Sunday, May 8, 2011

நிபுணர் குழு அறிக்கையை சரத் பொன்சேகா சாதகமாக பயன்படுத்துவார் என கோத்தபாய அச்சம்

Best Blogger Tips
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பிலான அறிக்கையை சரத் பொன்சேகா சாதகமாக பயன்படுத்திக் கொள்வார் என்ற அச்சத்தில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்ட மா அதிபர் காரியாலயத்தின் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
வெள்ளைக் கொடி வழக்கு குறித்த தகவல்கள் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அவ்வாறு குறித்த அறிக்கையை தமக்கு சாதகமாக சரத் பொன்சேகா பயன்படுத்திக் கொள்வது குறித்து அவதானமாக இருக்குமாறு பாதுகாப்பு செயலாளர் சட்ட மா அதிபரை கோரியுள்ளார்.
இதற்கிடையில் நேற்று முன் தினம் சரத் பொன்சேகா தமது வாக்குமூலத்தை வழங்குவதாக இருந்தது, எனினும் அவரது சட்டத்தரணி வெளிநாடு சென்றுள்ள நிலையில், அந்த வாக்குமூலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment