கற்கைகளை வழங்குவதில் அதியுயர் தரத்தையும், மாணவர்களுக்கு சிறந்த கற்றல் அனுபவத்தையும் வழங்கும் வகையில் ஷெஃவ்வீல்ட் ஹலாம் பல்கலைக்கழகம் முன்னிலையில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைய நவீன தொழில்துறைசார் சவாலகைளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை தயார்ப்படுத்தும் நடவடிக்கைகளை ஷஃவ்வீல்ட் ஹலாம் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருவதுடன், சர்வதேச அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஷஃவ்வீல்ட் ஹலாம் பல்கலைக்கழகம் செயலாற்ற முன்வந்துள்ளமையானது இலங்கை மாணவர்களுக்கு கிடைத்துள்ள அதிசிறந்த வாய்ப்பாகும்.
மென்பொருள் வடிவமைப்பாளர்கள் மற்றும் மென்பொருள் பொறியியல் துறையில் பாண்டித்தியம் பெற முனையும் மாணவர்களை இலக்காகக் கொண்டு இந்த என்டர்பிரைஸ் ஆப்ளிகேஷன் டிவலப்மன்ட் பிரிவில் மாஸ்டர்ஸ் கற்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கற்கைநெறி குறித்து இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தின் தலைவர் பேராசிரியர் எஸ்.கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் தகவல் தொழில்நுட்பத்துறையானது மிகவும் ஆரோக்கியமாக வளர்ந்து வரும் நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில் இந்த கற்கை நெறியை இலங்கையில் அறிமுகப்படுத்துவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்கள் இந்த துறையில் நிறுவனங்களுக்கு நவீன சிக்கலான வர்த்தக நடவடிக்கைகளுக்கு தமது தொழில்நுட்ப ஆளுமை திறனைக் கொண்டு செயலாற்றி உறுதியான தீர்வுகளை எய்தக்கூடியவர்களாக இருப்பார்கள் என்றார்.
இந்த கற்கை நெறி குறித்து இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான பேராசிரியர் லலித் கமகே கருத்து தெரிவிக்கையில், மாணவர்களின் சிறந்த எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தரம்மிக்க கற்கைகளை வழங்கும் நோக்கத்தில் இந்த கற்கை நெறி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு சிறந்த தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன என்றார்.




Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment