பிரான்ஸ் நாட்டில் சுமார் ஐந்து பில்லியன் முஸ்லீம்கள் வசிக்கின்றனர். ஐரோப்பாவில் தான் முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. பிரான்ஸ் நாட்டில் இஸ்லாமியர் மீது இப்போது அச்சமும், வெறுப்பும் வளர்ந்து கொண்டே போகிறது. அங்குள்ள இஸ்லாமிய கல்லறைகள் மற்றும் மசூதிகளுக்கு சேதம் விளைவிக்கின்றனர்.
முஸ்லீம்களைத் தாக்கிக் காயப்படுத்துகின்றனர். வசைமொழி மற்றும் கேலிப் பேச்சால் அவமானப்படுத்துகின்றனர். முஸ்லீம்களுக்குக் கோபமூட்டும் வகையில் நடந்துகொள்கின்றனர்.
முஸ்லீம்களின் CFCM என்ற அமைப்பு இந்த ஆண்டில் மட்டும் 22 சதவீத வழக்குகள் முஸ்லீம்களை அவமானப்படுத்திய குற்றச்சாட்டில் பதிவாகியுள்ளது. இன்னும் இது அடுத்து வரும் ஆண்டுகளில் பெருகுமே தவிர குறையாது என்று புள்ளிவிவரத்தோடு விளக்கியுள்ளது. இந்த அமைப்பின் தலைவர் அப்தல்லா ஜெக்ரி, பாதிக்கப்பட்டவர்கள் உயர் அதிகாரிகளிடம் முறையிட விரும்புவதில்லை, காரணம் முறையிடுவதால் பயன் ஒன்றுமில்லை என்றார்.
மேலும் கூறுகையில், உள்துறை அமைச்சர் கிளாடி குயேண்ட் காவல்துறையினரை ஏவி முஸ்லீம்களுக்குத் துன்பம் விளைவிக்கும் வன்முறையாளரைக் கைது செய்ய வேண்டும். கல்லறைகளைச் சிதைக்கும் கயவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment