Tuesday, December 6, 2011

பொன்சேக்காவின் வாயை மூட தயார் - அமைச்சர் மேர்வின் கூறுகிறார்

Best Blogger Tips
சிறை வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவினால் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட முடியும் என்றால் அந்த வரப்பிரசாதங்கள் அனைத்து சிறை கைதிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என பொது சன உறவுகள் மற்றும் பொது மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். 

சரத் பொன்சேகா ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதை அரசாங்கத்தால் தடுக்க முடியாவிடின் அந்தப் பொறுப்பை தன்னிடம் விடுமாறும் தான் அதனை நிறுத்திக் காட்டுவதாகவும் மேர்வின் சில்வா அரசாங்கத்திடம் சவால் விடுத்துள்ளார். 

மேலும் சரத் பொன்சேகவை விடுதலை செய்யக் கோரி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கடிதம் எழுதி பிரயோசனம் இல்லை எனவும் அந்த வௌ்ளைக்காரரால் சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்தனகல்ல பிரதேசத்தில் இன்று காலை (06) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment