பெர்லின் : "நாட்டின் அனைத்து அணுமின் நிலையங்களும், வரும் 2022ம் ஆண்டுக்குள் படிப்படியாக இழுத்து மூடப்படும்' என்று, ஜெர்மனியின் ஆளும் கூட்டணி அறிவித்துள்ளது. இதற்கு உற்பத்தி நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஜெர்மனியில், தற்போது 17 அணுமின் நிலையங்கள் உள்ளன. நாட்டுக்குத் தேவையான ஒட்டு மொத்த மின்சாரத்தில், 23 சதவீதம் இவற்றிலிருந்து பெறப்படுகிறது. ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்ட பின், ஜெர்மனியில் இயங்கி வந்த மிகப் பழைய ஏழு அணுமின் நிலையங்கள் மூடப்பட்டன. ஏற்கனவே ஒரு அணுமின் நிலையம் பல ஆண்டுகளாகச் செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அணுமின் நிலையங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடக்க ஆரம்பித்தன. நேற்று முன்தினமும் நாட்டின் பல பகுதிகளில் பெருமளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையடுத்து, அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல்லின் ஆளும் கட்சியான கிறிஸ்தவ குடியரசுக் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும், அணுமின் நிலையங்களின் எதிர்காலம் குறித்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டன.
அதில், வரும் 2022ம் ஆண்டுக்குள், நாட்டின் அனைத்து அணுமின் நிலையங்களையும் படிப்படியாக இழுத்து மூடுவது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டம் முடிந்த பின், சுற்றுச்சூழல் அமைச்சர் நார்பெர்ட் ரோயட்கென் இதை செய்தியாளர்களிடம் அறிவித்தார். ஏற்கனவே மூடப்பட்டவை ஏழு. செயல்படாத நிலையம் ஒன்று போக, ஆறு நிலையங்கள் 2011ம் ஆண்டுக்குள்ளும், புதிதாக துவங்கப்பட்ட மூன்று நிலையங்கள் 2022க்குள்ளும் படிப்படியாக மூடப்படும். அணுமின் நிலையங்கள் மூடப்படுவதால் ஏற்படும் மின்சார உற்பத்தி இழப்பு, வேறு வகைகளில் ஈடுகட்டப்படும். ஆளும் கூட்டணியின் இந்த முடிவுக்கு ஜெர்மனி பார்லிமென்டும், எதிர்க்கட்சியினரும் ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஜப்பான் நிலநடுக்கத்துக்குப் பின் ஏழு நிலையங்கள் மூடப்பட்டதற்கே, உற்பத்தித் துறை சார்ந்த பல நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த அறிவிப்புக்கு இன்னும் பலமான எதிர்ப்பு எழக் கூடும் என்று தெரிகிறது.

News:Dinamalar

Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment