பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து எந்தவொரு பெற்றோரும் இனி கவலைப்பட வேண்டியதில்லை. புதிதாக பல்கலைக்கு வருபவர்கள் மீது பகிடிவதை செயற்பாடுகளை மேற்கொள்ள இடமளிக்கப்படமாட்டாது என்று உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பகிடி வதையில் ஈடுபடுவோரின் பிரதான நோக்கம் புதிய மாணவர்களின் தன் நம்பிக்கை மற்றும் தனிப்பட்ட குணத்தை இல்லாமற்செய்வதாகும் என்று அவர் மேலும் கூறினார்.
இலங்கை இளைஞர்களில் திறமைவாய்ந்தவர்களே அரசாங்க பல்கலைக்கழகங்களுக்குள் நுழைகின்றனர். ஒவ்வொரு பட்டதாரிக்கும் அரசு வருடாந்தம் 2 1/2 இலட்ச ரூபாவை செலவிடுகிறது. அதேபோல் ஒவ்வொரு பிக்கு மாணவனுக்கும் 3 இலட்சம் ரூபா செலவிடப்படுகிறது. இவ்வாறு நாட்டின் எதிர்கால தலைவர்களை உருவாக்கி அரசாங்கம் பல கோடி ரூபாவை செலவிடுவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான செயற்பாட்டை பகிடி வதையில் ஈடுபடுவோர் பின்னோக்கி கொண்டு செல்கின்றனர். அதற்கு இடமளிக்கப்படமாட்டாது. பல்கலைக்கழக கல்வி முறையை சர்வதேச தரத்துக்கு முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று அமைச்சர் திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.
News:Yarlmuslim




Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment