ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று கொழும்பிலுள்ள புதிய நகர மண்டபத்தில் அதற்கான நிகழ்வுகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்படுகின்றது. இன்று செவ்வாய்க்கிழமை பி.ப.2.30 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வில் விசேட உரையினை கட்சியின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர் உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் நாட்டின் நாலாபுறத்திலிருந்தும் கட்சியின் முக்கிய குழுக்களின் உறுப்பினர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெள்ளி விழாவை சிறப்பான முறையில் கொண்டாடவும், அதில் கட்சிக்காக கடந்த 25 வருடங்களாக தம்மை அர்ப்பணித்துள்ள முக்கியஸ்தர்கள் கௌரவிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இக்கட்சி கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் காத்தான்குடியிலும் பின்னர், அதே காலப்பகுதியில் அட்டாளைச்சேனையிலும் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் முதல் செயலாளராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் கடமையாற்றி தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களுக்கு முதல் இலக்கமும் இரண்டாவது இலக்கம் அன்றைய செயலாளரான எஸ்.எம்.ஏ. கபூருமாக இருந்தார்கள்.
இவ்வாறு நீண்டகாலம் ஒரு கட்சியின் செயற்பாடுகளில் இருக்கின்ற பலர் இப்பிரதேசங்களில் காணப்படுகின்றனர். இவர்களையும் தெரிவுசெய்து பாராட்டுவது கட்சிக்கும், கட்சியின் தொண்டர்களுக்கும் சிறந்ததோர் உந்து சக்தியை கொடுக்கும்




Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment