Wednesday, December 7, 2011

பதவி உயர்த்தப்பட்ட நீதிபதிக்கு பொன்சேக்காவின் நெத்தியடி

Best Blogger Tips
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதவானாக பதவி உயர்த்தப்பட்டுள்ள தீபாலி விஜேசுந்தரவிற்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வாழ்த்து தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்ற நீதவானாக கடயைமாற்றி வந்த தீபாலி விஜேசுந்தர தற்போது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதவானாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

தீபாலி விஜேசுந்தரவிற்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்பதனை தாம் எதிர்பார்த்தாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ள அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

வழக்கு விசாரணைகளில் கலந்து கொள்வதற்காக நீதிமன்றம் சென்றிருந்த போது, சரத் பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நீதி நிலைநாட்டப்படாத சந்தர்ப்பங்களில் சர்வதேசத்தின் உதவியை நாட நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேகாவை குற்றவாளியென தீர்ப்பளித்த இரண்டு நீதிபதிகளுள் தீபாலியும் ஒருவராவார். 


0 comments:

Post a Comment