சென்னையில் தொண்டு நிறுவனம் ஒன்று, `சகாய்-2011` என்ற திட்டத்தின் மூலம் புற்றுநோய் பாதித்த குழந்தைகளின் சிகிச்சைக்காக ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கு ரூ.20 லட்சமும், பிரேமவாசம் என்ற குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.20 லட்சமும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தலைமை தாங்கியதுடன், நிதியுதவிகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில், அப்துல்கலாம் பேசியதாவது, சமுதாயத்தில் கிடைப்பதை எதிர்பார்க்காமல், சமுதாயத்திற்காக கொடுக்க நினையுங்கள். கொடுக்க வேண்டும் என்ற மனதுடன் அனைவரும் இருக்க வேண்டும். 2020 ஆம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும். தற்போது, நாடு முன்னேற்றம் அடைந்து வந்தாலும், பல்வேறு சவால்கள் உள்ளன. முக்கியமாக ஊழல் பங்கு வகிக்கிறது. எனவே, நாட்டில் உள்ளவர்கள் ஊழலை எதிர்த்து போராட வேண்டும் என்று அப்துல்கலாம் கூறினார்.



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment