Friday, June 10, 2011

மரணத்தை நெருங்கும் ஒரு சிறுமியின் இறுதி ஆசைகள்

Best Blogger Tips
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அலிஸா என்ற 15 வயதுச் சிறுமி தான் மரணிப்பதற்கு முன் செய்ய வேண்டிய காரியங்களைப் பட்டியலிட்டுள்ளார். இரத்தத்தில் வெண்குருதி துணிக்கைகளைப் பாதிக்கும் Hodgkins lymphoma என்ற புற்றுநோயால் இவர் கடந்த நான்கு ஆண்டுகளாகக் கஷ்டப்படுகின்றார்.

இந்த நோயை வெல்ல முடியும் என்று நான் நினைக்கவில்லை. புற்றுநோய் எனது உடல் முழுவதும் பரவிக் கொண்டிருக்கின்றது. இப்போது எல்லாமே எனக்கு கடினமாகிக் கொண்டு வருகின்றது. வலிதான் எனக்கு எஞ்சியுள்ளது.

ஆனால் இன்னும் நான் செய்து முடிக்க வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன. வாழ்க்கையை நாம் எப்படி எடுத்துக் கொள்கின்றோமோ அப்படித்தான் அது அமையும் என்று எனது தாய் அடிக்கடி கூறுவார், என்று அவர் தனது புளொக் இணையத்தளத்தில் எழுதியுள்ளார். நான் போவதற்கு முன் செய்ய வேண்டியவை என்று அவர் இந்தக் காரியங்களைப் பட்டியல் இட்டுள்ளார்.

திமிங்கிலங்களைப் பார்வையிடுவது, அவற்றோடு நீந்துவது, தனது நாய் மாபெல்லுடன் ஒரு காட்சியில் கலந்து கொள்வது, வயிறு நிறைய சொக்கலேட் உண்ணுவதற்காக கெட்பரி வேல்ட்டுக்கு விஜயம் செய்வது, என்று பல விடயங்களை அவர் இதில் தெரிவித்துள்ளார்.

அல்வர்ஸ்டன் கம்ப்ரியா பகுதியைச் சேர்ந்த இவர் தனது முழு நேரப் பணி புற்றுநோயை எதிர்த்துப் போராடுவது என்றும் தனது இணையத்தில் குறிப்பிட்டுள்ளார். தான் வெளியிட்டுள்ள பட்டியல் இன்னும் பூர்த்தி அடையவில்லை என்றும், அவ்வப்போது நினைவுக்கு வரும் இன்னும் பல விடயங்களையும் தொடர்ந்து அதில் சேர்க்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவற்றுள் எல்லாம் நிறைவேறப் போவதில்லை. இப்போது நாட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் நான் இருக்கின்றேன். இருந்தாலும் என்னுடைய ஆசைகளாக இவை இருக்கட்டும் என்றும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்..!!
News:Yarlmuslim

0 comments:

Post a Comment