Sunday, June 5, 2011

ஜெர்மனிய தூதுவர் இராஜதந்திர விதிமுறைகளை மீறிச் செயற்பட்டுள்ளதாக கோத்தாபய கடுப்பு

Best Blogger Tips

இலங்கைக்கான ஜெர்மனிய தூதுவர் ஜென்ஸ் புளொட்னர் இராஜதந்திர விதிமுறைகளை மீறிச் செயற்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பதில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கட்டுநாயக்கவில் சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது சிறிலங்கா காவல்துறை நடத்திய தாக்குதலைக் கண்டித்து கடும்தொனியில் எச்சரிக்கை விடுக்கும் இரண்டு பக்கக் கடிதம் ஒன்றை ஜேர்மனித் தூதுவர் ஜென்ஸ் புளொட்னர் சிறிலங்கா பாதுகாப்பு செயலருக்கு அனுப்பியிருந்தார்.
இவ்வாறான சம்பவங்களினால் எதிர்காலத்தில் ஜெர்மனியர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு தயங்குவார்கள் என ஜெர்மனிய தூதுவர் இரண்டு பக்க கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
அக்கடிதம் தொடர்பாகவே பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன் ஜெர்மனிய தூதுவரை உடனடியாக பாதுகாப்பு அமைச்சுக்கு அழைத்து எச்சரித்துள்ளார்.
கட்டுநாயக்க சம்பவம் தொடர்பில் எதிர்ப்பை வெளியிட வேண்டுமாயின் வெளிவிவகார அமைச்சிற்கே எதிர்ப்பை வெளியிட்டிருக்க வேண்டுமெனவும், பாதுகாப்பு அமைச்சுக்கு எழுதியிருக்கக் கூடாது என்றும் அவர் அழுத்திக் கூறியுள்ளார். அதைவிடுத்து தனக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியதன் மூலம் இராஜதந்திர வழி முறையை ஜொ்மனியத் தூதுவர் மீறியுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கண்டித்துள்ளார்
மேலும் அத்துடன் ஜேர்மனித் தூதுவர் இந்தச் சம்பவத்தில் விசேட அதிரடிப்படையினரும் தொடர்புபட்டிருந்ததாக கூறியுள்ள குற்றச்சாட்டையும் கோத்தாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.  விசேட அதிரடிப்படையினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்டுநாயக்க சம்பவத்துடன் தொடர்புபடவில்லை என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் உள்ளிட்ட 25 பொலிசார் இந்தச் சம்பவத்தில் எப்படிக் காயமடைந்தனர் என்பதையும் ஜெர்மனித் தூதுவர் கவனிக்க மறந்து விட்டதாகவும் அவர் கடிந்து கொண்டுள்ளார்.
இதேவேளை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய சம்பவம் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் மன்னிப்பு கோருவதாக ஜெர்மனிய தூதுவர் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது
News:Lankasri

0 comments:

Post a Comment