Sunday, May 8, 2011

இரண்டு கோடி தங்கத்தைக் கடத்திச் சென்ற இலங்கையர் ஏழு போ் இந்தியாவில் கைது

Best Blogger Tips

இரண்டு  கோடி பெறுமதியான தங்கக் கட்டிகளைக் கடத்திச் சென்றிருந்த இலங்கையர் ஏழு போ் இந்தியாவின் மும்பை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் வருமானப் புலனாய்வுத்துறையினர் பிரஸ்தாப ஏழு இலங்கையர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய இந்தியர் ஒருவரையும் கடந்த வெள்ளிக்கிழமை மும்பையின் ஹோட்டலொன்றில் வைத்துக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்களிடமிருந்து 84 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் பெறுமதி இரண்டு கோடி ரூபாவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களின் பாஸ்போர்ட்டைப் பரிசோதனை செய்தபோது அவர்கள் சுமார் 25 தடவைகளுக்கும் அதிகமாக இரு நாடுகளுக்கும் இடையில் பயணித்திருப்பது தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மீது இந்திய வருமான வரிச்சட்டத்தை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சர்வதேச கடத்தல் கும்பல்களுடன் தொடர்புகள் இருக்கின்றதா என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

0 comments:

Post a Comment