Friday, June 17, 2011

சனல் 4 காட்சிகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை - அவுஸ்ரேலிய நிபுணர்.

Best Blogger Tips
இலங்கை இராணுவத்தினர், நிராயுதபாணிகளான தமிழ் மக்களை கொலை செய்ததாக பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிகள் டிஜிட்டல் தொழினுட்ப முறையில் உருவாக்கப்பட்டவை என அவுஸ்திரேலியாவின் டிஜிற்றல் நிறுவனத்தின் பணிப்பாளர் சிறிஹேவா வித்தாரண தெரிவித்துள்ளார்.
சனல் 4 தொலைக்காட்சியின் ஒளிபரப்பப்பட்ட காணொளிகள் ஒருபோதும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்டவை அல்லவென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னிச்சையான சித்திரவதைகள் மற்றும் கொலைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி கிறிஸ்டோபர் ஹேன்ஸ்ஸினால் குறித்த காணொளிகள் அண்மையில் இடம்பெற்ற மனிதவுரிமைகள் மாநாட்டின் போது காட்சிப்படுத்தப்பட்டன.
இதன்போது, கருத்து வெளியிட்டிருந்த அவர், அந்தக் காணொளிகள் நிஜமானவை என அமெரிக்க காணொளி நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அண்மையில் வெளியிடப்பட்ட காணொளிகள், ஏற்கனவே, காணொளிகளை தயாரித்தவரினால் அவற்றில் சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டவை என சிறிஹேவா வித்தாரண தெரிவித்துள்ளார்.
காணொளிகளின் சில பகுதிகளை அவதானிக்கும்போது அவை கையடக்கத் தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்யப்பட்டவையாக இல்லை எனவும், அவுஸ்திரேலிய காணொளி நிபுணர் தெரிவித்துள்ளார்.
எனினும், யுத்த களத்தில் கையடக்க தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் குறித்த காணொளிகள் புகைப்படக் கருவியினாலேயே பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும் என சிறிஹேவா வித்தாரண குறிப்பிட்டுள்ளார்.
News:Thinamalar

0 comments:

Post a Comment