Friday, May 13, 2011

பான் கீ மூனின் குற்றச்சாட்டுகள் போலியானவை: சரத் பொன்சேகா குற்றம் சாட்டுகின்றார்

Best Blogger Tips

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.
 விடுதலைப் புலிகளுடான யுத்தம் தொடர்பில் இராணுவத்தினர் மீதும், தம்மீதும் சுமத்திய குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நவலோக வைத்தியசாலைக்கு நேற்று அழைத்து வரப்பட்டிருந்த அவர்  ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கம் அனுமதியளித்தால் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக பதிலளிக்கத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக தமக்கு பதிலளிக்க சந்தர்ப்பம் கிடைக்காத காரணத்தினால், இராணுவத்தினர் மீது ஐக்கிய நாடுகள் அமைப்பு குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அரசாங்கம் தமக்கு பதிலளிக்க சந்தர்ப்பம் வழங்கும் விடயத்தில்  தயக்கம் காட்டுவதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.
News:Lankasri

0 comments:

Post a Comment