Monday, May 30, 2011

90 மில்லியன் டொலரை அபாராதமாக செலுத்த ஹொஸ்னி முபாராக் மீது உத்தரவு

Best Blogger Tips
இணையதளம் மற்றும் தொலைபேசி சேவைகளை முடக்கிய எகிப்து முன்னாள் ஜனாதிபதிக்கு 90 மில்லியன் டொலர் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. எகிப்து ஜனாதிபதியாக இருந்த ஹொஸ்னி முபாரக், பொதுமக்களின் போராட்டத்துக்கு பின்னர் கடந்த பெப்ரவரி 11ம் திகதி பதவி விலகினார். அவர் கைது செய்யப்பட்ட நிலையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 

தனக்கு எதிரான கலவரத்தின்போது, இணையதளம் மற்றும் தொலைபேசி சேவைகளை முடக்கி, நாட்டுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக முபாரக் மீது தொடரப்பட்ட வழக்கு, தலைநகர் கெய்ரோவில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.  இவ்வழக்கில், வருவாய் இழப்புக்கு நஷ்ட ஈடாக, முபாரக், அவரது ஆட்சியில் துணை பிரதமராக இருந்த அகமது நாசிப், உள்துறை அமைச்சராக இருந்த ஹபீப் அல்-அட்லி ஆகியோர் கூட்டாக 90 மில்லியன் டொலர் செலுத்த வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்

News:Yarlmuslim

0 comments:

Post a Comment