அனுராதபுரத்தில் இருந்து சிலாபம் முன்னேஸ்வரம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும்போதே ஆரச்சிகட்டுவை பிரதேசத்தில் பிரஸ்தாப வாகனம் பாதையை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் காரணமாக நால்வர் காயமுற்றுள்ளனர். வாகனத்தைச் செலுத்திய சாரதி, அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர், சிவிலியன்கள் இருவர் ஆகியோரே காயமடைந்துள்ளதாக சிலாபம் பொலிசில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிக வேகத்துடன் பயணித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகியதன் காரணமாகவே விபத்து நடைபெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் தற்போது சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment