Tuesday, October 4, 2011

இஸ்ரேல் தனிமைப்பட்டுவிடும் - கண்ணீர் வடிக்கிறது அமெரிக்கா

Best Blogger Tips
மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுவதற்கான ஆபத்து காணப்படுவதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லியொன் பெனெட்டா எச்சரித்துள்ளார். இதிலிருந்து மீ்ள்வதற்கு, பலஸ்தீனுடனான சமாதான பேச்சுவார்த்தைகளை மீண்டும் இஸ்ரேல் ஆரம்பிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

 அத்துடன் துருக்கி மற்றும் எகிப்து போன்ற நாடுகளுடன் இஸ்ரேல் சுமூக உறவுகளைப் பேண வேண்டுமெனவும்  அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் பொருட்டு, அங்கு சென்றிருந்த போதே பெனெட்டா இதனைக் கூறியுள்ளார்.

 இந்த விஜயத்தின் போது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். சமாதான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பட்சத்தில், தேவையான பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராக உள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இரண்டு நாடுகளையும் மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை.

 இஸ்ரேல் இவ்வாறான பேச்சுவார்த்தைகளுக்கு இணக்கம் தெரிவித்த போதிலும், ஜெருசலேம் பகுதியில் குடியிருப்புக்களை நிர்மாணிக்கும் திட்டத்தை இஸ்ரேல் கைவிடும் வரை பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப் போவதில்லை என பலஸ்தீன் குறிப்பிட்டுள்ளது. வ்வாறாயினும் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் ஆயிரத்து 100 குடியிருப்புக்களை அமைக்கும் திட்டத்தினை கைவிடும் எண்ணமில்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது.



News:Yarlmuslim

0 comments:

Post a Comment