தற்போதைக்கு ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு கொழும்பில் காணியொன்றையும், வீடொன்றையும் பெற்றுக் கொடுப்பதற்கான அமைச்சரவை அனுமதியைப் பெற்றுத்தருமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்குப் பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சவேந்திர சில்வா இலங்கையில் இருக்கும் வரை ஊடகங்களை வளைத்துப் போட்டுக் கொண்டு தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ள முயன்றார். அதன் காரணமாகவே அவரை நான் நாட்டுக்கு வெளியில் அனுப்பினேன்.
அவருக்கு ஒரு அளவுக்கு மேல் உதவிகள் செய்ய முற்பட வேண்டாம். சரத் பொன்சேகா போன்று அவரும் ஒரு கட்டத்தில் அரசாங்கத்துக்கு எதிராக திரும்பி விடக் கூடியவர். எனவே அவரைப் பற்றி ஒரு கண்காணிப்பை வைத்துக் கொண்டிருப்பதே நல்லது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு இணங்க சரத் பொன்சேகாவை இராணுவத் தளபதியாக நியமிக்கப் போய் நடந்துள்ள விடயத்தை ஞாபகப்படுத்திப் பார்க்குமாறும் அவர் மேலும் ஞாபகப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் தர்க்கத்துக்கு முன் எதிர்வாதம் செய்ய முடியாத நிலையில் பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தலைகவிழ்ந்து மௌனமாக நின்று கொண்டிருந்ததாக அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
News:Lankasri



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment