3 வயது சாப்ரான் பிளட்ஜர் என்ற சிறுமி மிக சிறந்த புத்திசாலியாக திகழ்கிறார். தொலைக்காட்சி குவிஸ் நிகழ்ச்சிகளில் அவர் அற்புதமாக பதில் அளித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.
இந்த சிறுமி விரைவில் அதிபுத்திசாலிகள் அமைப்பான மென்சாவில் இடம் பெறுவதற்கு தயாராகி வருகிறார். இந்த இளம் சிறுமி பிரிட்டனின் சராசரி அறிவுத்திறன் 100 என்ற நிலையை விட 140 என்ற அற்புத அறிவுத்திறனை பெற்றுள்ளார்.
சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வார்த்தைகள் மற்றும் கணித விளையாட்டுப் போட்டியில் தந்தை டேனியை இந்த சிறுமி தோற்கடித்தார். 23 வயதான டேனி இந்த வார்த்தை கணித போட்டியில் கடந்த ஆண்டு 8 முறை கால் இறுதியில் முன்னேறி இருந்தார். அவர் தனது 3 வயது மகள் சாப்ரான் குறித்து கூறுகையில்,"எனக்கு 7 எழுத்து வார்த்தையை கூறும் தகுதி உள்ளது. ஆனால் எனது மகள் 8 வார்த்தை எழுத்தை கூறும் திறமை பெற்றவளாக உள்ளாள்" என்றார். சாப்ரான் தனது சிறிய சகோதரிக்காக கதைகளை படிக்கிறார். அடிப்படை கணிதங்களையும் அழகாக செய்கிறார். ஆடை வடிவமைப்பாளரான தாய் கிறிஸ்டி கூறுகையில்,"சிறுமி சாப்ரான் இந்த சிறந்த அறிவுத்திறன் பெற தாங்கள் விசேட பயிற்சி ஏதும் அளிக்கவில்லை" என்றார். |
0 comments:
Post a Comment