ரெலிகொம் நிறுவனத்தில் இடம்பெற்ற 324.4 மில்லியன் ரூபா ஊழல் மோசடி குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஐ.பி.ரீ.வி தொழில்நுட்பத்தை கொள்வனவு செய்த போது இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட சிலர் திட்டமிட்ட வகையில் மேற்கொண்ட ஊழல் மோசடியினால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. சுங்கத் திணைக்கள சட்ட திட்டங்களுக்கு புறம்பான வகையில் ரெலிகொம் நிறுவனம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டு;ள்ளதாகவும், இதனால் 324.4 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொடுக்கல் வாங்கல் பற்றிய தரவுகளை புலனாய்வுப் பிரிவினருக்கு சமர்ப்பிக்குமாறு தனியார் வங்கியின் முகாமையாளர் ஒருவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment