தமது பெற்றோரின் சம்பளத்தினை அதிகரிக்கக்கோரி பெருந்தோட்டப் பகுதி சிறுவர்கள் சுமார் 5000 தபாலட்டைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். தோட்டத்தொழிலாளர்களான தங்களுடைய பெற்றோர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கேட்டு சமூக நல நிறுவனத்தின் ஊடாக இந்தத் தபாலட்டைகளை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
எங்கள் வாழ்க்கை மேம்பட எங்கள் பெற்றோர்களின் சம்பளத்தை உயர்த்துங்கள். பெருந்தோட்டத்தில் வாழும் என்னைப் போன்ற சிறுவர்கள் கல்வியைத் தொடரவும் போஷாக்கான உணவை உட்கொள்ளவும் ஆரோக்கியமாக வாழவும் முடியாதுள்ளது. எனவே எங்கள் பெற்றோர்களாகிய தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை உயர்த்தித்தர ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்ற கோரிக்கையைத் தாங்கிய 5000 தபால் அட்டைகளை ஜனாதிபதிக்கு அஞ்சல் செய்தார்கள்.
சுமார் 300 சிறுவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்விற்கு எபோட்சிலி தோட்ட சிறுவர் கழகத் தலைவி செல்வி மலர் தலைமை தாங்கினார். வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் எங்கள் படிப்புச் செலவை ஈடு செய்ய முடியாமலுள்ளது. எனவே சிறுவர்களாகிய நாங்களே அனைத்து சிறுவர் கழகங்களையும் ஒருங்கிணைத்து இந்த அஞ்சல் அட்டைப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
News:Yarlmuslim




Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment