Wednesday, May 11, 2011

அமெரிக்காவிடமிருந்து தப்பிய ஒஸாமாவின் மகன்

Best Blogger Tips
பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டின் மீது அமெரிக்கப்படைகள் நடத்திய தாக்குதலின் போது அங்கிருந்த பின்லேடனின் மகன்மாரில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பின்லேடனின் கடைசி மகனான 19 வயதான ஹம்ஸா என்பவரே இவ்வாறு தப்பிச் சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. அமெரிக்கத் தாக்குதலின் பின்லேடனின் மூன்று மனைவிமாரும் பல பிள்ளைகளும் தற்போது பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகளின் பாதுகாப்பில் உள்ளனர். 

ஆனால் அந்த வீட்டில் இருந்த பின்லேடன் குடும்பத்தின் முக்கிய நபரான ஹம்ஸா அங்கிருந்து தப்பியுள்ளார் என்பது இப்போது தான் தெரியவந்துள்ளது. ஹம்ஸாவுக்கு 14 வயதாக இருக்கும்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. 

பின்லேடனின் மனைவிமாரை பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரித்த போது தான் ஹம்ஸா பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளன. பின்லேடனின் 22 வயதான காலித் என்ற மகன் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

0 comments:

Post a Comment