Wednesday, November 16, 2011

பிரம்மகுமாரிகளிடமிருந்து அல்லாஹ்வின் இல்லத்தை மீட்க நீதிமன்ற உதவி

Best Blogger Tips
பிரமகுமாரிகள் இராஜயோக நிலையமாக மாறியுள்ள மஸ்ஜிதுல் பிர்தௌஸ் மீட்பதற்கு நீதிமன்றத்தை நாடவுள்ளதாக காத்தான்குடி மஸ்ஜிதுகள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் சுபைர் தெரிவித்தார். தமது சம்மேளனம் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்து கள்ளியங்காடு கிராமம் அதன் மஸ்ஜிதுல் பிர்தௌஸ் தொடர்பாகவும் ,காத்தான்குடி எல்லை நிர்ணயம் தொடர்பாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் பேசியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மஸ்ஜிதுல் பிர்தௌஸ் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாக அவரிடம் கேட்டபோது மேலும் தகவல் வழங்கிய அவர் அந்தக் காணியும் அதில் அமைத்திருந்த மஸ்ஜிதும் இலங்கை வக்பு சபையில் பதிவு செய்யபட்டுள்ளதாகவும் ஆதாரங்கள் இருப்தாகவும் மஸ்ஜிதை மீண்டும் பெற்றுக்கொள்ள எடுக்கப்பட்டு வந்த முயற்சிகள் வெற்றிபெறும் என்று தாம் நினைத்திருந்ததாகவும் தற்போது அது வெற்றிபெறாத நிலையில் வக்பு சபையின் ஊடாக அவர்களின் உதவியுடன் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மஸ்ஜிதுல் பிர்தௌஸ் மஸ்ஜிதும், மையவாடியும் மட்டகளப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தில் கள்ளியங்காடு என்ற பகுதியில் அமைந்துள்ளது. முஸ்லிம்கள் கள்ளியங்காட்டில் குடியேறி வாழ முன்னரே முஸ்லிம் மையவாடிக்கு முன்பாக கொட்டில் வடிவில் ஒரு சிறு பள்ளிவாயல் அங்கு இறந்தவர்களுக்காக செய்யப்படும் ஜனாஸா தொழுகை நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்தது என்று அறியப்படுகிறது. 

கோட்டமுனை முஸ்லிம்கள் காட்டை அழித்து குடியேறிய பின்னர் கள்ளியங்காடு முஸ்லிம் கொலனி என்று அறியப்பட்டது. அரசாங்கம் அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் இறங்கிய போது, முன்னாள் எம் பீ மார்க்கான் மார்கார் அவர்களுக்கான அரச அனுபதிப் பத்திரத்தை பெற்றுக் கொடுத்தார் . அதன் பின்னரே 1965 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் தங்களுக்கான பள்ளிவாயலை அங்கு உத்தியோக பூர்வமாக கட்டி எழுப்பினர். அன்றிலிருந்து கள்ளியங்காடு முஸ்லிம் கொலனியின் தேவைகளை மறைந்த முன்னாள் அமைச்சர் பாரிட் மீராலேப்பையும் கவனித்துள்ளார். ஆதாரங்கள் உண்டு என்று பிரதேச சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்

காத்தான்குடி பிரதேசத்தில் மஸ்ஜிதுல் பிர்தௌஸ் என்ற மஸ்ஜித் அமைத்திருந்த இடத்தில் பிரம்ம குமாரிகளின் இராஜ யோக நிலையம் என்ற இந்து தியான ஆலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.  பிரம்ம குமாரிகள் அமைப்பின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நிர்மலா கஜானி அவர்களினால் கடந்த 09.11.2011 திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரமகுமாரிகள் இராஜயோக நிலையமாக இந்த மஸ்ஜித் திறந்து வைகபட்டுள்ளது. அந்த நாள் காத்தான்குடிஇன்போ இணையத்தளத்தினால் கருப்பு தினமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment