உழ்ஹியா குர்பானை தடையின்றி நிறைவேற்றலாம் என்றும் ஏனைய சமூகத்தவரின் உணர்வுகளை மதித்து நிறைவேற்ற வேண்டும் என்றும் அதேநேரம் குர்பான் கடமையை நிறைவேற்றுவது தொடர்பாக ஏதாவது நெருக்கடி ஏற்படுமாயின் தமது இணைப்புச் செயலாளரான எம். சில்மியின் 072-3007300 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
தொழில் நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘குர்பான்’ கடமையை நிறைவேற்றுவது குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் ,வெளி மாகாணங்களிலிருந்து கொழும்புக்கும் ஏனைய பிரதேசங்களுக்கும் இறைச் சியை கொண்டு செல்வது தொடர்பாக பொலிஸ் மா அதிபர் கடந்த வருடம் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டார். அதே சுற்றறிக்கையே இவ்வருடமும் நடைமுறையில் இருக்கும். இந்த சுற்றறிக்கைப்படி செயற்பட்டால் குர்பான் கடமையை நிறைவேற்றுவதற்கு எந்தப் பிரச்சினையுமே ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment