Monday, May 9, 2011

மாதாந்தம் 50 சிறைக் கைதிகளுக்கு வீட்டு விடுமுறை வழங்கப் போகிறதாம் அரசாங்கம்

Best Blogger Tips

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு வீட்டு விடுமுறை மற்றும் அனுமதியுடன் கூடிய விடுமுறை வழங்கி விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்து ள்ளது. இந்த புதிய வேலைத்திட்டத்தின் கீழ் மாதாந்தம் 50 கைதிகள் வரை விடுதலை செய்வதற்கு எதிர்பார்ப்பதாக புனருத்தாபன மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ.திசாநாயக்க கூறினார்.

தண்டனைக் காலத்தில் அரைவாசியை முடித்துக்கொண்ட நல்ல ஒழுக்கம் கொண்டுள்ள கைதிகளுக்கு இப்புதிய முறையின் கீழ் குறிப்பிடத்தக்க நிவாரணம் கிடைக்கும். அனுமதிப் பத்திரத்துடன் கூடிய விடுமுறையை பெறும் கைதிகள் தமது வீடுகளுக்குச் சென்று சிறந்த பிரஜைகளாக சமூகத்தில்சேர்ந்துகொள்ள வேண்டும். அவர்களால் மீண்டும் ஒரு முறை தவறிழைக்கப்படமாட்டாது என அவர்கள் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும்.

தற்பொழுது தண்டனைபெறும் 12ஆயிரம் கைதிகள் சிறைச்சாலைகளில் இருப்பதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிடுகிறார். அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்படும் கால வரையறைக்குள் அக்கைதிகள் மீண்டும் ஒருமுறை தவறிழைத்தால் தண்டனை இரட்டிப்பாக வழங்கப்படும்.

வீட்டு விடுமுறையின் கீழ் 6 மாதங்களுக்கு அதிக பட்சமாக ஒரு வாரம் விடுமுறை கைதிகளுக்கு கிடைக்கும். வருடாந்தம் இருமுறை இவ்வாறான விடுமுறையை பெறமுடியும். மூன்று முறை அந்த விடுமுறை பெற்று வீடுகளுக்கு செல்லும் கைதிகள் மீண்டும் வந்து அனுமதிப் பத்திரத்துடனான விடுமுறையை பெறமுடியும்.

பெண் வன்புணர்வு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் ஆகிய குற்றங்களின் பேரில் தண்டனை பெறும் கைதிகளுக்கு இந்த வகையிலான வசதிகள் வழங்கப்படமாட்டாது. வீட்டுவிடுமுறை மற்றும் அனுமதியுடன் கூடிய விடுமுறையின் கீழான திட்டத்தை செயற்படுத்த புனருத்தாபன அமைச்சர் சந்திரசிறி கஜதீரவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment