Friday, November 4, 2011

சதகதுள் ஜாரியாவாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு ஐம்பது மில்லியன்

Best Blogger Tips
லேடி ரிட் ஜ்வே சிறுவர் வைத்தியசாலை இருதய சிகிச்சைப் பிரிவுக்கு ஐம்பது மில்லியன் ரூபா செலவில் புதிய கட்டிட தொகுதியொன்றை அன்பளிப்பாக அமைத்துக் கொடுப்பதற்கு முஹமட் அலி அன்ட் ஜெபர்ஜி நிறுவனத்தின் உரிமையாளர் முன்வந்துள்ளார். இக் கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டதும் அதன் முதல் மாடியில் இருதய சிகிச்சைகளை மேற்கொள்ளத்தேவையான மருத்துவ உப கரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கும் அவர் இணக்கம் தெரிவித்திருக்கின்றார்.

முஹமட் அலி அன்ட் ஜெபர்ஜி நிறுவனத்தின் உரிமையாளர் முஹமட் அலி ஜெபர்ஜியும், பாத்திமா ஜெபர்ஜியும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை அவரது அமைச்சில் நேற்றுமுன்தினம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். அதேநேரம் அவர்களின் அண்மையில் உயிரிழந்துள்ள மகள் பரீதா ஜெபர்ஜியின் பெயரை இக்கட்டிடத்துக்கு வைக்குமாறு அமைச்சரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதற்கு அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார். சதகதுள் ஜாரியாவாக இதை அவர்கள் செய்ய முன்வந்துள்ளார்கள் என்று அறிய முடிகின்றது. இக்கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான ஐம்பது மில்லியன் ரூபாவையும் முஹமட் அலி அன்ட் ஜெபர்ஜி நிறுவன உரிமையாளர் சுகாதார அபிவிருத்தி நிதியத்திற்கு வைப்பிலிட்டுள்ளார்
இச்சந்திப்பின் போது சுகாதார அமைச்சருடன் அமைச்சின் செயலாளர் டொக்டர் ரவி ருபேரு, லேடி ரிட்ஜ்வே ஆஸ்பத்திரிப் பணிப்பாளர் டொக்டர் ரத்னசிறி ஹேவகே உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர் .

0 comments:

Post a Comment