பிச்சைக்காரர்கள் 12 பேரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கல்கிஸ்ஸை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஹெரோயின் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் ஊடாக பிச்சைக்காரர்கள் கொலையுடன் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மொரட்டுவ, கிரிபத்கொட, கொள்ளுபிட்டி, பேலியகொட, வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை, கல்கிஸ்ஸை, கொம்பனித்தெரு, மற்றும் களனி ஆகிய பகுதிகளில் குறித்த சந்தேகநபர் பிச்சைக்காரர்களை கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தலையில் கல்லால் தாக்கப்பட்டு குறித்த 12 பிச்சைக்காரர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை சந்தேகநபருக்கு வதிவிடம் இல்லை எனத் தெரிவித்த கல்கிஸ்ஸை பொலிஸார், கொலையாளியின் நோக்கம் என்னவென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்




Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment