Friday, October 21, 2011

அவரிற்காக தொழுவோம்...! முஸ்லிம்கள் மரணத்திற்கு அஞ்சிய கோழைகளா..?

Best Blogger Tips
நேற்றைய இரவின் தலைப்பு செய்தி “கேர்ணல் கடாபி சுதந்திர போராளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்”.  சில நிமிடங்களில் இன்னொரு சிறப்புச் செய்தி, “என்னை சுடாதீர்கள். தயவு செய்து என்னை சுட்டு விடாதீர்கள், இதுவே கடாபி பதுங்கு குழியில் கூறிய கடைசி வார்த்தைகள்”.  

அமெரிக்க மற்றும் பிரித்தானிய, பிரான்சிய ஊடகங்கள் பிரேக்கிங் நியுஸை Breakingv news பல தரம் பிரேக் பண்ணி சொன்னவற்றில் சிலவே இவை. சதாம் ஹீசைன் பதுங்கு குழியில் இருந்து வெளிவரும் போது அமெரிக்க சிப்பாயை பார்த்து மன்றாடியதும் இந்த வார்த்தைகளை சொல்லியே. சதாமின் தங்கத்திலாலான கலஷ்னிகோவ் 47 போன்று தங்கத்திலாலான பிஸ்டலை சுதந்திர போராளிகள் கடாபி வசம் கைப்பற்றியதாக கூறி அதை எடுத்துக்கொண்டு வீதி வீதியாக ஊர்வலம் சென்றுள்ளார்கள். (கடாபியின் ஜனாஸாவுடன் அல்ல) அதாவது அரபுலகின் முஸ்லிம் தலைவர்கள் மரணத்திற்கு அஞ்சிய கோழைகள் எனும் செய்தியை அழுத்தமாக சொல்கிறது அமெரிக்கா.

கிலாரி கிளின்டனின் திடீர் லிபிய விஜயத்தின் மறுதினம் கடாபியின் மரண செய்தி. அதை ஊர்ஜிதம் செய்தது வேறு யாருமல்ல. கிலாரி கிளின்டன்தான். இங்கே கடாபி கொல்லப்பட்டது உண்மையா அல்லது பொய்யா என்பது அல்ல விடயம். அமெரிக்க அறிவிப்புக்கள் பொய்யானவை. எதிர்கால அரசியல் நோக்கங்களிற்கு வாகுவாக வெளியிடப்படுபவை என்பதே. ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார் என மேற்குலகம் கக்கிய வாந்தியை குடித்தவர்கள் தான் நாம். ஆனால் அதே ஹிட்லர் ஆர்ஜன்டீனாவின் ஒரு பண்ணை வீட்டில் மரணித்த விடயம் இன்றும் உலகிற்கு தெரியாது. 

சதாமாகட்டும் அல்லது கடாபியாகட்டும் அவர்கள் தங்கள் மண்ணை நேசித்தவர்கள். தங்கள் தாய் நாட்டிற்காக உழைத்தவர்கள். ஒன்றினைந்த அரபு தேசம் பற்றி கனவு கண்டவர்கள். சர்வாதிகாரம் எங்கு தான் இல்லை. “ஜனநாயகம் என்பது தான் உண்மையில் சர்வாதிகாரம்”. அங்கே தனிமனித சர்வாதிகாரம் என்றால் இங்கே கூட்டு சர்வாதிகாரம்.

அமெரிக்க மக்களின் ஒட்டு மொத்த விருப்பு வாக்கின் அடிப்படையில் எங்கும் அமெரிக்கா தாக்குதல் நடாத்தியதாக வரலாறு இல்லை. ஒரு சில காங்கிரஸ் செனட்டர்களின் ஒப்புதல் மட்டும் போதும் ஒரு நாட்டை அல்லது ஒரு மக்கள் தலைவரை இல்லாதொழிக்க. ஜனநாயக வேஷம் போடும் ஜக்கிய நாடுகள் சபையில் ஒரு சில நாடுகளின் வீட்டோதான் தாக்குதலிற்கு வித்திடுகின்றன. அல்லது அநியாயங்களை மூடிமறைக்க, குற்றவாளிகளை காப்பாற்ற உதவுகின்றன. இவையனைத்துமே “புனித சர்வாதிகாரத்தின் பெயரிலேயே செய்யப்டுகின்றன”.

கிலாரி கிளின்டன் தனது அரபு உலக அடிமைகளைப் பார்த்து “கடாபியை கொன்று விட்டோம்” என குரைக்கின்றார். அதனை அவரது அரபு அடிமைகளும் திரும்ப திரும்ப “அல் ஜஸீரா” ஊடாகவும், “அல் அரேபியா” ஊடாகவும் ஊளையிடுகின்றன. முஸ்லிம் உம்மாவும் அதனை அப்படியே நம்புகிறது. அல் ஜஸீராவின் வார்த்தைகளில் உள்ள நம்பிக்கை இன்று புனித குர்ஆனின் வார்த்தைகளைவிடவும் உண்மையானவை என நம்பும் அளவிற்கு அவர்கள் உள்ளங்களில் மேற்குலகால் விதைக்கப்பட்டுள்ளன. நாமும் நம்புவோம் கடாபி இறந்து விட்டார். ஏனென்றால் அல்ஜஸீரா சொல்லி விட்டதல்லவா?!

இமாம் அன்வர் அல் அவ்லாகியின் மரணம் பற்றி எம்மில் எத்தனை பேருக்கு தெரியும். எத்தனை பேர் இது தொடர்பாக கவலைப்பட்டோம். அல்லது குறைந்த பட்சம் அந்த ஷஹீதிற்காக (இன்ஷாஅல்லாஹ்) ஜனாஸா தொழுதோம். ஆனால் நாம் அனைவரும் கடாபியின் மரணம் பற்றி அறிவோம்.  நாம் அனைவரும் அவரிற்காக வருந்துவோம். அவரிற்காக தொழுவோம்... இது தான் நமது நிலை. மேற்குலகின் ஊடகங்களால் முஸ்லிம்களின் இதயங்கள் கர்த்தரிற்கு ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளன.

News: Yarlmuslim

0 comments:

Post a Comment