கைதிகள் பரிமாற்றம் நடந்தது. இஸ்ரேலில் 5 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீன கைதிகள் 477 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அதே போன்று ஹமாஸ் பிடியில் இருந்த இஸ்ரேல் ஹமாஸ் பிடியில் இருந்த இஸ்ரேல் இராணுவ வீரர் விடுதலையாகியுள்ளார். இஸ்ரேலின் கிலாத்ஷகாலில் சிறையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு குற்றவழக்குகளில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை இஸ்ரேல் அரசு விடுவித்தது. அதன்படி 447 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இன்று பேருந்து வழியாக காஸா நகருக்கு வந்தனர். மேலும் கடந்த இரண்டு மாதங்களில் 550 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் விரைவில் விடுதலையாகின்றனர். பாலஸ்தீன தனிநாடு கோரிக்கை ஐ.நா.வின் பார்வைக்கு வைக்கப்பட்ட பி்ன்பு இரு நாடுகளிடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு இஸ்ரேலிய இராணுவ வீரரை விடுவித்து அதன்மூலம் பலநூறு பலஸ்தீன் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் போராளிகள் மேற்கொண்ட தந்திரோபாயம் இஸ்லாமிய உலகில் பரலான பாராட்டுக்களை பெற்றுள்ளதுடன், இது தனிப்பட்ட வகையில் ஹமாஸ் அமைப்பினருக்கு கிடைத்த வெற்றியாகவும் போற்றப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment