எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 75 பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேல்மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி மைத்திரி குணரட்ன தாக்கல் செயதிருந்த மனுவொன்றை இன்று புதன்கிழமை விவாதத்துக்கு எடுத்து கொண்ட போதே கங்கொடவில மாவட்ட நீதவான் சம்ப ஜானகி விஜயரட்ன இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக ரவி கருணாநாயக்கவை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமித்தமையானது கட்சியின் யாப்புக்கு முரண்பட்டது எனவும் குறித்த நியமனத்தை ரத்து செய்யுமாறு கோரியும் சட்டத்தரணி மைத்திரி குணரட்ன குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்வதா இல்லையா என்பது குறித்தும் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிப்பது குறித்தும் பரிசீலனை செய்ய குறித்த நியமனம் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 75 பேருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 23ம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜராகி குறித்த நியமனம் குறித்து காரணங்களை தெளிவு படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது




Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment