நான் ஊமையல்ல, மிக விரைவில் உண்மைகளை வெளியிடுவேன் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணைக்காக நேற்று கடுங்காவலுக்கு மத்தியில் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட பின் மீண்டும் சிறைச்சாலைக்குத் திரும்பும் வழியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் தனது தொண்டையில் ஏற்பட்டுள்ள அசௌகரியம் காரணமாக தான் மௌனமாக இருக்க நோ்ந்துள்ளதாகவும், தொண்டையில் ஏற்பட்டுள்ள வியாதி சுகமானதும் தான் அனைத்து உண்மைகளையும் வெளியிடப் போவதாகவும் அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவின் தொண்டை மற்றும் நுரையீரலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக அவருக்கு தொடர்ந்தும் விசேட வைத்திய மருத்துவ நிபுணர்களின் சிகிச்சையைப் பெற்றுக் கொடுக்குமாறு பணித்துள்ள நீதிமன்றம், எதிர்வரும் 23ம் திகதி வரை வழக்கை ஒத்தி வைத்துள்ளது.
News:Lankasri



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment