Thursday, December 15, 2011

ஜனாதிபதியின் மகன் சட்டத்தரணியாக பதவியேற்பு

Best Blogger Tips
பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ இன்று பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க முன்னிலையில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான பஷில் ராஜபக்ஷ, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட பலரும் இந்நிகழ்வின் போது கலந்து கொண்டனர். நாமல் எம்.பியின் பெற்றோர் அவரை கட்டி தழுவியதுடன் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். இவரது சத்தியப்பிரமாணத்தின் போது மேலும் 250 பேர் சட்டத்தரணிகளாக பதவியேற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



0 comments:

Post a Comment