எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் நாட்டுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு மாநிலத் தோ்தலில் அமோக வெற்றியீட்டி முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்திக்கு தொலைபேசி ஊடாக நன்றி தெரிவித்தபோதே பிரஸ்தாப அழைப்பையும் விடுத்துள்ளார்.
கடந்த 17ம் திகதி இரவு இருவருக்குமிடையிலான தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது. நீண்ட நேரம் வரை தொடர்ந்த அவர்களின் தொலைபேசி உரையாடலின் போது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தொடர்பான விடயங்கள் குறித்தே அதிகமாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளத்தக்கதான அதிகாரப் பகிர்வொன்றை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வழங்க வேண்டும் என்பதுடன், அதனை அனைத்துத் தரப்பினரதும் இணக்கப்பாட்டுடன் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் இருவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அத்துடன் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அழைப்பையேற்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மிக விரைவில் தமிழ்நாட்டுக்கான சுற்றுப் பயணமொன்றை மேற்கொள்ளவும் இணக்கம் தெரிவித்துள்ளார்.



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment