தம்மைப் பெற்று வளர்த்த தாயாரின் மரணத்தருவாயில் அவரது முகத்தைக் கடைசியாக ஒருமுறை பார்க்கும் பாக்கியம் ஒரு மகனுக்குக் கிடைக்கவில்லையென்றால் அது மிகவும் துர்ப்பாக்கியமானதாகும்.எவருக்கும் அத்தகைய நிலைவரக்கூடாது. எனினும் நமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வாழ்க்கையில் இத்தகைய துர்ப்பாக்கிய சம்பவம் ஒன்று ஏற்பட்டது.
1985 காலகட்டங்களில் பொய்க்குற்றச்சாட்டின் பேரில் தற்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெலிக்கடையில் சிறைவாசம் அனுபவித்து வந்தார். அச்சமயம் அவரது தாயாரான திருமதி தந்தினா சமரசிங்க திசாநாயக்க கடும் சுகவீன முற்றிருந்தார். அவரைப் பார்க்கச் செல்வதற்கான அனுமதியை அவர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் கோரியிருந்தார். அவர்கள் உடனடியாக அதனை வழங்காததால் தமது தாயாரின் இறந்த உடலையே அவரால் பார்க்க முடிந்துள்ளது.
இச்சம்பவம் 1985 நவம்பர் 3ம் திகதி நேற்று போல் ஒரு தினத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது ஜனாதிபதி வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். தாயாரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதை அறிந்த அவர், தாயாரைப் பார்த்துவர அனுமதி கோரியுள்ளார். எனினும் நவம்பர் 3ம் திகதியே அதற்கான அனுமதியை சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
சிறைச்சாலையின் பழைய பஸ் வண்டி இழுத்து இழுத்து ஒருவாறு தமது தாயார் அனுமதிக்கப்பட்டிருந்த நவலோக ஆஸ்பத்திரியை அடைந்த போது அவரது தாயார் இறந்து பத்து நிமிடங்கள் கடந்திருந்தன.
தமது தாயாரின் முகத்தை ஒரு தடவை உயிரோடு இறுதியாகப் பார்க்க முடியாத துரதிஷ்டம் அவருக்கு நேர்ந்தது.
கைகளில் விலங்கு பூட்டியவாறு அதற்கடுத்த நாள் தாயாரின் இறுதி கிரியைகளுக்கு அவரை சிறைச்சாலை அதிகாரிகள் அவரது மெதமுலன வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது கைகளில் விலங்கு பூட்டிய நிலையில் தாயின் முகத்தைப் பார்த்து குமுறியழ மட்டுமே முடிந்தது.- தகவல் தினகரன்




Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment