Saturday, October 22, 2011

தந்தையின் கொலையை மூடிமறைக்க இடமளிக்க போவதில்லை : பாரதவின் மகள் சூளுரை

Best Blogger Tips
தந்தையின் படுகொலைச் சம்பவத்தை மூடி மறைக்க இடமளிக்கப் போவதில்லை என அண்மையில் முல்லேரியா பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் புதல்வி, ஹிருனிகா பிமேச்சந்திர தெரிவித்துள்ளார்.

மூளையற்ற, மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர் எனக் குறிப்பிட முடியாத நபர்களின் கைகளினால், நல்ல இதயம் கொண்ட தமது தந்தை கொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளை பார்வையிட்டதன் பின்னர் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
வழக்கு விசாரணை நடைபெறும் சகல நாட்களிலும் நீதிமன்றிற்கு சமூகமளிக்கப் போவதாகவும், தமது குடும்பத்திற்கு நியாயம் கிட்டும் வரையில் போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதி மூச்சு இருக்கும் வரையில் நியாயத்திற்காக குரல் கொடுக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த விசாரணை நடத்தி வந்த சிரேஸ்ட காவல்துறை அதிகாரியொருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது எனவும், இது ஓர் துரதிஸ்டவசமான சம்பவம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தந்தையின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் நீதிமன்ற விசாரணைகளில் நியாயம் கிட்டவிட்டால், மாற்றுத் திட்டமொன்றின் மூலம் நியாத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சூளுரைத்துள்ளார்.

0 comments:

Post a Comment