Thursday, June 9, 2011

வடக்கு பெண்களின் துயரங்களை உணர்கிறேன் - அனோமா

Best Blogger Tips
வடக்கில் கணவர்மார்களை இழந்து வாழும் பெண்களின் துயரங்களை நானும் உணர்கின்றேன் என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் லிப்டன் சுற்று வட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியபோது இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். 

ஜனநாயகம் எனக் கூறி எமது கணவன்மார்களை சிறை வைத்தும், கொலை செய்தும், காணாமல் செய்யும் இந்த நாட்டின் கலாசாரத்திற்கு எதிராக அனைத்து பெண்களும் ஓரணியில் திரள வேண்டும் என்று அனோமா பொன்சேகா தெரிவித்தார். 

இலங்கையில் ஜனநாயகம் எங்கே இருக்கின்றது. வடக்கிலும் சரி தெற்கிலும் சரி பல்வேறு காரணங்ளுக்காக கணவர்மார்களையும் ஏனைய உறவினர்களையும் இழந்து எத்தனை பெண்கள் நரக வேதனையை அனுபவிக்கின்றார்கள். இதனை மாற்றியமைக்க வேண்டும். 

பெண்கள் தமது உறவுகளையும் உடமைகளையும் இனி வரும் காலங்களில் இழக்க கூடாது. வடக்கு பெண்களின் சொல்லொணாத் துயரத்தை இன்று நானும் உணர்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
News:Yarlmuslim

0 comments:

Post a Comment