Friday, June 3, 2011

பாதி இதயத்துடன் பிறந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்

Best Blogger Tips
இரண்டு வயது சிறுவன் சார்லஸ் கிரிபத்துக்கு பிறக்கும் போதே இதயத்தின் இடது பகுதி செயல்படாமல் இருந்தது. இந்த அபாய குறைபாடு உள்ள சிறுவன் உயிர்வாழ்வது கடினம் என  மருத்துவர்கள் கூறினர்.
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அந்த சிறுவனின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. சார்லிக்கு இதயத்தின் இடது பகுதி செய்ய வேண்டிய வேலையை இதயத்தின் வலது பகுதி செய்ய வேண்டிய நிலை இருந்தது.
உடல் முழுவதும் இரத்தத்தை அனுப்ப வேண்டிய சூழல் இருந்தது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் சிறுவனுக்கு உயிரிழப்பு ஏற்படும் என்பதால் மருத்துவர்கள் 10 மணி நேரம் ஓபரேஷன் செய்து சிறுவன் உயிரைக் காப்பாற்றினர். கிரிபத்தின் இதயக் குறைபாட்டை சரிசெய்ய 4 இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த சிகிச்சைக்கு பின்னர் சார்லி கிரிபத் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளான். அவனது இதயம் இயல்பாக செயல்படத் துவங்கி உள்ளது. சிறுவனின் 24 வயது தாயார் சாரியோடே கூறுகையில்,"சார்லி பிறக்கும் போதே இதயத்தின் இடது பகுதி செயல்படவில்லை" என்றார்.
இதயம் உடைந்து போன நிலையில் உள்ளது. அவன் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என மருத்துவர்கள் கூறினர்.
இருப்பினும் 4 ஓபரேஷன்கள் மூலம் இயல்பு நிலை அடைந்துள்ளான். அவனது இரண்டாவது பிறந்த நாளை எதிர்கொண்டுள்ளான். இதயக் குறைபாட்டால் ரத்த ஓட்டப் பிரச்சனை இருந்ததால் சிறுவனுக்கு உடல் நீல நிறத்தில் இருந்தது. தற்போது நிறம் மாறிவிட்டது.

0 comments:

Post a Comment