ஐ.நா. நிபுணர்குழுவுக்கு எதிராக ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக தற்கொலைப் படைத்தாக்குதல் நடாத்தத் தயாராக இருப்பதாக அமைச்சர் மோ்வின் சில்வா வெளியிட்ட கருத்தை அவரது தனிப்பட்ட கருத்தென அரசாங்கம் நிராகரித்துள்ளது.
ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு பான் கீ மூன் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் துணிவாராயின் அவருக்கு எதிராக தனது தலைமையில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொள்வதற்காக குழுவொன்று தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் மோ்வின் சில்வா அண்மையில் அறிவித்திருந்தார்.
ஆயினும் அவரது கருத்தை அரசாங்கம் பெரிதாக கருத்தில் எடுக்கவில்லை என்று தெரிய வருகின்றது.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாடொன்றின் போது அமைச்சர் மோ்வின் சில்வா போன்றே ஐ.நா. அறிக்கைக்கு எதிராக கையொப்ப வேட்டையில் களம் இறங்கியிருக்கும் மற்றொரு அமைசசரான தனியார் போக்குவரத்துச் சேவை அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவிக்கையில், ஜனாதிபதிக்காக தற்கொலைப்படையை தயார் செய்து வைத்துள்ளதாக மேர்வின் சில்வா கூறிய கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாகும். இந்தக் கருத்துக்கும் அரசாங்கத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் நிபுணர்குழுவின் அறிக்கைக்கு எதிராக ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 18 பேரை தற்கொலைப்படையாக தயார் செய்து வைத்துள்ளதாக பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளாரே, அமைச்சர் மேர்வின் சில்வாவின் இந்த கருத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா என அமைச்சர் சி.பி.ரத்னாயக்கவிடம் ஊடகவியலாளர்கள் வினாத் தொடுத்தபோது அதனை அவர் மறுத்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டுள்ள கையெழுத்துக்களை வெசாக் பண்டிகை முடிவுற்ற பிறகு ஐ.நா சபைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment