Tuesday, June 14, 2011

மீளக்குடியேறும் முஸ்லிம்களின் மத, கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும்

Best Blogger Tips
வடக்கில் மீள்குடியேறியுள்ள மக்களின் மத,கலாசார விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ள கைத்தொழில் வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் மத வழிபாட்டு தலங்கள் பிரதேசத்தின் நல்லுறவின் சின்னமாக இருக்க வேண்டுமெனவும் கூறினார்.

 மன்னார் மாந்தை ஆண்டாங்குளத்தில் ஜமிய்யத்துல் ஸபாப் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய பள்ளிவாசலை திறந்து வைக்கும் நிகழ்விலும் வட்டக்கண்டல் கிராமத்தில் பள்ளிவாசலுக்கான அடிக்கல் நடும் நிகழ்விலும் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி அப்துல் ரஷீத் தலைமையில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் கலந்து கொண்டர்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு மேலும் பேசுகையில், வடக்கிலிருந்து முஸ்லிம்களின் வெளியேற்றத்தால் மத வழிபாட்டு தலங்கள் முற்றாக அழிந்து போயுள்ளன.நல்லதொரு சமூக கட்டுப்பாட்டை தோற்றுவிக்கும் பணியில் மஸ்ஜிதுகள் இன்றியமையாதது.மஸ்ஜிதுகளின் தோற்றத்தால் பிரதேசம் செழுமையடைகின்றது.

சவுதியைச் சேர்ந்த தனவந்தர் ஒருவர் இவ்வாறான மஸ்ஜிதுகளை அமைத்து கொடுக்குமாறு நிதி உதவியினை செய்துள்ளார்.அவரது நல்வாழ்வுக்கு நாம் பிரார்த்தனைகளை செய்ய வேண்டும்.இறை இல்லங்கள் நல்லமுறையில் பரிபாலிக்கப்பட வேண்டும். எமது நோக்கம் சுவனந்தை அடைத்து கொள்வதே தவிர வேறு எதுவுமாக இருக்க முடியாது.பதவிகளை வைத்துக்கொண்டு மக்களுக்கு நல்ல பணிகளை ஆற்ற வேண்டும்.ஸபாப் நிறுவனமானது பல திட்டங்களை செய்து வருகின்றது.மக்கள் இடம்பெயர்வை சந்தித்த போது பல உதவிகளை அவர்களுக்காக செய்து கொடுத்தமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எதிர் காலத்திலம் இந்த நிறுவனம் பாதிக்கப்பட்டு மீள்குடியேறியுள்ள மக்கள் வாழும் பகுதிகளில் தமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
News:Yarlmuslim

0 comments:

Post a Comment