சோதனைகளை நடத்த ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது.
ஆனால் தடையை மீறி ரகசியமாக அணு ஆயுத ஏவுகணை சோதனையை கடந்த வாரம் ஈரான் நடத்தியுள்ளது என இங்கிலாந்து குற்றம் சாட்டியுள்ளது.
மிகவும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த ஏவுகணை இஸ்ரேல் அல்லது வளைகுடா நாடுகளைச் சென்று தாக்கும் திறன் கொண்டது என்று இங்கிலாந்து கூறியுள்ளது.
இதுபற்றி இங்கிலாந்து வெளியுறவு துறை செயலாளர் வில்லியம் கேக் கூறுகையில்,"கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி இதுவரை மூன்று ஏவுகணை சோதனைகளை ஈரான் ராணுவம் ரகசியமாக நடத்தியுள்ளது. தற்போது அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்குகளை தாக்க கூடிய ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கிறது. இது ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்துக்கு விரோதமானது" என்றார்.
ஆனால் இங்கிலாந்தின் இந்த குற்றச்சாட்டை ஈரான் அரசு மறுத்துள்ளது. ஈரானுக்கு எதிராக உலக நாடுகளை திசை திருப்ப இங்கிலாந்து மேற்கொள்ளும் சூழ்ச்சி இது என்று அந்நாட்டு வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
News:Lankasri

நாம் நீதிகேட்டு வாதாடவும் போராடவும் தயங்காமல் தயாராகவுள்ளோம்: பைசர் முஸ்தபா

Best Blogger Tips
அரசாங்கத்தின் ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்தில் கீழ் ஊவா மாகாண முஸ்லிம் பாடசாலை எதுவும் தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் கருத்துரைத்துள்ள தொழில்நுட்ப ஆராட்சி பிரதிமைச்சர் பைசர் முஸ்தபா 1000 பாடசாலைகளை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஊவா மாகாணத்தில் ஒரு முஸ்லிம் படசாளையேனும் தெரிவு செய்யப்படாமை குறித்து முன்னெடுக்க படும் நடவடிக்கைகள் வெற்றி தராவிடின் நீதிமன்றம் சென்று நியாயம் கோரவும் தயங்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவரின் உரையில் ஜனாதிபதின் போதனை படி சகலருக்கும் சரிசமமான சேவைகள் செய்யப்படவேண்டும் தனிப்பட்ட ஒரு சாராருக்கு அநீதி இழைக்கப் படக்கூடாது. அதை நாம் அனுமதிக்க முடியாது அப்படி எதுவும் பட்சத்தில் நாம் நீதிகேட்டு வாதாடவும் போராடவும் தயங்காமல் தயாராகவுள்ளோம்  விரிவாக   ஊவா மாகாண முஸ்லிம் கல்வி தொடர்பான மலையக முஸ்லிம் மாநாடு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பிரதம அதீதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ள போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவரின் உரையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மூலம் நான் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவன் ஒரு இக்கட்டான நிலையில் நான் அதிலிருந்து வெளியேறினேன் நான் நன்றி மறந்தவன் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் என்னை திட்டியது ஒன்றும் தவறல்ல ஆனாலும் என் சமுதாயத்திற்கு நான் நன்றியுடையவனாக இன்று மலையகத்தில் 600 பேர் ஆசிரியர்களாக உருவாக்கபட்டுள்ளார்கள் இதற்கு நான் சந்தேசமும் திருப்பதியும் பெருமிதமும் அடைகின்றேன் .
நான் உள்ளிட்ட அமைச்சர் ரவூப் ஹகீம் , பிரதியமைச்சர் காதர், பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் ஆகிய நால்வரும் மத்திய மாகாணத்தில் , கண்டி மாவட்டத்தில் எமது பிரதிநிதித்துவம் மூலம் நமது மக்களுக்காக பல்வேறு பணிகளை எம்மால் முடிந்த அளவு புரிந்து வருகின்றோம் .
உங்கள் ஊவா மாகாணத்தில் நியாயமான வாக்காளர் தொகை இருந்தும் கூட இரண்டு முஸ்லிம் பிரதிநித்துவம் தவரிவருகின்றமை துரதிஷ்டவசமானது நியாயமான வாக்காளர் தொகை இருந்தும் கூட ஊவாவின் வரலாற்றில் இதுவரை ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரைக் பெற்றுகொள்ள முடியவிலை என்பது வருத்தமானது இது தொடர்பாக நாம் சமூக நோக்கம் கருதி தூர நோக்குடன் சிந்தித்து செயலாற்றவேண்டும்.
முயற்சி செய்தால் முடியாத காரியம் எதுவும் இல்லை அப்படி உறுதியுடன் பதுளை மாவட்டத்தில் யாராவது ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரை உருவாக்கி முதல் சாதனை படைக்கும் பச்சத்தில் நாம் நமக்காகவும் நமது சமுதாயதிற்காகவும் மிகுந்த பலனை மேலும் மேலும் பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
News:Lankamuslim

காத்தான்குடி மீது BBC ஊடகவியலாளருக்கு ஏன் இந்த காழ்ப்புணர்வு?

Best Blogger Tips
காத்தான்குடி இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருக்கின்ற குறைந்த நிலப்பரப்பில் அதிக சனத்தொகையை கொண்ட ஒரு சிறிய அழகிய நகரம். இங்கு வாழ்கின்ற அனைத்து மக்களும் முஸ்லிம்களாக இருப்பதாலும், இங்கு காலம் காலமாக இருந்து வருகின்ற சமூக, கலாச்சார, பாரம்பரிய மற்றும் மார்க்க ரீதியிலான தலைமைத்துவ வழிகாட்டலின் விளைவாலும் இந்த நகரம் ஏனைய நகரங்களை விடவும் ஒரு தனித்துவ நகராக மிளிர்ந்து காணப்படுகின்றது.
வர்த்தக ரீதியில் கிழக்கிலங்கையின் முக்கிய நகராகவும், தலை சிறந்த வர்த்தகர்களையும் சிறந்த சிந்தனையாளர்களையும் தன்னகத்தே கொண்டு அனைத்து துறைகளிலும் விரைவான முன்னேற்றம் கண்டு வருகின்றது என்றால் அது மிகையாகாது.
அதே வேளையில் நமது நாட்டில் அவ்வப்போது ஏற்படுகின்ற பல்வேறுபட்ட அனர்த்த சூழ்நிலைகளில் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கப்பால் நின்று பொருளாதார ரீதியிலும் மற்றும் இன்னோரன்ன வழிகளிலும் பாரிய உதவிகளை செய்து வருகின்ற கட்டமைப்பை கொண்ட ஒரு நகரம் என்பது பல சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் காத்தான்குடி தொடர்பாகவும் அண்மைக்காலத்தில் அங்கு இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பாகவும் ஒரு சில ஊடகங்களும், குறிப்பாக ஒரு சில குறுகிய மனப்பான்மையுடன் செயற்பட்டு வரும் ஊடகவியலாலர்களும் சர்வேதேசரீதியில் காத்தான்குடிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை திரிபுபடுத்த முனைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. இதற்காக தான் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகங்களை இவர்கள் தவறாக பயன்படுத்துகின்றார்கள்.
கடந்த 20 ம் திகதி காத்தான்குடியில் இரண்டு பள்ளிமாணவிகள் குறிப்பிட்ட சில இளைஞர்களால் கலாச்சாரத்தை மீறியது தொடர்பில் விசாரிக்கப்பட்ட சம்பவமானது பல்வேறு ஊடகங்களில் முக்கிய செய்தியாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக BBC தமிழ் சேவையானது இந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதுடன் சம்பவத்துடன் சம்பந்தமில்லாத ஒரு சில விடயங்களை இணைத்து செய்தியை திசைதிருப்ப எத்தனித்திருந்தது.
இந்த செய்தி குறிப்புகளை தொகுத்து வழங்கியிருந்த ஊடகவியலாளர் N.உதயகுமார், வெறுமனே ஒரு சில இளைஞர்களின் தனிப்பட்ட ஆத்திர உணர்வுகளின் விளைவாக இடம்பெற்ற கலாச்சார பின்னணி பொருந்திய இந்நிகழ்வை ஒரு பெரிய சம்பவமாக காட்டியதோடு மாத்திரமல்லாமல் இது ஒரு மத அடிப்படைவாதம் எனும் போக்கில் செய்தியை தனது விருப்பத்திற்கேற்ப திரிபுபடுத்த முனைந்துள்ளார். இவர் தனது கருத்திற்கு வலு சேர்ப்பதற்கு இந்த செய்திக்கு தொடர்பில்லாத வேறுபல செய்திகளை இணைத்துள்ளார்.
இந்த நிகழ்வு தொடர்பாக ஏற்கனவே கௌரவ பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் சட்டத்தரணியும், சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான எஸ்.எம்.எம்.பஷீர் அவர்களும், இது ஒரு மத அடிப்படைவாதப் பிரச்சினை அல்ல, கலாச்சாரப் பிரச்சினையே என்று BBC தமிழோசைக்கு மிகவும் தெளிவாக செவ்வி வழங்கி இருந்தனர்.
இருந்த போதும் ஊடகவியலாளர் உதயகுமார், மத அடிப்படைவாதம் என்ற கருத்தை மீண்டும் மீண்டும் விதைக்க முனைவதை தெளிவாக அவதானிக்க முடிகின்றது.
ஒரு சமூகம் என்பது பல தனிமனிதர்களின் கூட்டு. அதில் பல்வேறுபட்ட வித்தியாசமான குணாதிசயங்களைகொண்ட மனிதர்கள் காணப்படுவார்கள். ஒரு சிலரின் நடத்தையால் மொத்த சமூகமும் வேருபாதை நோக்கி நகர்வதாக கூறமுடியாது. அந்த வகையில், இந்த சம்பவத்தில் சம்பத்தப்படும் ஒற்றை இலக்கத்தில் உள்ள சில இளைஞர்களின் தனிப்பட்ட ஆத்திர உணர்வுகளை 60,000 மேற்பட்ட மக்கள் வசிக்கும் காத்தான்குடியின் மொத்த மக்களின் உணர்வாக கருத முடியாது.
ஆனால் உதயகுமார், சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இளைஞர்களின் நடவடிக்கையை மத அடிப்படைவாத சந்தேகத்தை ஏற்படுத்தி மொத்த காத்தான்குடியே மத அடிப்படைவாதத்தோடு இணைக்க முற்படுகின்றார். அனாமேதயமாக சில மட்டங்களில் அடிப்படைவாதம் தலைதூக்குகிறதா என்ற அச்சம் நிலவுகிறது என்று செய்தி புனையப்பட்டுள்ளது.
காத்தான்குடி முஸ்லிம் சமூகத்திற்கு திட்டமிட்ட வகையில் சர்வதேசரீதியில் சேறுபூசும் இந்த நடவடிக்கையானது, இவர் காத்தான்குடி மீது தனிப்பட்ட காழ்ப்புணர்வை கொண்டுள்ளாரா அல்லது வேறு யாரினதும் விருப்பத்தின்பால் செயற்படுகின்றாரா என்று என்ன தோன்றுகின்றது. இதற்காக மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற சர்வதேச வலையமைப்பான BBC தமிழோசையினை பயன்படுத்துவது மிகவும் வேதனைக்குரிய விடயம்.
கடந்த 28 ம் திகதி இவர் BBC தமிழ் சேவையில் காத்தான்குடி தொடர்பாக தொகுத்து வழங்கிய குறிப்பில் தான் சொல்ல வந்த விடயத்திற்கு எந்தவித சம்பந்தமும் அற்ற வகையில் காத்தான்குடியில் இருக்கின்ற ஏற்கனவே பல தடவைகளில் உண்மைத்தன்மை நிரூபிக்கப்பட்ட அரபு மொழியிலான பெயர்ப்பலகை விடயத்தை சுட்டிக்காட்டி இருந்தமையானது இவர் காத்தான்குடி மேல் கொண்டிருக்கின்ற தனிப்பட்ட குரோதத்தின் உச்ச வெளிப்பாடாகவே காத்தான்குடி மக்களால் பார்க்கப்படுகின்றது.
மாத்திரமின்றி, பள்ளிமாணவிகள் விசாரிக்கப்பட்டது தொடர்பில் காத்தான்குடியின் தாய் நிறுவனமும், அனைத்து காத்தான்குடி மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமைத்துவத்தை வழங்குகின்ற காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் இந்த செய்தி தொடர்பில் உண்மையான நிலைப்பாட்டை விளக்கும் உத்தியோகபூர்வ செய்தியாளர் மாநாட்டிற்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தும், உதயகுமார் உட்பட எந்தத் தமிழ் ஊடகவியலாளரும் அங்கு வருகை தராமல் அதை புறக்கணித்திருந்தமையும் இவர்களது அநாகரீக ஊடக செயற்பாட்டுக்கு ஒரு நல்ல உதாரணமாகும்.
இது தவிர இவர் கடந்த காலங்களிலும் தனது செய்திகளின் ஊடாக காத்தான்குடி நகர் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நோக்கி நகர்வதாக திரிவுபடுத்த முனைந்துள்ளர். இதற்காக BBC தமிழ் சேவையினை பயன்படுத்தியுள்ளார்.
அதிலும் குறிப்பாக காத்தான்குடி பிரதான வீதியில் பிரதியமைச்சர் MLAM ஹிஸ்புல்லாவின் அபிவிருத்தி வழிகாட்டலில் பேரீச்சம் மரங்கள் நடப்பட்டது தொடர்பிலும், அரபு மொழியை தங்களது புனித மொழியாக நேசித்து அதனை 95% க்கு அதிகமான மக்களும் அறிந்து இருக்கின்ற காத்தான்குடி நகரில் ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவன அனுசரணையில் அரபு மொழி மற்றும் ஏனைய தேசிய மொழிகளிலான வீதி பெயர்ப்பலகைகள் அமைக்கப்பட்டது தொடர்பிலும் இவர் எந்தவித அடிப்படையும் அற்ற வகையில் மத அடிப்படைவாதத்தை இணைக்க முனைந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த அபிவிருத்திகள் வெறுமனே கலாச்சாரம், அழகியல் மற்றும் தேவைப்பாடுகள் சார்ந்த அபிவிருத்திகளே அன்றி இதற்கு பின்னால் எந்த வித பின்னணியும் கிடையாது.
ஆயினும் எந்தவித அடிப்படையும் அற்ற வகையில் சர்வதேரீதியில் காத்தான்குடிக்கு சேறுபூசும் இவரின் இந்த அணுகுமுறை சொந்த குரோத்தத்தின் வெளிப்பாடா என்று என்ன தோன்றுவதோடு, பல்வேறு பட்ட காத்தான்குடி சமூக, சிவில் அமைப்புகளினதும், பொதுமக்களினதும் கண்டனத்திற்கும் ஆத்திரத்திற்கும் உள்ளாகி இருக்கின்றது.
இது தொடர்பிலான உண்மையை தான் அறிந்து இருந்தும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்றே காத்தான்குடி மீதான இவரது சொந்த எதிர்ப்பை திரிவு படுத்தப்பட்ட செய்திக்குறிப்புகளினூடாக உலகச் சேவையான BBC ஐ பாவித்து வெளியிட்டு வருகின்றமை கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
அத்தோடு மாத்திரமல்லாமல், கடந்த காலங்களில் மட்டக்களப்பு நகரில் ஏற்பட்ட இன முரண்பாடுகளுக்கும் இவரது ஒரு சில திரிபு படுத்தப்பட்ட செய்திகள் காரணமாக இருந்தமை தொடர்பில் இவர் பல கண்டனங்களை எதிர்நோக்கி இருந்தார் என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
எனவே இவ்வாறு தொடர்ச்சியாக தனது காழ்ப்புணர்வை வெளியிட்டு வருகின்ற உதயகுமாரின் குரோத நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதோடு, இவ்வாறான இவரது நடவடிக்கைகளுக்கு BBC சேவையானது இடம் கொடுக்கக்கூடாது என்பதும் இவ்வாறானவர்களின் நடவடிக்கை தொடர்பில் பொது மக்கள் விழிப்பாக இருந்து அனைத்து இனங்களின் சுய கலாச்சார மத மற்றும் பண்பாட்டு ரீதியான விடயங்களை செய்வதற்கு சுதந்திரம் உள்ள ஒரு நாட்டை கட்டி எழுப்புவதற்கு பல்லோரும் பாடு பட வேண்டும்.
News:Lankamuslim

Tuesday, June 28, 2011

ரிஸானா தண்டனை தொடர்பான தகவல் மறுக்கபட்டுள்ளது

Best Blogger Tips
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை பணிப்பெண் ரிஸானா நபீக்கின் மரண தண்டனையை நிறைவேற்ற சவூதி அரேபிய அதிகாரிகள் கட்டளையிட்டுள்ளதாக நேற்று SMS ஊடாக பரவிய செய்தியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மறுத்துள்ளது மேலும் தாம் இலங்கை பணிப்பெண் ரிஸானா நபீக்கை விடுதலை செய்ய கடுமையாக முயன்றுவருவதாகவும் தெரிவித்துள்ளது. நேற்று மற்றும் நேற்று முன்தினம் சில வெளிநாட்டு ஆங்கில இணையத்தளத்திலும்  இந்த மரண தண்டனை செய்தி வெளியானமை குறிபிடத்தக்கது .
குழந்தையொன்றை கொலை செய்தாரென்ற குற்றச்சாட்டின் பேரில் 2005 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி ரிஸானா நபீக் சவூதி அரேபியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தவாத்மி மேல் நீதிமன்றம் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரிஸானா நபீக்கு மரண தண்டனை விதித்திருந்தது விரிவாக
இதன் பின்னர் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் ஹொங்கொங்கை தலைமையகமாகக் கொண்டியங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிதி உதவியுடன் ரிஸானா நபீக் சார்பாக சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்திருந்தது.
இதன் பிரகாரமே ரிஸானா நபீக் மீதான தவாத்மி மேல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ரியாத்திலுள்ள உயர் நீதிச் சபையில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேன்முறையீடு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது அப்துல்லா அல் ரொசாமி தலைமையிலான மூன்று நீதிபதிகளை கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதனை விசாரித்து குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கினர்
ரிஸான விடையத்தில் இலங்கை ஜனாதிபதி ரிஸானா நபீக்குக்கு மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று சவுதி மன்னரிடம் கோரிக்கை விடுத்தார் அகில இலங்கை ஜம்மியதுள் உலமா ரிஸானா நபீக்கின் விடுதலை தொடர்பில் அந்நாட்டு உலமாக்கள் மூலமாக ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தது சம்மந்தப்பட்ட சவூதி பெற்றோரிடம் மன்னிப்பு வழங்குமாறு இலங்கை மக்கள் சார்பாக கேட்டு கொள்வதாகவும் அறிவித்தது.
இந்த நிலையில் ரிஸானாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான போதும் அது உறுதிப்படுத்தப்படவில்லை தற்போது அவர் உளநலம் பாதிக்கப்பட்டவராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
இந்த மாதம் 17 ஆம் திகதி இலங்கை கைத்தொழில்துறை வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியூதீன் ரியாத் ஆளுநர் சல்மான் பின் அப்துல் அஸீஸைச் சந்தித்து . ரிஷானாவின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருந்துள்ளார் என்று தெரிவிக்கபடுகின்றது.
ஆனால் வேறு சில வெளிநாட்டு ஆங்கில இணையத்தளத்திலும் நேற்று மற்றும் நேற்று முன்தினம் இந்த மரண தண்டனை செய்தி வெளியானமை குறிபிடத்தக்கது.
News:Lankamuslim

ஆசிய – ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் புதிய தலைவராக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்

Best Blogger Tips

ஆசிய – ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின்- the Asian and African Legal Consultative Organisation- புதிய தலைவராக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்துள்ளார் . ஆசிய – ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் ஐம்பதாவது வருடாந்த அமர்வு கொழும்பு சினமன்லேக் சைட் ஹோட்டலில் நேற்று ஆரம்பமானது.
இச்சர்வதேச அமர்வை ஜனாதிபதி அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் நடைபெற்ற பிற்பகல் அமர்வின்போது இந்த அமைப்பின் தலைவராக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்துள்ளார். நேற்று முதல் ஜுலை மாதம் முதலாம் திகதி வரையும் நடைபெறவிருக்கும் இந்த சர்வதேச அமர்வை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுக் காலை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார் விரிவாக
இந்த சர்வதேச அமர்வில் ஆசிய ஆபிரிக்கக் கண்டங்களிலுள்ள 47 நாடுகளின் இருநூறு பிரதிநிதிகள் பங்குபற்றியுள்ளனர். இவர்களில் ஒன்பது நாடுகளின் நீதியமைச்சர்கள், சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் ஹிஸாஸி ஓவாடா, ஆறு நாடுகளின் சட்டமா அதிபர்கள் ஆகியோரும் அடங்கியுள்ளனர்.
இந்த அமைப்பின் தலைவராக அமைச்சர் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவ்வமைப்பின் பதவி விலகிச் செல்லும் தலைவரான தன்ஸானியா நாட்டு அரசியல் விவகார, நீதியமைச்சர் செலினா கும்பானி அமைப்பின் தலைமைப் பொறுப்புக்களை அமைச்சர் ஹக்கீமிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளார்.
News:Lankamuslim

தொழில் பெற்றுத் தருவதாக கூறி வடபகுதிக்கு வருபவர்களுடன் யுவதிகளை தனியே அனுப்ப வேண்டாம்!- அனோமா திசாநாயக்க

Best Blogger Tips

வடபகுதிக்கு வந்து தொழில் பெற்றுத்தருவதாக கூறி, உறுதிமொழிகளை வழங்கி அழைப்பு விடுக்கும் நபர்களுடன் யுவதிகளையும் பிள்ளைகளையும் தனித்து அனுப்பவேண்டாம் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி அனோமா திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
தொழில் பெற்றுத்தருவதாக கூறியும் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறியும் வடபகுதியிலிருந்து யுவதிகளை கொழும்புக்கு அழைத்து வந்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
எனவே எக்காரணம் கொண்டும் தொழில் மற்றும் ஏனைய உறுதி மொழிகளை வழங்கி அழைப்பு விடுக்கும் நபர்களுடன் யுவதிகளையும் பிள்ளைகளையும் தனித்து அனுப்பவேண்டாம் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி அனோமா திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
வட பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்ட யுவதிகள் சிலர் கொழும்பில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுவந்த நிலையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளால் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விபரிக்கையிலேயே அதன் தலைவி இந்த கோரிக்கையை விடுத்தார்.
அனோமா திசாநாயக்க இந்த சம்பவம் தொடர்பில் மேலும் விபரிக்கையில்,
வட பகுதியில் இருந்து தொழில் பெற்றுத் தருவதாக அழைத்து வரப்பட்ட ஏழு யுவதிகள் கொழும்பில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் தகவல் அறிந்த நிலையில் எமது சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் குறித்த இடத்துக்கு சென்றனர். எனினும் அங்கிருந்தவர்கள் அவ்வாறு ஒருவரும் இல்லை என்று கூறி விட்டனர். எனினும் சந்தேகம் கொண்ட எமது அதிகாரிகள் அந்த இடத்தை சோதனையிட்டுள்ளனர்.
அப்போது அலுமாரி போன்ற சிறிய இடம் ஒன்றில் ஏழு யுவதிகள் அடைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அதனைக் கண்ட எமது அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துவிட்டனர். பின்னர் அவர்களை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்கள் தற்போது நீதிமன்ற பிணையில் அவர்களின் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவருக்கு சமூக நோய் ஏற்பட்டுள்ளதாக வைத்திய அறிக்கை கூறுகின்றது.
மேலும் ஏற்கனவே குறிப்பிட்ட இடத்தில் இருந்து தப்பிய சிறுமி ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு குறிப்பிட்ட பெண்கள் மீட்கப்பட்டனர். இதனை நடத்திச் சென்றவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட சிறுமி எமது பொறுப்பிலேயே இருக்கின்றார்.
இந்நிலையில் முக்கியமாக வடபகுதி மக்களிடம் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன்.
அதாவது எக்காரணம் கொண்டு தொழில் மற்றும் ஏனைய உறுதிமொழிகளை வழங்கி அழைப்பு விடுக்கும் நபர்களுடன் பெண்களையும் யுவதிகளையும் தனித்து அனுப்பவேண்டாம் என்ற கோரிக்கையை விடுக்கின்றேன்.
இது தொடர்பில் பெற்றோரும் பாதுகாவலர்களும் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டும்.
இவ்வாறு தொழில் பெற்றுத்தருவதாகவும் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறியும் கொழும்புக்கு அழைத்து வந்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்கள் தெரியவந்துள்ளதால் இந்த விடயத்தில் பெற்றோரும் பெரியோரும் கவனமாக இருக்கவேண்டும் என்றார்.
News:Inioru

சகோதரி ரிஸானா விவகாரம் - அரசாங்கம் நாடகமாடுகிறதாம்

Best Blogger Tips
இலங்கைப் பணிப்பெண் ரிஸானா நபீக்கின் தண்டனையைக் கொண்டு அரசாங்கம் அரசியல் நடத்த முற்பட்டது என ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் லக் வனிதா அமைப்பின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சாந்தினி கோங்ஹாகே இந்த குற்றசாட்டை முன்வைத்தார். மேலும் அவர் ரிஸானா நபீக் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில,

ரிஸானா நபீக்கின் பிரச்சினையை வைத்து அரசியல் லாபம் தேட அரசாங்கம் முயற்சித்தமையினாலேயே இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ரிஸானா நபீக்கிற்கு சவுதி அரேபியாவில் கழுத்து துண்டிக்கப்படும் என தண்டனை வழங்கப்பட்டுள்ளதென்ற செய்தியை கேட்டவுடன் இன்று முழு நாடும் கலங்கிப்போயுள்ளது.

சவுதி அரேபிய அரசாங்கம் இத்தண்டனையை வழங்கியுள்ளமை எமக்கு நேற்று மாலையே அறியக்கிடைத்தது. டிசம்பர் மாதம் 7ம் திகதி, ரிஸானா நபீக்கிற்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை செயற்படுத்துவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் கோரிக்கையால் சவுதி அரேபிய மன்னரால் கைவிடப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா விசேட உரை நிகழ்த்தினார்.

ரிஸானாவுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தண்டனை குறித்து பல மகளிர் சங்கங்களை இணைத்துக் கொண்டு ஒரு இலட்சம் கையெழுத்துக்களைப் பெற்று ரிஸானாவை காப்பாற்ற செயற்பட்டு வந்தோம். ஆனால் அமைச்சரின் இந்த அறிவிப்பால் எமது திட்டம் முடங்கிப்போனது. அதனால் இதன் முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும். என்றார்.
News:Lankasri

Monday, June 27, 2011

இலங்கை மாலைதீவு இடையிலான பாரிய போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த கும்பல் கைது!

Best Blogger Tips
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் பாரிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் சம்பந்தப்பட்டிருந்த ஒரு குழுவினரை மாலைதீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக 2009ஆம் ஆண்டு ஒபரேஷன் செலேனஜ் (Operation Challenge) என்ற பெயரில் முடுக்கிவிடப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலமே இந்தக் குழுவினரை கைது செய்துள்ளதாக மாலைதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து மாலைதீவிற்கு ஆகாயமார்க்கமாக போதைப் பொருட்கள் கடத்தப்பட்டமை இந்த விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த போதைப்பொருள் கடத்தல் குழுவின் தலைவரென சந்தேகிக்கப்படும் இப்ராஹிம் சப்ராஸ் மற்றும் மூவர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்குழுவினர் 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இப்போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளனர் எனவும் நாணயமாற்று முகவர் நிலைய ஒன்றின் உதவியின் ஊடாக பணப் பரிமாற்றம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மாலைதீவு பொலிஸார் சந்தேகநபர்கள் நால்வரையும் ஜூலை மாதம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்


இலங்கையில் கட்டணம் செலுத்தி பயணிக்கும் அதிவேக நெடுஞ்சாலை

Best Blogger Tips
இலங்கையில் நிறுவன ரீதியலான பராமரிப்பைக் கொண்டதும் கட்டணம் செலுத்திப் பயணிக்கக் கூடிய அதிவேக நவீன நெடுஞ்சாலையொன்று அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.


கொட்டாவ முதல் பின்னதுவ வரையிலான இந்த அதிவேக நெடுஞ்சாலையை குத்தகைக்கு 99 வருட கால அவகாசம் கொண்டதாக இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தபனத்திற்கு வழங்கப்படவுள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசகர்களின் தவறான ஆலோசனைகளே சர்வதேச நெருக்கடிகளை உருவாக்குகின்றன: அமைச்சர் பசில் ராஜபக்ஷ

Best Blogger Tips

ஜனாதிபதியைச் சுற்றியிருக்கும் ஆலோசகர்களின் தவறான ஆலோசனைகள் காரணமாகவே இலங்கைக்கு சர்வதேச நெருக்கடிகள் உருவாகக் காரணமாக அமைந்திருப்பதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சுற்றியுள்ள சில ஆலோசகர்கள்  தொடர்ந்தும் ஜனாதிபதிக்கு தவறான ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக  சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் பசில் ராஜபக்ஷவை சந்தித்த அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர், அவரது அண்மைக்கால அரசியல் மௌனம் குறித்து வினவியபோதே  அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தனது புதல்விக்கு குழந்தை பிறந்திரு்ந்த காரணத்தினால் வெளிநாடு சென்றிருந்தாகவும்,  ஜனாதிபதியை சூழ அதிகளவான ஆலோசகர்கள் இருப்பதாலும் அவர்களின் நடவடிக்கை காரணமாகவும் தான் அமைதியாக இருப்பதாகவும் அமைச்சர் பசில் கூறியுள்ளார்.
பான்-கீ-மூன் குழுவின் அறிக்கை மற்றும் சனல்4 தொலைக்காட்சி ஆகியவற்றின் குற்றச்சாட்டுகளினால் சர்வதேச ரீதியில் எழுந்துள்ள நிலைமை தொடர்பில் சரியான புரிந்துணர்வுடன் பதிலளிப்பதற்கு பதிலாக சிங்கள மக்களை மகிழ்விப்பதற்காக செய்தி அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் பலனில்லை என தெரிவித்துள்ள பசில் ராஜபக்ஷ  இலங்கைக்கு எதிரான எதிர்ப்பின் வலுவான  தன்மையை கடந்த சில நாட்களாக தான் வெளிநாட்டில் இருந்த போது நன்கு உணர்ந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
News:Lankasri

Friday, June 24, 2011

''புலிகளிடம் லஞ்சம் பெற்றவர்கள் இராணுவ உயர் பதவிகளில்'' - பொன்சேக்கா

Best Blogger Tips
உயிரைப் பணயம் வைத்து நாட்டை மீட்டெடுத்த இராணுவ ஜெனரல்களை வீட்டுக்கு அனுப்பிய அரசு, புலிகளிடம் லஞ்சம் பெற்ற இராணுவ உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளது. இதற்குப் பொறுப்பு கூறவேண்டிய பாதுகாப்பு அமைச்சரும், பாதுகாப்புச் செயலாளரும் பதவி விலக வேண்டும்.  இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா  தெரிவித்தார்.

வெள்ளைக்கொடி விவகார வழக்கு  மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  நீதிமன்றினுள் இருந்து வெளியே அழைத்து வரப்பட்ட போது ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த சரத் பொன்சேகா மேலும் கூறியவை வருமாறு,

தொப்பிகலை உட்பட பயங்கரவாதத்தின் பிடியிலிருந்த பகுதிகளை மீட்டெடுப்பதற்கு உயிரைப் பணயம் வைத்து முழுமூச்சாக செயற்பட்ட இராணுவ ஜெனரல்களை அரசு வீட்டுக்கு அனுப்பியுள்ளது.

ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து மாதாந்தம் லஞ்சம் பெற்ற இராணுவ உயர் அதிகாரிகளுக்கு அரசு உயர் பதவிகளை வழங்கியுள்ளது. எனவே, இவற்றுக்குப் பொறுப்பு கூற வேண்டிய பாதுகாப்பு அமைச்சரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் பதவி விலக வேண்டும். இப்படி அவர் கூறினார்.             
News:Yarlmuslim

செல்வந்தர்களை உருவாக்கும் ஆசிய நாடுகள் வரிசையில் இலங்கைக்கு ஆறாவது இடம்

Best Blogger Tips
செல்வந்தர்களை உருவாக்கும் ஆசிய நாடுகள் வரிசையில் இலங்கை ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.
மெரில் லிண்ட் மற்றும் கெப்ஜெமினி ஆகிய நிறுவனங்கள் கூட்டிணைந்து மேற்கொண்ட ஆசியாவில் செல்வந்தர்களை உருவாக்கும் பலம் கொண்ட நாடுகள் தொடர்பிலான ஆய்வுகளின் மூலம் மேற்கண்ட விபரம் தெரிய வந்துள்ளது.
ஹொங்கொங் மற்றும் வியட்னாம் என்பன நூற்றுக்கு முப்பத்து மூன்று வீதம் வேகமான வளர்ச்சியுடன் கூடுதலான அளவில் செல்வந்தர்களை உருவாக்கிய நாடுகள் தொடர்பான பிரஸ்தாப பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.
இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா என்பனவும் இலங்கையை விட முன்னிலையில் அப்பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
அதே நேரம் முதல் தடவையாக ஐரோப்பிய நாடுகளை விட ஆசியாவில் செல்வந்தர்கள் தொகை அதிகரித்துள்ளமை குறித்தும் பிரஸ்தாப அறிக்கையின் புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆயினும் அமெரிக்கா, ஜப்பான், ஜொ்மனி என்பன உலகப் பணக்காரர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வாழும் நாடுகளாகும்.
News:Lankasri

தெஹிவளை பாத்தியா மாவத்தை மஸ்ஜித் விவகாரம்

Best Blogger Tips

கொழும்பு தெஹிவளை கல்போவில பாத்தியா மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜித் விவகாரத்தை தெஹிவளை பெரியபள்ளி நிர்வாகம் கையாண்டு வருகின்றது, சமந்தப்பட்டவர்களுடன் பேசுவதுடன் அரசியல் வாதிகளுடனும் இது தொடர்பாக பேசிவருகின்றது தற்போது ஜமாஅத் தொழுகை நிறுத்தபட்டுள்ள நிலையில் கூட்டு தொழுகை இன்றி ஒவ்வொருவரும் தனித்தனியாக தொழுது வருமாறு கேட்கப்பட்டுள்ளனர் .
குறித்த மஸ்ஜித் நிர்வாகமும் மற்றும் தெஹிவளை கல்போவில பெரிய பள்ளி நிர்வாகமும் கூட்டு தொழுகை இன்றி ஒவ்வொருவரும் தனித்தனியாக தொழுது வருமாறு  கேட்டுள்ளது என்றும் அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக தற்போது பகல் நேரங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது இதனால் தொழும்போது தாக்கப்படுவோம் என்ற அச்சம் இன்றி தனியாக தொழுது வருவதாகவும் அந்த மஸ்ஜிதின் தினமும் தொழுகையில் ஈடுபட்டுவரும் முஹமத் lankamuslim.org க்கு தெரிவிக்கின்றார் விரிவாக
பாத்தியா மாவத்தையில் கடந்த பத்து வருடங்களாக இயங்கிவந்த அல் பௌசுல் அக்பர் மதரஸா என்ற மாலை நேர சிறுவர் அரபு பாடசாலை அதன் பின் பகுதியில் நிர்மானிக்கப்பட்ட மஸ்ஜித் ஒன்றுடன் மஸ்ஜித்தாக இயங்கிவந்தபோது அந்த மஸ்ஜிதில் நுழைந்த பெளத்த மதகுருமார்கள் சிலர் அதனை மூடிவிடுமாறு அச்சுறுத்தல் எச்சரிக்கை விடுத்துள்ளதாலும் அதை தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல் நிலை காரணமாகவும் மஸ்ஜித் கடந்த ஞாயிற்று கிழமையுடன் ஜமாஅத் தொழுகைகள் நடைபெறாது மூடப்பட்டது என்பது குறிபிடத்தக்கது.
News:Lankamuslim

Tuesday, June 21, 2011

முஸ்லிம்கள் தாய்மொழியாக தமிழைக் கற்பதில் ஆர்வமூட்டிய அறிஞர் அஸீஸ்

Best Blogger Tips
1950 ஆம் ஆண்டுகளில் தேசியவாத அலை நாட்டில் பரவலாக வீசிய போது மிகவும் துணிச்சலுடன் சரியான தீர்மானத்தை சரியான நேரத்தில் மேற்கொள்வதில் அறிஞர் அஸீஸ் சிறந்து விளங்கினார். உத்தியோகபூர்வ மொழி என்ற விவகாரம் தலைதூக்கிய போது அறிஞர் அஸீஸ், முஸ்லிம்களை பொறுத்தவரை தாய்மொழியாக தமிழைக் கற்பதிலேயே ஆர்வம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தினார் என்று நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் 61 ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மேலும் உரையாற்றிய நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் விரிவாக தூர நோக்கும், தூய போக்கும் கொண்ட மர்ஹும் அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ் 1950 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட வை.எம்.எம்.ஏ.என்ற இந்த இஸ்லாமிய வாலிபர் இயக்கம் நாடு பூராகவும் கிளைகளை அமைத்து வியாபித்துள்ளது
அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் பேரவை ஒரு சமூகம் சார்ந்த இயக்கமாக இருந்த போதிலும் நாட்டில் சகல இனங்களுக்குமிடையில் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்துவதில் முன்னின்று பணியாற்றி வருகின்றது என்றும் இலங்கை சட்டமன்றத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி அஸீஸ் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் நீதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்
மேலும் அங்கு உரையாற்றியுள்ள அமைச்சர் வறுமை ஒழிப்பு, போதைப்பொருள் பாவனைக்கெதிரான செயல்திட்டங்கள், அனர்த்த நிவாரண உதவிகள் போன்றவற்றை முஸ்லிம் வாலிபர் பேரவை வெற்றிகரமாக முன்னெடுத்து வந்திருக்கின்றது. முஸ்லிம்களை பொறுத்தவரை துரதிஷ்டவசமாக சிந்தனை ரீதியான வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறான பலவீனங்களை மேற்கு நாடுகள் சாதகமாக பயன்படுத்தி முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்திரிக்கின்றனர். இஸ்லாத்தில் வகுப்பு வாதம், பிரிவினை வாதம் என்பன இல்லை. அவ்வாறே மேற்கு நாடுகளில் கூறப்படுவது போல இஸ்லாத்தில் தீவிரவாதமும் இல்லை என்றும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும். அவர்களின் பிள்ளைகளின் கல்வி மற்றும் ஒழுக்கம் சார்ந்த விடயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News:Lankamuslim

Sunday, June 19, 2011

சனல் 4 யுத்தக்குற்ற ஆவணப்படத்தை அரசாங்கம் ஆராயும் - ஹக்கீம்

Best Blogger Tips
“சனல் - 4” யுத்தக் குற்ற ஆவணப் படம் தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கண்டியில் மாவட்ட நீதிமன்ற நியாயாதிக்க எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வது தொடர்பாக அங்குள்ள நீதிமன்ற கட்டடத் தொகுதியில் நீதிபதிகளுடனும் சட்டத்தரணிகளுடனும் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன் றிற்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். 
 
நீதியை நிலைநாட்டுவதில் எவருக்கு எந்தவிதமான அநீதியும் இழைக் கப்பட இடமளிக்காத வகையில், நேர்மையாக சகல அம்சங்களும் சீர்தூக்கி ஆராயப்பட்டு பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தாம் உயர் அதிகாரிகளை பணித்துள்ளதாக நீதியமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்
News:Yarlmuslim

பேஸ்புக்கில் ''வாடகைக்கு கொலையாளி'' தேடிய பெண் கைது

Best Blogger Tips
சமூக இணைப்பு இணையத் தளங்களில் ஒன்றான பேஸ் புக் மூலமாக முன்னாள் காதலனை படுகொலை செய்கின்றமைக்கு வாடகைக் கொலையாளி ஒருவரை தயார் செய்து இருக்கின்றார் அமெரிக்காவை சேர்ந்த 20 வயது இளம் தாய்.

இவரின் பெயர் லண்டன் எலே. இவருக்கு ஒரு வயது உடைய பெண் குழந்தை ஒன்று உள்ளது. முன்னாள் காதலன் குழந்தையை கொடுத்து விட்டு ஏமாற்றிக் கொண்டான். இதனால் ஆத்திரம் அடைந்த எலே முன்னாள் காதலனைப் படுகொலை செய்கின்றமைக்கு தீர்மானித்தார். பேஸ் புக் மூலமாக வாடகைக் கொலையாளி ஒருவரை தேடினார். 

எனது குழந்தையின் தகப்பனைக் கொல்கின்றவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்கிற தகவலை பேஸ் புக்கில் பிரசுரித்தார். 18 வயது உடைய இளைஞன் ஒருவர் வாடகைக் கொலையாளியாக கிடைத்தான். இவனின் பெயர் திமோதி பைனம். 

ஆனால் கொல்லப்பட இருந்தவரின் தாய் லண்டனின் பேஸ் புக் தகவலை படித்து இருந்தார். மகனை எச்சரித்தார். புலனாய்வாளர்கள் உஷார் அடைந்தனர். வாடகைக் கொலையாளியின் வீட்டை முற்றுகையிட்டனர். தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கி ஒன்றை அவ்வீட்டில் இருந்து கைப்பற்றினர். லண்டன் எலே, வாடகைக் கொலையாளி திமோதி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு நீண்ட கால சிறைத் தண்டனையை எதிர்நோக்குகின்றார்கள்.



தந்தை இல்லாமல் வளருவது ஏக்கம் நிறைந்தது - தந்தையர் தினத்தில் ஒபாமா

Best Blogger Tips
தந்தையர் தினம் உலகம் முழுவதும் ஒரு தொகையினரால் கொண்டாப்படுகிறது. இதை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஒபாமாபேட்டி அளித்தார். அதில் ஒபாமா கூறியதாவது, நான் சிறுவனாக இருக்கும் போது என் அப்பா பிரிந்து சென்று விட்டார். அதனால் தாத்தா, பாட்டியிடம் வளர்ந்தேன். அப்பா இல்லாமல் வளர்ந்தது பெரிய ஏக்கமாக இருந்தது. 

அவர் என்னுடன் இருந்திருந்தால் என் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என நினைத்து ஆச்சர்யப்படுவேன். என் குழந்தைகளுக்கு நான் பொறுப்பான தந்தையாக இருக்க முயற்சிக்கிறேன். ஆனால் சில நேரங்களில் முடியவில்லை. தந்தையாக இருப்பது எனக்கு கஷ்டமான வேலையாக உள்ளது. அதிபராக இருப்பதால் நான் பெரும்பாலும் வீட்டை விட்டு பிரிந்தே இருக்கிறேன். 

என் மகள்கள் மலியா மற்றும் ஷாசாவை வளர்க்க வேண்டிய பொறுப்பை பெரும்பாலும் என் மனைவி மிஷேலே கவனிக்கிறார். குழந்தைகளுக்கு எப்போதும் பெற்றோரின் அன்பு தேவை. அவர்கள் வெற்றியடைந்தாலோ அல்லது தவறு செய்தாலோ நாம் ஆதரவாக இருக்க வேண்டும். தந்தைகள் தங்கள் பிள்ளைகளுக்கு பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும் என்றார்.
News:Yarlmslim

அமெரிக்க நீதிமன்ற அழைப்பானையை ஜனாதிபதி மஹிந்த நிராகரிப்பு

Best Blogger Tips
 நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பாக அமெரிக்க நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணையை மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார். படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட 30 மில்லியன் டொலர் நட்டஈடு கோரும் மூன்று வழக்குகள் தொடர்பாக, மஹிந்தக்கு வொசிங்டன் டிசி நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்தது.

இந்த அழைப்பாணை ஜனாதிபதியின் வதிவிடமான அலரி மாளிகைக்கு முதலில் அனுப்பப்பட்டது. ஆனால் அதை ஏற்க அவர் மறுத்து விட்டதையடுத்து நீதி அமைச்சு அதைப் பெற்றுக் கொண்டுள்ளது. இதுபோன்ற அழைப்பாணைகளுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை என்று நீதியமைச்சின் செயலர் சுகத கம்லத் தெரிவித்துள்ளார். தமது சட்ட நிலைப்பாடு தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்துக்குத் தகவல் தெரிவிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, இந்த நீதிமன்ற நடவடிக்கையானது சிறிலங்க அரசுக்கும் தொல்லை கொடுக்கின்ற வகையில் திட்டமிடப்பட்டதொன்று என  வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “அனைத்துலக ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரகடனத்தின் படி, ஜனாதிபதிக்கு விதிவிலக்கு உள்ளது. எனவே, மகிந்த ராஜபக்சவை அமெரிக்காவுக்கு செல்ல விடாமல் தடுக்க முனைவது பயனற்ற செயல்“ என்றும் அவர் கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக நியுயோர்க் செல்வதற்குத் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
News:Yarlmuslim

இலங்கையில் வெளியார் தலையீடுகளை சீனா எதிர்க்கிறதாம்

Best Blogger Tips
இலங்கையின் சுயாதீன தன்மையை தான் உள்ளிட்ட சீன அரசாங்கம் பெரிதும் மதிக்கின்றது எனத் தெரிவித்த சீன ஜனாதிபதி ஹு ஜின்தாவோ (Hu Jintao) இலங்கையின் உள்ளக நடவடிக்கைகளுக்கு தாக்கம் ஏற்படுத்துகிற புறச்சக்திகளுக்கு சீனா எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

இலங்கை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது சீன ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சீன ஜனாதிபதி ஹு ஜின்தாவோ அவர்கள், மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் இலங்கை அரசியலில் உறுதியான நிலை ஏற்பட்டிருக்கிறது எனவும் அபிவிருத்தியும் வேகமாக நடைபெறுகிறது எனவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களைத் துரிதமாக மீளக் குடியமர்த்தியது தொடர்பாகவும் அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்த கொடுத்தது தொடர்பாகவும் பாராட்டுத் தெரிவித்த ஹு ஜின்தாவோ அவர்கள் இலங்கையின் எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்கு தொடர்ச்சியாக தமது ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கிடையில் நட்புறவை வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தது தொடர்பாகத் தனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். இரு நாடுகளுக்கிடையில் அனைத்து துறைகளிலும் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

சீனாவிலிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பை பெரிதும் மதிப்பதாகத் தெரிவித்த இலங்கை ஜனாதிபதி, அது தொட்பில் இலங்கை மக்களின் நன்றியைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். இரு நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்திக் கொள்வது தொடர்பாகவும் இரு தலைவர்களும் கவனம் செலுத்தினர்.
News:Yarlmuslim

Friday, June 17, 2011

அனாதை குழந்தைகளுக்கு இனி அதிபர் ஜர்தாரி தான் தந்தை: பாகிஸ்தான் அறிவுப்

Best Blogger Tips
பெற்றோர் முகவரி தெரியாத சட்டப்படி பிறந்த அனாதை குழந்தைகளுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் தந்தை என்ற இடத்தில் தன்னுடைய பெயரை பயன்படுத்திக் கொள்ளும்படி அந்நாட்டு அதிபர் அசிப் அலி சர்தாரி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் நாட்டின் பத்திரிகை ஒன்றுக்கு அந்நாட்டின் தேசிய புள்ளியியல் மற்றும் பதிவு ஆணையத் தலைவர் மாலிக் தேரிக் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த 2005ம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போதும், இதையடுத்து கடந்தாண்டில் ஏற்பட்ட வெள்ளத்தாலும் ஏராளமான குழந்தைகள் பெற்றோரை இழந்தனர்.
மேலும் சட்டப்படி பிறந்த பல குழந்தைகள் பெற்றோர்களால் கைவிடப்பட்டு தற்போது நாட்டின் சமூக நலத்துறை மையங்களில் தங்கி வருகின்றனர். இக்குழந்தைகளை அவர்களது பெற்றோர்களே இந்த மையத்தில் அனாதையாக விட்டுச் சென்றனர்.
சமீபத்தில் இக்குழந்தைகளுக்கு அடையாள அட்டை வழங்குவதில் தேசிய புள்ளியியல் மற்றும் பதிவு ஆணையத்திற்கு சிக்கல் ஏற்பட்டது. இதுபற்றி அதிபருக்கு தெரியவரவே அக்குழந்தைகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் தந்தையின் பெயராக தன்னுடைய பெயரை சேர்க்க அதிபரே முன்வந்து கேட்டுக் கொண்டார்.
சவுதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகளில் உள்ள சில இஸ்லாமிய பள்ளிகளில் இக்குழந்தைகளை சேர்க்க தேசிய புள்ளியியல் மற்றும் பதிவு ஆணையம் தொடர்பு கொண்ட போது "ஆதாம்" மற்றும் "ஏவாள்" பெயராக பெற்றோர் பெயர் இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த விடயத்தை கையாள்வதில் முன்னணி இஸ்லாமிய நிறுவனங்கள் மற்றும் சவுதி அரேபியா, ஈரான் ஆகிய நாடுகளின் மத குருக்களின் ஆலோசனை பெறப்பட்டது. இவ்வாறு மாலிக் தேரிக் கூறினார்.
News:Lankasri

''முஸ்லிம்களை வாழவிடுங்கள்'' - கொழும்பில் ஆர்ப்பாட்டம் (படம் இணைப்பு)

Best Blogger Tips

சனல் 4 காட்சிகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை - அவுஸ்ரேலிய நிபுணர்.

Best Blogger Tips
இலங்கை இராணுவத்தினர், நிராயுதபாணிகளான தமிழ் மக்களை கொலை செய்ததாக பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிகள் டிஜிட்டல் தொழினுட்ப முறையில் உருவாக்கப்பட்டவை என அவுஸ்திரேலியாவின் டிஜிற்றல் நிறுவனத்தின் பணிப்பாளர் சிறிஹேவா வித்தாரண தெரிவித்துள்ளார்.
சனல் 4 தொலைக்காட்சியின் ஒளிபரப்பப்பட்ட காணொளிகள் ஒருபோதும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்டவை அல்லவென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னிச்சையான சித்திரவதைகள் மற்றும் கொலைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி கிறிஸ்டோபர் ஹேன்ஸ்ஸினால் குறித்த காணொளிகள் அண்மையில் இடம்பெற்ற மனிதவுரிமைகள் மாநாட்டின் போது காட்சிப்படுத்தப்பட்டன.
இதன்போது, கருத்து வெளியிட்டிருந்த அவர், அந்தக் காணொளிகள் நிஜமானவை என அமெரிக்க காணொளி நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அண்மையில் வெளியிடப்பட்ட காணொளிகள், ஏற்கனவே, காணொளிகளை தயாரித்தவரினால் அவற்றில் சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டவை என சிறிஹேவா வித்தாரண தெரிவித்துள்ளார்.
காணொளிகளின் சில பகுதிகளை அவதானிக்கும்போது அவை கையடக்கத் தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்யப்பட்டவையாக இல்லை எனவும், அவுஸ்திரேலிய காணொளி நிபுணர் தெரிவித்துள்ளார்.
எனினும், யுத்த களத்தில் கையடக்க தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் குறித்த காணொளிகள் புகைப்படக் கருவியினாலேயே பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும் என சிறிஹேவா வித்தாரண குறிப்பிட்டுள்ளார்.
News:Thinamalar

பர்தா அணிந்த முஸ்லிம் பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

Best Blogger Tips
முகத்தை மறைக்கும் பர்தா அணிந்து வந்த 2 பெண்கள் பிரான்ஸ் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர் ஆனார்கள்.
கிழக்கு பாரிசில் உள்ள மாக்ஸ் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் முகத்தை மறைக்கும் பர்தாவை அணிந்து அரசு உத்தரவுக்கு எதிப்பு தெரிவித்தவர்கள் ஆவார்கள்.
பிரான்சில் முகத்தை மறைக்கும் பர்தா அணிவதற்கு அரசு தடைவிதித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்த உத்தரவை அரசு பிறப்பித்ததாக தெரிவிக்கப்பட்டது. அரசின் இந்த புதிய சட்டம் அங்கு வசிக்கும் முஸ்லிம் பெண்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தங்கள் மத பண்பாட்டின்படி முகத்தை மறைக்கும் பர்தாக்களை அவர்கள் அணிந்து வருகிறார்கள். அந்த மத நடவடிக்கையை புண்படுத்தும் பிரான்ஸ் அறிவிப்பை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.
அப்போது அரசின் விதியை மீறி பர்தா அணிந்த 2 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிரான்சில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பர்தா அணிவதற்கு தடை உள்ளது. அந்த தடை உத்தரவு பிரான்சில் உள்ள முஸ்லிம் சமூகத்தினரிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பர்தா அணிந்து வந்த பெண்களுக்கு 150 யூரோ அபராதம் விதிக்க வேண்டும் என பொது விசாரணையாளர் கூறினார். அந்த பெண்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில்,"இந்த சட்டம் அவர்களுக்கு பொருந்தாது. எனவே அவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார். நீதிமன்றம் தனது தீர்ப்பை வருகிற செப்டம்பர் மாதம் அறிவிக்கிறது.
News:Lankasri

குரங்கை விண்வெளிக்கு அனுப்பி சோதனை செய்யும் ஈரான்

Best Blogger Tips
ராசாத்-1 என்ற செயற்கைகோளை ஈரான் தயாரித்துள்ளது. இதை மலேக் ஆங்தார் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது.
இந்த செயற்கைகோள் கவோஸ்கர்-5 என்ற ராக்கெட் மூலம் வருகிற ஜூலை 23ந் திகதிக்கும், ஆகஸ்டு 23ந் திகதிக்கும் இடையே விண்வெளியில் செலுத்தப்பட உள்ளது.
இந்த செயற்கைகோளை கடந்த பெப்பிரவரி மாதம் ஈரான் அதிபர் மகமூத் அகமதின் ஜாதி அறிமுகப்படுத்தினார். 285 கிலோ எடையுள்ள இந்த செயற்கைகோளில் ஆராய்ச்சிக்காக குரங்கை வைத்து அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கு தகுந்தாற்போல் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வருகிற 2020ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்ப ஈரான் முடிவு செய்துள்ளது. அதற்கு முன்னதாக விலங்குகளை அனுப்பி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த ஆண்டு எலி, ஆமைகள், மற்றும் புழு, பூச்சிகளை கவோஸ்கர்-3 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக தற்போது குரங்கு அனுப்பப்பட உள்ளது.
இந்த தகவல் ஈரான் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு டெலிவிஷன் தெரிவித்தது.
News:Lankasri

Thursday, June 16, 2011

ஈரான் செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது

Best Blogger Tips
ஈரானால் தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் ரொக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவப்பட்டுள்ளது.  இச் செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை அந்நாட்டு ஜனாதிபதி மஹ்மூட் அகமதி நிஜாட் தொலைக்காட்சியில் அறிவித்தார்.  தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ஈரான் ஏற்கெனவே செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது செயற்கைக்கோளை செலுத்தும் திறனைப் பெற்றுவிட்டதால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
அணு ஆயுதம் தயாரிக்க ஈரான் முயற்சித்து வருகிறது. எனவே ஈரானில் உள்ள அணு உலைகளை சர்வதேச முகாமை மூலம் சோதனையிட அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் அணு சக்தியை அமைதிப் பணிகளுக்கே பயன்படுத்துகிறோம் என்று ஈரான் கூறி வருகிறது.  இந்த நிலையில் ஈரான் செயற்கைக் கோளை செலுத்தும் ரொக்கெட் திறன் பெற்றிருப்பது அமெரிக்காவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏவுகணைகளில் அணு குண்டுகளைப் பொருத்தி நீண்ட தொலைவுக்குத் தாக்க முடியும் என்பதால் ஈரான் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் செயற்கைக்கோள் குறித்து மேற்குலக நாடுகள் கடும் விசனம்

ஈரான் தனது முதலாவது செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏவியது தொடர்பாக மேற்குலக நாடுகள் அதிக கவலை வெளிப்படுத்தியுள்ளது. ஆராய்ச்சி மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படுத்துவதாகக் கூறி ஈரான் தனது முதலாவது செயற்கைக் கோளை விண்ணில் ஏவியுள்ளது.
ஆனால், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனையின் அபிவிருத்திக்காகவே இச் செயற்கைக் கோளைப் பயன்படுத்தப்போவதாக அமெரிக்கா,பிரான்ஸ்,பிரிட்டன் ஆகிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. ஈரானின் அணு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு ஆறு மேற்குலக நாடுகள் திட்டமிட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால், ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மேற்குலக நாடுகள் கருதுவதால் ஐ.நா.வின் தடைகளை எதிர்கொள்ளும் நிலையில் ஈரான் உள்ளது. இந்நிலையில் மேற்குலக நாடுகளின் குற்றச் சாட்டை மறுத்துவரும் ஈரான் தமது சக்தித் தேவை கருதியே அணுநிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுப்பதாக கூறிவருகின்றது. ஈரான் தன்னுடைய யுரேனியம் செறிவூட்டலை இடைநிறுத்தினால் அதன் அணு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான பேச்சுகளில் ஈடுபட முடியுமென ஜேர்மன், பிரான்ஸ், அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகள் வலியுறுத்துகின்றன.
பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபன்டுடனான பேச்சுக்களைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹிலாரி கிளின்டன்;  ஜேர்மனியின் பிராங்பட் நகரில் பேச்சுகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்கப் பிரதிநிதிகள் ஈரானுடன் பேச்சுகளில் ஈடுபடுவதற்கான அணுகுமுறைகள் தொடர்பான பேச்சுகளிலும் ஈடுபடுவர். சர்வதேச சமூகத்தில் ஈரானும் ஒரு அங்கத்துவ நாடாகுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளமை தெளிவாகவுள்ளது. ஈரானுடன் கைகுலுக்குவதற்கு நாம் தயாராக இருந்தாலும் எமது கொள்கைகளை கைவிடப்போவதில்லையெனத் தெரிவித்தார். இதேவேளை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அபிவிருத்தியில் ஈரான் ஈடுபடுவதற்கு சாத்தியமாக இருந்தாலும் அது குறித்து அதிக கவனம் செலுத்தப்படுமென அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரி றொபேட் வூட் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஈரானின் செயற்கைக்கோள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படுமென பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எரிக் செவாலியர் தெரிவித்தார்.
News: Mohamed Ameen

Tuesday, June 14, 2011

மென்பொருள் விருத்திக்கு SLIIT முன்னெடுக்கும் கற்கைகள்

Best Blogger Tips
இலங்கையின் மென்பொருள் விருத்தி துறையின் வளர்ச்சிக்காக SLIIT ஷெஃவ்வீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து என்டர்பிரைஸ் ஆப்ளிகேஷன் டிவலப்மன்ட் பிரிவில் உலகத்தரம்மிக்க மாஸ்டர்ஸ் கற்கைகளை வழங்க முன்வந்துள்ளது.