Wednesday, November 9, 2011

ஈரானை தாக்கினால் எதிர்வுகூறமுடியாத பின் விளைவுகள் ஏற்படும் : ரஷ்யா எச்சரிக்கை

Best Blogger Tips
ஈரான் மீது இராணுவத் தாக்குதல் மேற்கொண்டால் அது எதிர்வுகூறப்பட முடியாத பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பாரிய தவறாக அமையும் என ரஷ்யா இன்று எச்சரித்துள்ளது.

ஈரான் மீது தாக்குதல் தொடுக்க இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் ரஷ்யா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.


அணுசக்தி விவகாரம் தொடர்பாக ஈரான் மீதான தடைகளுக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ரஷ்யா ஆதரவளித்த போதிலும் ஈரானின் நெருங்கிய சக்திவாய்ந்த தோழமை நாடாக ரஷ்யா விளங்குகிறது. 

ஈரான் அணுகுண்டை தயாரிக்க முற்படுவதாக மேற்கு நாடுகள் சந்தேகிக்கின்றன. இந்நிலையில் ஈரானிய அணுசக்தித் திட்டங்கள் தொடர்பான விபரமான அறிக்கையொன்றை சர்வதேச அணுசக்தி முகவரம் இவ்வாரம் வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானிய அணுசக்தி நிலைகள் மீது தாக்குதல்நடத்துவதற்கு இஸ்ரேலிய அமைச்சரவையின் சம்மதத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு பெற்றுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது  குறித்து ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லின்ட் லவ்ரோவ்விடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ' இது எதிர்வுகூறப்பட முடியாத பின்விளைவுகளை ஏற்படுத்தககூடிய பாரிய தவறாக அமையும்' என்றார்.

0 comments:

Post a Comment