Tuesday, June 14, 2011

மது போதையில் காணப்பட்ட 8 மாணவ, மாணவியர் கைது

Best Blogger Tips
குருணாகல் - நிக்கவெரட்டிய பொலிஸார் மது அருந்தி போதை தலைக்கேரிய நிலையில் இருந்த ஆறு மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்கள் உட்பட 10 பேரை  இன்று செவ்வாய்கிழமை கைது செய்துள்ளனர்.

குருனாகல் நிக்கவெரட்டிய பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றை சேர்ந்த 10 மாணவ மாணவிகள் நிகவெரட்டிய ஆலியாவ காட்டுப் பகுதியில் மறைவான ஒருடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் கைது செய்யப்படும் போது ஆறு மாணவிகளும் இரண்டு மாணவர்களும் மதுபானம் அருந்தி போதைக்குள்ளாகிய நிலையில் இருந்துள்ளனர். பின்னர் அதிபர் மற்றும் பெற்றோர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து கடுமையாக எச்சரித்த பின்னர் பெற்றோரிடம் ஒப்படைத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
News:Yarlmuslim

0 comments:

Post a Comment