தான் உள்ளிட்ட தமது குடும்பத்தினர் வெளிநாடு செல்லும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்குமாறு சரத் பொன்சேக்கா அமெரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல்கள் வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று இரண்டு தினங்கள் செல்லும் முன்னர், தான் உள்ளிட்ட தமது குடும்பத்தினர் வெளிநாடு செல்லும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு முன்னாள் இராணுவ தளபதியும், எதிர்க்கட்சியின் பொது வேட்பாளருமான சரத் பொன்சேக்கா அமெரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல்கள் வெளியிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், வோஷிங்டனில் உள்ள ராஜாங்க திணைக்களத்திற்கு அனுப்பி கேபிள் தகவல்களை அடிப்படையாக கொண்டு, அந்த இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூர் நோக்கி செல்லவே சரத் பொன்சேக்கா கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் இலங்கை படையினர் அவர் தங்கியிருந்த விடுதியை சுற்றிவளைத்திருந்ததுடன், அவர் போய் வரும் இடங்கள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வந்தன.
இதன் பின்னர், சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவர் கைதுசெய்யப்பட்டதுடன், அவருக்கு எதிராக மேலும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
Sunday, October 16, 2011
Subscribe to:
Post Comments (Atom)




Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment