Monday, May 9, 2011

சுப்பர் மார்க்கட்டில் ட்ரோலியை தானே தள்ளிச் சென்று எளிமையாக பொருட்களை வாங்கிய இளவரசி கேட்!

Best Blogger Tips
உலகமே பார்த்து ரசித்த திருமணம் முடிந்த கையோடு பிரிட்டனின் எதிர்கால மன்னர் வேலைக்குத் திரும்பிவிட்டார்.

எதிர்கால மகாராணியோ திருமணத்துக்கு முன்னரைப் போலவே அலைந்து திரிந்து பொருள் வாங்கக் கிளம்பிவிட்டார்.

பிரிட்டனின் ஏனைய குடும்பப் பெண்களைப் போலவே வருங்கால மகாராணி திருமதி வில்லியமும் தனது வாராந்த பொருள் கொள்வனவில் சர்வ சாதாரணமாக ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்டவை தான் இந்தப் படங்கள்.

எங்லஸி தீவில் உள்ள வெயிட் ரோஸ் என்ற சுப்பர்மார்க்கெட்டிற்கு இவர் வருகை தந்திருந்தார்.

சுபர்மார்க்கெட்டை வந்தடைந்ததும் தன்னுடன் கூட வந்திருந்த மெய்ப்பாதுகாவலரிடம் கார் சாவியைக் கொடுத்து விட்டு அவர் உள்ளே நுழைந்தார்.
எளிமையான முறையில் உடையணிந்திருந்த கேட் ஒரு சராசரி குடும்பப் பெண்போல் தனது ட்ரொலியை தானே தள்ளிச் சென்று அவர் தனக்குத் தேவையானவற்றை வாங்கினார்.

இடையில் அவர் இந்த சுப்பர்மார்க்கெட் ஊழியர்களிடம் சில பொருட்களைப் பற்றி விசாரிக்கத் தவறவும் இல்லை.
காரில் அவர் தானாகவே பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தததைக் கண்ட அங்குள்ள மக்கள் ஒரு பக்கம் தமது வருங்கால அரசியைப் பார்த்து ஆச்சரியமும் இன்னொரு பக்கம் ஆனந்தமும் அடைந்தனர்.

காரில் பொருட்களை ஏற்றிக் கொண்ட பின் வெற்று ட்ரொலியை அதற்கு உரிய இடத்தில் மீண்டும் கொண்டு வந்து வைத்துவிட்டே கேட் அங்கிருந்து புறப்பட்டார்.
இந்த கோடை காலத்தில் வில்லியம் தம்பதிகள் அமெரிக்காவின் ஹொலிவூட்டுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இளவரசர் என்ற ரீதியில் வில்லியம் அமெரிக்கா செல்லவுள்ளமை இதுவே முதற் தடவையாகும். கேட் இதற்கு முன் அமெரிக்கா சென்றதே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.






News:Manithan

0 comments:

Post a Comment