தேடப்பட்டு வரும் 5 முக்கிய முஸ்லிம் போராளிகளின் பெயர்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அல்-காய்தாவின் இரண்டாம் நிலை கமாண்டர் அல்ஜவாஹிரி, முல்லா உமர், இலியாஸ் காஷ்மீரி, ஹக்கானி அமைப்பின் தலைவர் சிராஜுதீன் ஹக்கானி, அல்- காய்தாவின் லிபிய நாட்டுத் தலைவர் அப்துல் ரஹ்மான் ஆகியோரது பெயர்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
இவர்கள் 5 பேருமே மிகக் கொடூரமான பயங்கரவாதிகள் என அமெரிக்கா வர்ணித்துள்ளது. பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும், ஏராளமானோர் கொல்லப்பட்டதற்கும் முக்கியக் காரணமாக இருந்தவர்கள் என அமெரிக்கா வர்ணித்துள்ளது.
இதில் அல்ஜவாஹிரி, முல்லா உமர், இலியாஸ் காஷ்மீரி ஆகியோர் பாகிஸ்தானில்தான் பதுங்கியுள்ளார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த செய்தியை பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் டான் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
இது பாகிஸ்தானுக்கு அமெரிக்கா விடுத்துள்ள மறைமுக எச்சரிக்கை. இந்த முஸ்லிம் போராளிககளை அழிக்க நீங்கள் உதவ வேண்டும். இல்லையெனில் எங்கள் வழியில் அவர்களை நாங்கள் வேட்டையாடுவோம் என்று மறைமுகமாக பாகிஸ்தானிடம் அமெரிக்கா கூறியுள்ளது என்றும் அந்த பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்-காய்தா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்டுள்ள நிலையில் அமெரிக்கா - பாகிஸ்தான் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனினும் பாகிஸ்தான் மீதுள்ள அதிருப்தியை அமெரிக்கா பெரிய அளவில் வெளிக்காட்டவில்லை. எனெனில் பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் துணையுடன் அங்குள்ள போராளிககளை அழிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் சொற்படி நடப்பதைத் தவிர பாகிஸ்தான் அரசுக்கு வேறு வழியும் இல்லை
News:Yarlmuslim




Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment